வார ராசி பலன் 18-08-2016 முதல் 24-08-2016 வரை (துலாம் முதல் மீனம் வரை)

By சந்திரசேகர பாரதி

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 11-ல் சூரியனும் புதனும் சுக்கிரனும் ராகுவும் உலவுவது சிறப்பாகும். நண்பர்கள் நலம் புரிவார்கள். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை கூடும். முக்கியஸ்தர்களின் சந்திப்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் லாபம் கிடைக்கும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறை சார்ந்தவர்களுக்கு வருவாய் கூடும். ஆராய்ச்சியாளர்கள் புகழ் பெறுவார்கள். 5-ல் கேதுவும் 12-ல் குருவும் உலவுவதால் மக்களால் மன வருத்தம் ஏற்படும். மறதியால் அவதிக்கு ஆளாக வேண்டிவரும். வயிறு, கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். 2-ல் செவ்வாயும் சனியும் இருப்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. பிறர் மனம் புண்படும்படி பேச வேண்டாம். குடும்ப நலனில் அக்கறை தேவை. மக்கள் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். மருத்துவச் செலவுகள் சற்று அதிகரிக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 18, 21, 22.

திசைகள்: வடக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: சாம்பல் நிறம், பச்சை, இளநீலம்.

எண்கள்: 1, 4, 5, 6.

பரிகாரம்: விநாயகரை வழிபடுவது நல்லது.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியனும் புதனும் ராகுவும் 11-ல் குருவும் உலவுவதால் நல்ல தகவல் வந்து சேரும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு கூடும். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும். மக்களால் அனுகூலம் உண்டாகும். தனவந்தர்கள் சகாயம் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெற வாய்ப்பு உண்டாகும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு லாபம் வரும். குடும்ப நலம் திருப்தி தரும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உண்டாகும். பரம்பரையாகச் செய்து வரும் தொழில் விருத்தி அடையும். புதிய பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். பொன்னும் பொருளும் சேரும். ஊதிய உயர்வு பெற வாய்ப்பு உண்டாகும். பொருளாதார நெருக்கடி விலகும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் நிச்சயம் கிடைக்கும். அலைச்சல் வீண்போகாது. வேலையில்லாதவர்கள் தகுந்ததொரு வாய்ப்பைப் பெறுவார்கள். குருவருளும் திருவருளும் கிட்டும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 18, 21, 22.

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு, வடக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: பச்சை, ஆரஞ்சு, வெண்சாம்பல் நிறம், பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 4, 5.

பரிகாரம்: சனியையும் ஆஞ்சநேயரையும் வழிபடுவது நல்லது.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 9-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். விருந்துபசாரங்களில் ஈடுபாடு உண்டாகும். பேச்சில் திறமை வெளிப்படும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் வீண் செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். சிக்கன நடவடிக்கை தேவை. கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளவும். தந்தை நலனில் கவனம் தேவை. இயந்திரப் பணியாளர்களும் பொறியாளர்களும் விழிப்புடன் செயல்பட்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். கண், கால் பாதம் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 18, 21, 22.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை.

எண்கள்: 6, 7.

பரிகாரம்: செவ்வாய், சனி ஆகியோருக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் சுக்கிரனும் 9-ல் குருவும் 11-ல் செவ்வாயும், சனியும் உலவுவதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். பண நடமாட்டம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் வளர்ச்சி காணலாம். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். நல்ல தகவல் வந்து சேரும். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். நல்லவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். தெய்வப் பணிகளிலும் தர்மப் பணிகளிலும் ஈடுபாடு கூடும். பெற்றோரால் மக்களுக்கும் மக்களால் பெற்றோருக்கும் நலம் உண்டாகும். நிலம், மனை, வீடு வாங்கலாம். சமுதாய நலப் பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றமான பாதை தெரியவரும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிக்கும். சுரங்கப் பணியாளர்கள், ஆலைப் பணியாளர்கள் ஆகியோர் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 18, 21, 22.

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, வடகிழக்கு, தெற்கு.

நிறங்கள்: நீலம், பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6, 8, 9.

பரிகாரம்: ராகு, கேது, சூரியன் ஆகியோருக்கு அர்ச்சனை செய்யவும்.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாயும் சனியும் உலவுவது சிறப்பாகும். எடுத்த காரியங்களில் எப்பாடுபட்டாவது வெற்றி பெறுவீர்கள். இயந்திரங்கள், எரிபொருட்கள், கட்டிடப் பொருட்கள், தாதுப் பொருட்கள் லாபம் தரும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். புதிய சொத்துக்கள் சேரும். சொத்துக்கள் மூலம் வருவாயும் கிடைத்துவரும். உடன்பிறந்தவர்களாலும், பணியாளர்களாலும் நன்மை உண்டாகும். ஜன்ம ராசியில் கேதுவும், 7-ல் சூரியன், புதன், சுக்கிரன், ராகுவும் உலவுவதால் உடல் நலனில் கவனம் தேவைப்படும். தம்பதியினரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விட்டுக் கொடுத்துப் பழகி வருவது நல்லது. கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. குரு 8-ல் உலவுவதால் பொருளாதாரப் பிரச்சினை ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 18 (பிற்பகல்), 21, 22.

திசைகள்: தெற்கு, மேற்கு.

நிறங்கள்: சிவப்பு, கருநீலம்.

எண்கள்: 8, 9 .

பரிகாரம்: குருவுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடவும். நாகரை வழிபடவும்.

மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் புதனும் ராகுவும் 7-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். மக்களால் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்புள்ள தொழில் அபிவிருத்தி அடையும். புதியவர்களின் தொடர்பும் அதனால் நன்மையும் ஏற்படும். அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்கள், நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள். எலக்ட் ரானிக், கம்ப்யூட்டர் துறைகள் லாபம் தரும். புதிய கூட்டாளிகள் வந்து சேருவார்கள். பகுதி நேர உத்தியோகம் அமையும். சுக்கிரன், 6-ல் இருப்பதால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 21, 22.

திசைகள்: வடக்கு, தென்மேற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: பச்சை, புகைநிறம், பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 4, 5, 9

பரிகாரம்: ஏழைப் பெண்களுக்கு உதவி செய்யவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

14 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்