துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 11-ல் ராகுவும், 12-ல் வக்கிர குருவும் உலவுவதால் பொருளாதார நிலை சீராகவே இருந்துவரும். எடுத்த காரியங்களில் அரும்பாடுபட்டு வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் இருந்துவரும். வீண்வம்பு கூடாது. பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. புதியவர்களின் நட்பு கிடைக்கும். அதனால் அனுகூலமும் உண்டாகும். சிறுபயணம் ஒன்றை மேற்கொள்ள நேரலாம். மக்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் மன அமைதி குறையும். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கூட்டாகத் தொழில் புரிபவர்கள் பங்குதாரர்களிடம் சுமுகமாகப் பழகுவதன் மூலம் பிரிவினைக்கு ஆளாகாமல் தப்பலாம்.
இயந்திரங்கள், எரிபொருட்கள், ஆயுதங்கள், மின் சாதனங்கள், வெடிபொருட்கள் ஆகியவற்றின் பக்கம் நெருங்கும்போது பாதுகாப்பு அவசியமாகும். விளையாட்டுகளில் ஈடுபடும்போது எச்சரிக்கை தேவை. வீண் ஆடம்பரம் கூடாது. வியாபாரிகள், கலைஞர்கள், தொழிலாளர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். 15-ம் தேதி முதல் சூரியன் 8-ம் இடத்திற்கு மாறுவது குறை. சங்கடங்கள் மேலும் அதிகரிக்கும். தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். அரசாங்கத்தாரால் பிரச்னைகள் சூழும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 12, 14, 17.
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: சாம்பல்நிறம், பொன் நிறம்.
எண்கள்: 3, 4.
பரிகாரம்: சனிப் பிரீதி செய்து கொள்ளவும்.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 6-ல் சூரியனும் புதனும் 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். சுபச் செலவுகள் மேற்கொள்ள வேண்டிவரும். அலைச்சலும் உழைப்பும் அதிகமாகும். அதற்கான பயனும் கிடைக்கும். குடும்ப நலம் சீராக இருந்துவரும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். மாதர்களது எண்ணம் ஈடேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். பெண்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும்.
புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறையில் வருவாய் கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். வாரப் பின்பகுதியில் பண வரவு அதிகரிக்கும். ஊகவணிகம், கொடுக்கல் வாங்கல் இனங்கள் லாபம் தரும். ஜன்ம ராசியில் வக்கிரச் சனியும் 4-ல் கேதுவும் இருப்பதால் உடல் நலனில் கவனம் தேவை. தாய் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டிவரும். நிலபுலங்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்பு தேவை. வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 12, 14, 17.
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், பொன் நிறம், சிவப்பு, வெண்மை.
எண்கள்: 1, 3, 4, 5, 6.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரைத் தொடர்ந்து வழிபடவும். ஹனுமன் சாலீஸா சொல்வதும் கேட்பதும் நல்லது.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 4-ல் சுக்கிரனும் 5-ல் சூரியனும் 6-ல் செவ்வாயும், 10-ல் வக்கிர குருவும் உலவுவது நல்லது. முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். பண வரவு அதிகமாகும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். பெண்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். புதிய பொருட்கள் சேரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடுகூடும். புதிய பதவிகள் வந்து சேரும். எதிரிகளின் கரம் வலுக்குறையும். வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும்.
இயந்திரப்பணிகள் லாபம் தரும். புதிய சொத்துக்கள் சேரும். சொத்துக்கள் மூலம் வருவாய் கிடைக்கும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். பிரச்னைகள் எளிதில் தீரும். 15-ம் தேதி முதல் சூரியன் 6-ம் இடத்திற்கு மாறுவதால் அரசுப்பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை அதிகமாகும். முக்கியஸ்தர்களது சந்திப்பு நிகழும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் லாபம் தரும். ,
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 14, 17.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை, சிவப்பு.
எண்கள்: 1, 3, 5, 6, 7, 9.
பரிகாரம்: சனிபகவானையும், ஆஞ்சநேயரையும் வழிபடுவது நல்லது.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 4-ல் புதனும் 9-ல் குருவும் 11-ல் சனியும் உலவுவது நல்லது. எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். எதிர்ப்புக்கள் விலகும். பண நடமாட்டம் அதிகமாகும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு அதிகமாகும். தெய்வப் பணிகள் நிறைவேறும். உழைப்பாளர்கள் வளர்ச்சி காண்பார்கள்.
பொது நலப்பணியாளர்களுக்கு அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு கூடிவரும். இல்லறம் சிறக்கும். வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும். 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் இருப்பதால் இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்படும். புதியவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. விஷ பயம் ஏற்படும். பயணத்தின்போது விழிப்புடன் இருப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு பலன்கள் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 12, 17.
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடகிழக்கு, வடக்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம், பச்சை.
எண்கள்: 3, 5, 6, 8.
பரிகாரம்: சக்தி வழிபாடு செய்வது நல்லது.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 3-ல் சூரியனும் 10-ல் சனியும் உலவுவது நல்லது. குரு 8-ல் உலவினாலும் கூட வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தர்ம குணம் வெளிப்படும். எடுத்த காரியங்களில் எப்பாடுபட்டாவது வெற்றி பெறுவீர்கள். மதிப்பு உயரும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் குதூகலம் கூடும். பேச்சில் இனிமை தவழும். முக வசீகரம் கூடும். பெண்களுக்கும் கலைஞர்களுக்கும் வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாகும்.
அரசுப்பணிகள் ஆக்கம் தரும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். பொதுப்பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்கள் உங்களைப் போற்றுவார்கள். புதன் 3-ல் இருப்பதால் வியாபாரத்தில் கவனம் தேவை. எழுத்து, பத்திரிகை, தரகுத் துறையினர் பொறுப்புடன் காரியமாற்றுவது அவசியமாகும். ஜன்ம ராசியில் கேதுவும் 7-ல் ராகுவும் உலவுவதால் தன் நலனிலும், வாழ்க்கைத்துணைவரின் நலனிலும் அக்கறை தேவைப்படும். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 12, 14. .
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, கிழக்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 6, 8.
பரிகாரம்: நரசிம்மரை வழிபடவும்.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும், 2-ல் புதனும் 3-ல் செவ்வாயும், 6-ல் ராகுவும் 7-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். திரவப்பொருட்களால் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி காணச் சந்தர்ப்பம் கனிந்துவரும். நண்பர்களும், உறவினர்களும் உதவுவார்கள். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு அதிகமாகும். எதிரிகள் அடங்குவார்கள். போட்டிகளிலும் பந்தயங்களிலும் விளையாட்டுகளிலும் வெற்றி கிடைக்கும். எடுத்த காரியங்களில் திறம்பட ஈடுபடுவீர்கள்.
உடன்பிறந்தவர்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும். வாரப் பின்பகுதியில் மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் அதிகரிக்கும். முக்கியமான எண்ணங்கள் ஈடேற வழிபிறக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். பயணத்தின் மூலம் முக்கியமான ஒரு காரியம் நிறைவேறும். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் வருவாயோ கிடைக்கும். 15-ம் தேதி முதல் சூரியன் 3-ம் இடத்திற்கு மாறுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். அரசு உதவி கிடைக்கும். நிர்வாகத்திறன் மேம்படும். முக்கியப் பதவிகள் தேடிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 12, 14, 17.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, வடக்கு.
நிறங்கள்: புகைநிறம், இளநீலம், வெண்மை, சிவப்பு, பச்சை.
எண்கள்: 3, 4, 5, 6, 9.
பரிகாரம்: சூரிய நாராயணரை வழிபடவும். சனிப் பிரீதி செய்து கொள்வது நல்லது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago