துலாம்
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 3லும் புதன் 4ஆமிடத்திலும் உலவுவது சிறப்பாகும். குரு 9இல் வக்கிரமாக இருப்பதால் அதிக நலமிராது. சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோரது நிலையும் சிறப்பாக இல்லாததால் எதிலும் விசேடமான நன்மைகளை எதிர்பார்க்க இயலாமல் போகும். அதிகம் உழைக்க வேண்டிவரும். அலைச்சலைத் தவிர்க்க இயலாமல் போகும். போட்டிகளில் அளவோடு வெற்றி கிட்டும்.
21ஆம் தேதி முதல் புதன் வக்கிர நிவர்த்தி பெறுவதால் வியாபாரிகளுக்கு மந்தப்போக்கு விலகும். மாணவர்களது நிலை உயரும். 25ஆம் தேதி முதல் சுக்கிரன் 4-ஆமிடம் மாறுவதால் புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கை நிகழும். சிலருக்குப் புதிய வாகனம் வாங்கச் சந்தர்ப்பம் உருவாகும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்கள், உறவினர்களால் அதிக நலம் ஏற்படும். தாய் நலம் சிறக்கும். தாய் வழியினரால் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப். 20, 21, 24, 26.
திசைகள்: தென்கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: இளநீலம், வெண்மை, பச்சை.
எண்கள்: 5, 6.
விருச்சகம்
உங்கள் ராசிநாதன் செவ்வாய் 11ஆமிடத்தில் உலவுவது விசேடமாகும். சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதாலும் குரு 8இல் வக்கிரமாக உலவுவதாலும் குடும்ப நலம் சீராக இருந்துவரும். பேச்சில் இனிமை கூடும். கணவன் மனைவி உறவுநிலை திருப்தி தரும். விருந்து, உபசாரங்களிலும் கேளிக்கை, உல்லாசங்களிலும் ஈடுபாடு கூடும்.
ஆன்மிகவாதிகள், ஜோதிடர்கள், அறநிலையப் பணியாளர்கள், திருக்கோயில் தர்மகர்த்தாக்கள் ஆகியோருக்கெல்லாம் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். த்யானம், யோகா ஆகியவற்றில் ஈடுபாடு உண்டாகும். எதிரிகள் கூட இப்போது மனம் மாறி உங்களுக்கு உதவுவார்கள்.
நோய்நொடிப் பிரச்னைகள் குறையும். 21ஆம் தேதி முதல் புதன் வக்கிர நிவர்த்தி பெற்று 3இல் உலவுவதால் வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. பயணத்தின்போது பாதுகாப்புத் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப். 24, 26.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: இளநீலம், வெண்மை, மெரூன், சிவப்பு.
எண்கள்: 3, 6, 7, 9.
தனுசு
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 2இல் புதனும் 3இல் சூரியனும், 10இல் செவ்வாயும், 11இல் சனி, ராகு ஆகியோரும் உலவுவது சிறப்பாகும். வசீகரச் சக்தி கூடும். பேச்சாற்றல் வெளிப்படும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் கூடிவரும். பெண்களுக்கு மன உற்சாகம் பெருகும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். இயந்திரப் பணிகள் லாபம் தரும்.
வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்களுக்கு ஆதாயம் அதிகம் கிடைக்கும். பிற மொழி, மத, இனங்களைச் சார்ந்தவர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். 5இல் கேதுவும், 7இல் வக்கிர குருவும் இருப்பதால் மக்கள் நலனில் அக்கறை தேவைப்படும். 21ஆம் தேதி முதல் புதன் வக்கிர நிவர்த்தி பெறுவதால் மாணவர்களது நிலை உயரும். 25ஆம் தேதி முதல் செல்வ நிலையில் விசேடமான வளர்ச்சியைக் காண வழிபிறக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப். 20, 21, 24, 26.
திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, மேற்கு, தென்மேற்கு, தெற்கு.
நிறங்கள்: நீலம், சிவப்பு, பச்சை, ரோஸ்.
எண்கள்: 1, 4, 5, 6, 8, 9.
மகரம்
உங்கள் ராசிக்கு 10இல் சனி, ராகு ஆகியோரும் 12இல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். குரு 6இல் இருந்தாலும் வக்கிரமாக உலவுவதால் நலம் புரிவார். எடுத்த காரியங்களை எப்பாடுபட்டாவது நிறைவேற்றி வருவீர்கள். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகம் லாபம் தரும். கறுப்பு, கருநீல நிறப்பொருட்கள் லாபம் தரும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளச் செலவு செய்வீர்கள்.
21ஆம் தேதி முதல் புதன் வக்கிர நிவர்த்தி பெற்று ஜன்ம ராசியில் உலவுவதால் தர்ம குணம் வெளிப்படும். 25ஆம் தேதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதாலும், சனியும் சுக்கிரனும் பரிவர்த்தனை பெறுவதாலும் சுக்கிரன் புதனுடன் கூடுவதாலும் செல்வாக்கு உயரும். வெளிநாட்டுப் பயணத்திட்டம் ஈடேறும். வேலை வாய்ப்பு தேடிவரும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். மக்களாலும் வாழ்க்கைத் துணைவராலும் நலம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப். 20, 21, 26.
திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு, மேற்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை, கறுப்பு.
எண்கள்: 3, 4, 6, 8.
கும்பம்
3இல் கேதுவும், 5இல் குருவும், 11இல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். தெளிவான மன நிலை அமையும். த்யானம், யோகா, ஜோதிடம் ஆகியவற்றில் ஈடுபாடு கூடும். பெண்களுக்கு மன உற்சாகம் கூடும். புதிய ஆடை, அணிமணிகளும் அலங்காரப்பொருட்களும் வாசனைத் திரவியங்களும் சேரும். ஜன்ம ராசியில் சூரியனும் 8இல் செவ்வாயும் இருப்பதால் உடல்நலனில் கவனம் தேவை. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக்கொள்ளவும்.
அரசியல், நிர்வாகம், பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். 21ஆம் தேதி முதல் புதன் வக்கிர நிவர்த்தி பெற்றாலும் 12ஆம் இடத்தில் உலவுவதால் வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. 25ஆம் தேதி முதல் சுக்கிரன் 12ஆமிடம் மாறுவது நல்லது. தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தந்தை நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப். 20, 21, 24.
திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: மெரூன், பொன் நிறம், நீலம்.
எண்கள்: 3, 6, 7.
மீனம்
உங்கள் ராசிக்கு 11இல் புதன் உலவுவது சிறப்பாகும். இதர முக்கியமான கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் உடல் நலனில் கவனம் தேவைப்படும். கண், கால், குடல் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். புதிய துறைகளில் பிரவேசிக்க வேண்டாம். அனைத்துக் காரியங்களிலும் அதிக அக்கறை தேவை. கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது. மருத்துவச் செலவுகள் சற்று அதிகரிக்கும்.
தந்தையால் பிரச்னைகள் சூழும். அரசாங்கத்துக்கு அபராதம் கட்ட நேரலாம். நிறுவன, நிர்வாகத் துறையினருக்கு முன்னேற்றம் தடைப்படும். 21ஆம் தேதி முதல் புதன் வக்கிர நிவர்த்தி பெற்று நேர்கதியில் உலவத் தொடங்குவதால் வியாபாரிகளுக்கு முன்னேற்றமான பாதை புலப்படும். மாணவர்கள் தங்கள் திறமைக்குரிய வளர்ச்சியைக் காண்பார்கள். 25ஆம் தேதி முதல் சுக்கிரன் 11ஆமிடம் மாறுவதால் கலைஞர்களுக்கு மந்த நிலை விலகும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை உருவாகும். கூட்டாளிகள் உதவுவார்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப். 24, 26.
திசை: வடக்கு.
நிறங்கள்: பச்சை, ரோஸ்.
எண்கள்: 5.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
17 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago