துலாம் ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு அதிபதி சுக்கிரன் 12-ஆமிடத்தில் செவ்வாய், ராகு ஆகியோருடன் கூடியிருப்பது சிறுகுறை. ஜன்மராசியில் சூரியன் உலவுவதும் சிறப்பாகாது. இதனால் உடல் நலம் பாதிக்கும். தலை, கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். கைப்பொருளை இழக்கவும் நேரலாம்; பாதுகாத்து வைத்துக் கொள்வது நல்லது.
கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். பயணத்தின்போது விழிப்பு தேவை. பதற்றம் கூடாது. நிதானம் அவசியம். இயந்திரப்பணியாளர்கள் பொறுப்புடன் காரியமாற்றவேண்டும். குருபலம் இருப்பதால் புத்திசாலித்தனம் நிறைந்திருக்கும். அதனால் பிரச்சினைகளைச் சமாளித்து விடுவீர்கள். ஜன்ம ராசியில் புதன் உலவினாலும் கூட தர்மப்பணிகளிலும் தெய்வப்பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 5, 6, 11.
திசைகள்: வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், இள நீலம், வெண்மை, பொன் நிறம்.
எண்கள்: 3, 6, 7.
பரிகாரம்: சூரியன், செவ்வாய், ராகு ஆகியோருக்கு அர்ச்சனை செய்வது நல்லது. துர்க்கை அம்மனை வழிபடவும்.
விருச்சிக ராசி வாசகர்களே!
உங்கள் ராசிநாதன் செவ்வாய் சுக்கிரன், ராகு ஆகியோருடன் கூடி 11-ல் இருப்பது விசேடமாகும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். மனத்துணிவு கூடும். எதிர்ப்புகள் விலகும். போட்டிகளிலும், பந்தயங்களிலும், வழக்கிலும், விளையாட்டிலும் வெற்றி கிடைக்கும். செந்நிறப்பொருட்கள் லாபம் தரும். இயந்திரங்கள், வெடிப்பொருட்கள், மின்சாதனங்கள், தளவாடங்களால் லாபம் கிடைக்கும். பயணத்தொழிலில் வளர்ச்சி காணலாம்.
அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் ஆதாயம் வந்து சேரும். கலைஞர்களுக்கு வளர்ச்சி தெரியவரும். வாரப் பின்பகுதியில் பெற்றோர் நலனில் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் முழுக்கவனம் தேவை. அரசியல், நிர்வாகம், கணிதம், எழுத்து துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு குறுக்கீடுகள் முளைக்கும். கண் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். அரசு அபராதம் கட்ட வேண்டிவரும். உறவினர்களாலும் நண்பர்களாலும் செலவுகள் கூடும். சிக்கனம் அவசியம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 5, 6, 8, 9 (பகல்).
திசைகள்: தென்மேற்கு, தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, வெண்சாம்பல் நிறம், இளநீலம்.
எண்கள்: 4, 6, 9.
பரிகாரம்: சூரிய வழிபாடு நலம் தரும். ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும்.
தனுசு ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 9-ல் குருவும், 10-ல் செவ்வாய், ராகு ஆகியோரும், 11-ல் சூரியன், புதன் ஆகியோரும் உலவுவது சிறப்பாகும். வாரம் முழுவதும் சந்திரனின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். காடு, மலைகளில் பயணம் செய்யலாம். பண நடமாட்டம் திருப்திகரமாக இருந்துவரும்.
ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்களில் ஈடுபட்டு பயன் பெறுவீர்கள். மருத்துவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். ஆசிரியர்கள் போற்றப்படுவார்கள். வானியல், ஜோதிடம், விஞ்ஞானம், ஆன்மிகத் துறையில் ஆக்கம் உண்டு. பயணத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். புதிய பதவி, பட்டங்கள் வந்து சேரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்பு கூடிவரும். சுப காரியங்கள் நிகழும். நண்பர்கள், உறவினர்கள், பெரியோர்கள் சந்திப்பு பயன்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 5, 6, 8, 9, 11.
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: பச்சை, புகை நிறம். வெண்மை, பொன் நிறம், சிவப்பு.
எண்கள்: 1, 3, 4, 5, 9.
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபடவும்.
மகர ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும் 9-ல் சுக்கிரனும் 10-ல் சூரியனும் புதனும் 11-ல் ராசிநாதன் சனியும் உலவுவது சிறப்பாகும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் ஏற்படும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு வாய்ப்பு கூடிவரும். வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி, பட்டம் கிடைக்கும். அரசாங்கத்தாரால் அனுகூலம் ஏற்படும்.
வியாபார முன்னேற்ற நடவடிக்கைகள் கைகூடும். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகுத் துறையில் லாபம் உண்டு. எதிர்ப்புக்கள் குறையும். தந்தையால் அளவோடு அனுகூலம் ஏற்படும். மக்கள் நலனில் கவனம் தேவை. பொருளாதார விஷயத்தில் தொழில் புரிபவர்களும், ஆசிரியர்களும் விழிப்புடன் இருத்தல் அவசியம். உடன்பிறந்தவர்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்:, நவம்பர் 8, 9, 11.
திசைகள்: மேற்கு, வடமேற்கு, வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: பச்சை, நீலம், மெரூன்.
எண்கள்: 1, 5, 6, 7, 8.
பரிகாரம்: குருப்பிரீதி செய்வது நல்லது. குரு ஸ்தானத்தில் உள்ளவர்களை வணங்கி அவர்களது வாழ்த்துக்களைப் பெறவும்.
கும்ப ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 7-ல் குருவும் 10-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். வாழ்வில் முன்னேற்றம் காண வாய்ப்புக்கள் கூடிவரும். 8-ல் சுக்கிரனும், 9-ல் புதனும் 11-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். முக்கியமான காரியங்கள் இப்போது நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். கலைஞர்களுக்கு நலம் உண்டாகும். வியாபாரிகளின் திறமை பளிச்சிடும். வார நடுப்பகுதியில் சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம்.
எச்சரிக்கை தேவை. எக்காரியத்திலும் பதற்றம் வேண்டாம். நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது. வீண்வம்பு, சண்டைகளைத் தவிர்க்கவும். உடன்பிறந்தவர்களால் மனஅமைதி குறையும். இயந்திரங்கள், எரிபொருட்கள், வாகனங்கள், வெடிப்பொருட்கள் ஆகியவற்றின்பக்கம் நெருங்கும்போது விழிப்பு தேவை. புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். விஷத்தாலும் விஷ ஜந்துக்களாலும் பாதிக்கப்பட நேரலாம். குருபலம் இருப்பதால் கவலை வேண்டாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 5, 6, 11.
திசைகள்: வடகிழக்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: பச்சை, நீலம், பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 6, 8 .
பரிகாரம்: செவ்வாய், ராகு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது அவசியமாகும். துர்க்கை, முருகனை வழிபடவும்.
மீன ராசி வாசகர்களே!
உங்கள் ஜன்ம ராசிக்கு 8-ல் புதன் உலவுவது ஒன்றே சிறப்பாகும். இதர முக்கியமான கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் சிறு இடர்பாடுகள் ஏற்படவே செய்யும். மக்கள் நலனிலும் வாழ்க்கைத்துணை நலனிலும் கவனம் தேவை. எதிர்ப்புக்கள் அதிகரிக்கும். மனத்தில் அமைதி குறையும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காண்பது அரிதாகும். தேவைகளைச் சமாளிக்கக் கடன் வாங்கலாம். பயணத்தில் பாதுகாப்பு தேவை. அரசாங்கத்தாராலும் மேலதிகாரிகளாலும் சங்கடங்கள் சூழும். தந்தைநலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். பிறரிடம் கோபப்படாமல் நிதானமாகப் பேசிப் பழகுவதன் மூலம் அவர்களது அதிருப்திக்கு ஆளாகாமல் தப்பலாம். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. கணிதம், விஞ்ஞானம், வியாபாரம், பத்திரிகை துறைகளைச் சார்ந்தவர்களுக்குப் புதன்பலத்தால் நலம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 5, 6, 8, 9
திசை: வடக்கு.
நிறங்கள்: பச்சை, பிரெளன், ரோஜாநிறம்.
எண்: 5
பரிகாரம்:கோளறு திருப்பதிகம் வாசிக்கவும். அருகில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயம் சென்று வழிபடவும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
11 hours ago
ஆன்மிகம்
12 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago