துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 3-ல் அமர்ந்து, குருவின் பார்வையைப் பெறுவது சிறப்பாகும். கேது 6-ல் உலவுவதும் குறிப்பிடத்தக்கது. இதனால் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். பொருள்வரவு கூடும். போட்டிகளில் வெற்றி கிட்டும். கலைத்துறைகளைச் சார்ந்தவர்களுக்கு செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். பெண்களுக்கு மன உற்சாகம் கூடும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். எதிர்ப்புகளின் கரம் வலுக்குறையும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். 16-ம் தேதி முதல் சூரியன் 3-ம் இடம் மாறுவதால் அரசு உதவி கிடைக்கும்.
மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். 16-ம் தேதி முதல் சனி 2-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. ஏழரைச் சனியின் கடைசிக் காலமான பாதச் சனியின் நேரமிது. குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும். வீண்வம்பு, வழக்குகளில் ஈடுபடலாகாது. யாருக்கும் வாக்கு கொடுக்கவேண்டாம். ஜாமீன் கொடுக்கவும் கூடாது. என்றாலும் சனி உங்கள் ராசிக்கு யோகக்காரன் என்பதால் மோசமான நிலை என்று ஏதும் ஏற்பட்டுவிடாது. பொருளாதார நிலை உயரும். நிலபுலங்களால் வருவாய் கிடைக்கும். 17-ம் தேதி முதல் குரு வக்கிரம் பெறுவது சிறப்பாகாது. செய்து வரும் தொழிலில் அதிக கவனம் செலுத்தவும். வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 11, 13, 17.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, வான் நீலம், பொன் நிறம்.
எண்கள்: 3, 6, 7.
பரிகாரம்: ராகு கால துர்கா பூஜை செய்வது நல்லது. திருமாலை வழிபடவும்.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் செவ்வாய் 3-ல் அதிபலம் பெற்றிருப்பதாலும், புதன், சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதாலும் சுயபலம் கூடும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். வழக்கிலும், விளையாட்டு, விநோதங்களும், வெற்றி கிட்டும். நிலபுலங்கள் சேரும். சொத்துக்களால் வருவாயும் கிடைத்துவரும். வியாபாரம் பெருகும். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும்.
கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். பயணத்தின்மூலம் முக்கியமானதொரு எண்ணம் நிறைவேறும். போக்குவரத்துச் சாதனங்களால் ஆதாயம் கிடைக்கும். ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்பு உயரும். 16-ம் தேதி முதல் சூரியன் 2ம் இடம் மாறுவதும், சனி ஜன்ம ராசிக்கு மாறுவதும் சிறப்பாகாது. உழைப்பும் அலைச்சலும் அதிகமாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும். 17-ஆம் தேதி முதல் குரு வக்கிர நிலை பெறுவதால் தந்தையாலும் மக்களாலும் நலம் உண்டாகும். பல வழிகளில் வருவாய் வந்து சேரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 13, 16.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு, தெற்கு.
நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், இளநீலம், சிவப்பு.
எண்கள்: 4, 5, 6, 9.
பரிகாரம்: சனி, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபடவும்.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசியில் சுக்கிரனும் 9-ல் குரு 10-ல் ராகு 11-ல் சனியும் சஞ்சரிப்பதால் தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். கலைத்துறை ஊக்கம் தரும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கை நிகழும். பயணத்தால் ஒரு காரியம் நிறைவேறும். தொழிலாளர்களது நிலை உயரும். 12-ல் சூரியனும், 2-ல் செவ்வாயும் இருப்பதால் கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.
அக்கம்பக்கத்தாரிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. வீண்சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும். 16-ம் தேதி முதல் சூரியன் உங்கள் ஜன்ம ராசிக்கும், சனி 12-ம் இடத்துக்கும் மாறுவது சிறப்பாகாது. உஷ்ணாதிக்கம் கூடும். கண் உபத்திரவம் ஏற்படும். பொருளாதாரப் பிரச்சினைகள் தலைதூக்கும். உடன்பிறந்தவர்களால் தொல்லைகள் சூழும். இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தை விட்டுச் சிலர் வெளியூர், வெளிநாடு செல்ல வேண்டிவரும். 17-ம் தேதிமுதல் குரு வக்கிர நிலை பெறுவதால் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 13, 16, 17.
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, மேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: பொன் நிறம், கருநீலம், கறுப்பு, இளநீலம், வெண்மை.
எண்கள்: 3, 4, 6, 8.
பரிகாரம்: கேது, சூரியன் ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது. பார்வையற்றவர்களுக்கு உதவுவது நல்லது.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும் 10-ல் சனியும் 11-ல் சூரியனும் 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். நல்லவர்கள் உங்களுக்கு உதவி புரிய முன்வருவார்கள். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். உழைப்பு வீண்போகாது. அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். கலைத்துறை ஊக்கம் தரும். முக்கியஸ்தர்களது சந்திப்பு நிகழும். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் சேரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். 16-ம் தேதி முதல் சூரியன் 12-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. செலவுகள் சற்று அதிகரிக்கும். தந்தையாலும், அரசாங்கத்தாராலும் சிறுசிறு இடர்ப்பாடுகள் ஏற்படும். புதன் 12-ல் இருப்பதால் வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. 16-ம் தேதி முதல் சனி 11-ம் இடம் மாறுவது விசேடமாகும். முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். ஆதாயம் கூடும். பொதுப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். இயந்திரங்கள், தாதுப்பொருட்கள், சுரங்கப்பொருட்கள் ஆகியவற்றால் ஆதாயம் கிடைக்கும். கறுப்பு நிறப்பொருட்களால் அதிக லாபம் பெற வாய்ப்புக் கூடிவரும். 17-ம் தேதி முதல் குரு வக்கிரம் பெறுவதால் பொருள்வரவு அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் உண்டாகும். மக்கள் நலம் சீராகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 11, 16, 17.
திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை, மெரூன், ஆரஞ்சு.
எண்கள்: 1, 6, 7, 8.
பரிகாரம்: செவ்வாய்க்கும் குருவுக்கும் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது. ஸ்ரீமகாவிஷ்ணுவை வழிபடவும்.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 7-ல் குருவும் 10-ம் இடத்தில் சூரியனும் 11-ல் புதன், சுக்கிரன் ஆகியோரும் உலவுவது சிறப்பாகும். எதிர்ப்புகள் கட்டுக்குள் அடங்கியிருக்கும். பணப் புழக்கம் அதிகமாகும். நல்லவர்கள் உங்களுக்கு உதவி புரிய முன்வருவார்கள். கணவன்-மனைவி உறவு நிலை திருப்தி தரும். மக்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு அதிகமாகும். முக்கியஸ்தர்கள் சந்திப்பு நிகழும். அரசு ஆதரவு கிடைக்கும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். பெண்களுக்கு மனமகிழ்ச்சி பெருகும். வாழ்க்கை வசதிகள் கூடும்.
16-ம் தேதி முதல் சூரியன் 11-ம் இடம் மாறுவது, சனி 10-ம் இடம் மாறுவதும் விசேடமாகும். தொழிலில் வளர்ச்சி காணலாம். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். மூத்த சகோதர, சகோதரிகளால் நலம் உண்டாகும். 17-ம் தேதி முதல் குரு வக்கிரம் பெறுவது சிறப்பாகாது. மக்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். 2-ல் கேதுவும் 8-ல் ராகுவும் உலவுவதால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். புதியவர்களிடம் விழிப்புத் தேவை. வாரப்பின்பகுதியில் பயணம் தவிர்ப்பது நல்லது. எதிலும் நிதானமாக யோசித்து ஈடுபடுவது அவசியமாகும். பதற்றம் அடியோடு கூடாது.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 11, 13.
திசைகள்: வடகிழக்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: பொன்நிறம், பச்சை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 5, 6, 8.
பரிகாரம்: துர்கை, விநாயகர், சுப்பிரமணியர், நாகரை வழிபடுவது நல்லது.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 10-ல் புதனும் 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிரிகள் அடங்குவார்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைத்துவரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். மாணவர்களது நிலை உயரும். சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். பாராட்டுகளும் பரிசுகளும் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிட்டும்.
16-ம் தேதி முதல் சூரியன் 10-ம் இடம் மாறுவதால் அரசு உதவி கிடைக்கும். நிர்வாக ஆற்றல் வெளிப்படும். 16-ம் தேதி முதல் சனி 9-ம் இடம் மாறுவதால் இதுவரையிலும் அஷ்டமச் சனியால் பட்ட துன்பங்களும் துயரங்களும் விலகும். 17-ம் தேதி முதல் குரு வக்கிரம் பெறுவதால் பணவரவு அதிகமாகும். உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் அனுகூலம் உண்டாகும். ஜன்ம ராசியில் கேதுவும், 7-ல் ராகுவும் இருப்பதால் புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை. பயணத்தின்போது விழிப்புடன் இருப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 11, 13, 16.
திசைகள்: தெற்கு, வடக்கு.
நிறங்கள்: கருஞ்சிவப்பு, பச்சை.
எண்கள்: 5, 9.
பரிகாரம்: குரு, சனி, ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது. துர்கையம்மன், தட்சிணாமூர்த்தியை வழிபட்டுவருவது நல்லது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
13 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago