வார ராசி பலன் 04-08-2016 முதல் 10-08-2016 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

By சந்திரசேகர பாரதி

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும், 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பு. கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். பண வரவு சீராக இருந்து வரும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். ஆன்மிகவாதிகள், அறநிலையப் பணியாளர்கள், ஜோதிடர்கள் வளர்ச்சி காண்பார்கள். கணவன், மனைவி உறவு நிலை திருப்தி தரும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மனத்தெளிவு பிறக்கும். இதர கிரகங்களின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் பிள்ளைகளாலும், உடன்பிறந்தவர்களாலும், வேலையாட்களாலும் சங்கடம் உண்டாகும். பெரியவர்கள், மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது அவசியம். வயிறு, மறைமுக உறுப்புகள் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 4, 7, 8, 10 (காலை).

திசைகள்: தென் கிழக்கு, வட மேற்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, இள நீலம்.

எண்கள்: 6, 7.‎

பரிகாரம்: குரு, தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும், 4-ல் புதனும்; சுக்கிரனும், 5-ல் குருவும், 10-ல் கேதுவும் உலவுவது நல்லது. புதிய பொருட்களும் சொத்துகளும் சேரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். பணப்புழக்கம் திருப்தி தரும். பிள்ளைகளாம், பெற்றோராலும் நலம் உண்டாகும். புதிய பதவி, பட்டங்கள் தேடிவரும். அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் ஈடுபாடு கூடும். மாணவர்களது நிலை உயரும். மாதர்களது எண்ணம் ஈடேறும். நிர்வாகத் திறமை வெளிப்படும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். 4-ல் ராகு, 7-ல் செவ்வாய், சனி ஆகியோர் உலவுவதால் கெட்டவர்களின் சகவாசத்தைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 4, 7, 8, 10 (காலை).

திசைகள்: வட மேற்கு, தென் கிழக்கு, வடக்கு, வட கிழக்கு.

நிறங்கள்: மெரூன்,வெண்மை, இள நீலம், பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 5, 6, 7.

பரிகாரம்: துர்க்கையம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி, குங்குமார்ச்சனை செய்வது நல்லது.

மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும்; ராகுவும், 6-ல் செவ்வாயும்; சனியும் உலவுவது சிறப்பு. முயற்சி வீண்போகாது. உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். பயணம் சம்பந்தமான காரியங்கள் லாபம் தரும். இயந்திரப்பணியாளர்கள், இன்ஜினீயர்கள் நிலை உயரப் பெறுவார்கள். நண்பர்கள், உறவினர்களால் நல்லதும் அல்லாததும் கலந்த பலன்கள் ஏற்படும். மக்கள் நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். செய்து வரும் தொழிலில் முன்னேற்றம் காணலாம். சுப காரியச் செலவுகள் சற்று அதிகரிக்கும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள வாய்ப்பு உண்டாகும். வாழ்க்கைத்துணைவரால் ஓரளவு நலம் ஏற்படும். தந்தை நலனில் அக்கறை தேவை. வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 4, 7, 8, 10 (காலை).

திசைகள்: தென் மேற்கு, தென் கிழக்கு.

நிறங்கள்: புகை நிறம், வெண்மை, இள நீலம்.

எண்கள்: 4, 6, 9.

பரிகாரம்: ஏழை மாணவர்களுக்கு உதவவும்.

கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும்; சுக்கிரனும் உலவுவது நல்லது. பேச்சாற்றல் கூடும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, விழாக்கள்; கேளிக்கை; உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். சொத்துகளால் வருவாய் கிடைக்கும். வியாபாரம் வளர்ச்சி பெறும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் புகழ் பெறுவார்கள். கலைஞர்களது எண்ணம் ஈடேறும். மாதர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். முக்கியமான ஆசைகள் ஒன்றிரண்டு இப்போது நிறைவேறும். உஷ்ணாதிக்கத்தால் உடல் நலம் பாதிக்கும். காது, வயிறு சம்பந்தமான உபாதைகளும் ஏற்படும். கவனம் தேவை. முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை நம்பி ஏமாற வேண்டாம். பெரியவர்கள், மேலதிகாரிகளிடம் பணிவோடு நடந்து கொள்வது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 4, 7, 8, 10 (காலை).

திசைகள்: வடக்கு, தென் கிழக்கு.

நிறங்கள்: வெண்மை, பச்சை, இள நீலம்.

எண்கள்: 5, 6, 9.

பரிகாரம்: துர்க்கை, தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசியில் சுக்கிரனும், 2-ல் குருவும் உலவுவது சிறப்பு. எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். செல்வாக்கு உயரும். தோற்றப்பொலிவு கூடும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றின் சேர்க்கை நிகழும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். பேச்சாற்றலால் மற்றவர்களைக் கவருவீர்கள். பண வரவு அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். அதிர்ஷ்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மதபோதகர்கள், மேடைப் பேச்சாளர்கள், சட்ட வல்லுனர்கள் ஆகியோர் நிலை உயரப் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்னைகள் விலகி, முன்னேற்றமான சூழ்நிலை உதயமாகும். நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்களாலும், மக்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் ஏற்படும். அலைச்சல் வீண் போகாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 4, 7, 8, 10 (காலை).

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: இள நீலம், வெண்மை, பொன் நிறம்.

எண்கள்: 3, 6.

பரிகாரம்: பராசக்தியை வழிபடுவது நல்லது.

கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும்; சனியும், 6-ல் கேதுவும், 11-ல் சூரியனும், 12-ல் சுக்கிரனும் உலவுகிறார்கள். பொருள் வரவைக் காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. பயணத்தின்போது விழிப்புடன் இருக்கவும். வீண்வம்பு கூடாது. புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வாரப் பின்பகுதியில் பண வரவு சற்று அதிகரிக்கும். குடும்ப நலம் திருப்தி தரும். அரசியல், நிர்வாகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். அலைச்சல் சற்று அதிகரிக்கும். மக்களாலும், மனைவியாலும், தந்தையாலும் நலம் உண்டாகும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். இயந்திரப்பணியாளர்களுக்கு சுபிட்சம் கூடும். நிலபுலங்கள் லாபம் தரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 7, 8, 10 (காலை).

திசைகள்: கிழக்கு, தென் கிழக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, வெண்மை, இள நீலம்.

எண்கள்: 1, 6, 7, 9.

பரிகாரம்: மகாவிஷ்ணுவை வழிபடுவது நல்லது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

14 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்