வார ராசி பலன் 21-1-2016 முதல் 27-1-2016 வரை (துலாம் முதல் மீனம் வரை)

By சந்திரசேகர பாரதி

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் 3-ல் உலவுகிறார். ராகு 11-மிடத்தில் உலவுவதும் சிறப்பாகும். தொலைதூரப் பயணத்தால் நலம் உண்டாகும். தான, தர்மப் பணிகளில் ஈடுபாடு கூடும். நல்லவர்களின் நட்பு நலம் தரும். செய்து வரும் தொழிலில் வளர்ச்சி காண வாய்ப்புக் கூடிவரும்.

திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். கலைஞர்களுக்கு வெற்றிகள் குவியும். கொடுக்கல்-வாங்கல் ஒழுங்காகும். 5-ல் கேதுவும் 12-ல் குருவும் இருப்பதால் மக்களால் மன வருத்தம் உண்டாகும். ஜன்ம ராசியில் செவ்வாய் இருப்பதால் உடலில் காயம்பட வாய்ப்பு உண்டு. எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. கணவன் மனைவி உறவு நிலை சீராகவே இருந்துவரும். திரவப் பொருட்கள் லாபம் தரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 22, 24, 26.

திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: இள நீலம், வெண்மை, சாம்பல் நிறம்.

எண்கள்: 4, 6.

பரிகாரம்: செவ்வாய், புதன், கேது குரு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்ளவும். ஏழை மாணவர்களுக்கு உதவுவது நல்லது.



விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும் ,3-ல் சூரியனும் 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது விசேடம். பண வரவு அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். கடல் வாணிபம் லாபம் தரும். வெண்மையான பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றால் லாபம் பெற வாய்ப்பு உண்டாகும்.

செய்து வரும் தொழில் விருத்தி அடையும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை வாரப் பின்பகுதியில் கிடைக்கும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். ராசிநாதன் 12-லும் சனி ஜன்ம ராசியிலும் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உழைப்பு அதிகரிக்கவே செய்யும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. கண், கால் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 24, 26.

திசைகள்: தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், இளநீலம், பச்சை, பொன் நிறம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 4, 5, 6.

பரிகாரம்: சுப்பிரமணியரையும், ஆஞ்சநேயரையும் கணபதியையும் வழிபடவும். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவது நல்லது.



தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசியில் சுக்கிரனும் 3-ல் கேதுவும், 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். வாழ்வில் வளம் பெற நல்ல வாய்ப்புகள் கூடிவரும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். வழக்கில் வெற்றி கிடைக்கும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். ஆன்மிக, அறநிலையப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும்.

பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். நிலபுலங்கள் சேரும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினைகள் தீரவும் வழிபிறக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். சனி 12-ல் இருப்பதால் வீண் செலவுகள் உண்டாகும். குறைத்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 22, 26

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: சிவப்பு, வெண்மை, மெரூன்.

எண்கள்: 1, 6, 7. 9.

பரிகாரம்: சனிக்கு நல்லெண்ணெய் தீபம் ஏறறி வழிபடவும். கால் ஊனமுள்ளவர்களுக்கு உதவவும்.



மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 9-ல் குருவும் 10-ல் செவ்வாயும் 11-ல் சனியும், 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். எதிர்ப்புகளைக் கடந்து வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். சுப காரியங்களுக்காகச் செலவுசெய்ய வேண்டிவரும். வெளிநாடு சென்று பொருள் திரட்ட விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும். பெரியவர்கள், தனவந்தர்கள் ஆகியோர் உங்களுக்கு உதவுவார்கள்.

தொழிலாளகளுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். சூரியன், புதன், ராகு, கேது ஆகியோரது நிலை சிறப்பாக இல்லாததால் வாரப் பின்பகுதியில் மன அமைதிக்குறையும். பயணத்தால் சங்கடம் ஏற்படும். புதியவர்களிடம் விழிப்புடன் பழகுவது நல்லது. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும். கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் நஷ்டப்படாமல் தப்பலாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 22, 24.

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: நீலம், பொன்நிறம், சிவப்பு.

எண்கள்: 3, 6, 8, 9.

பரிகாரம்: துர்கையையும், மகாவிஷ்ணுவையும் வழிபடவும்.



கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ல் சனியும், 11-ல் புதனும் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். எதிரிகள் அடங்குவார்கள். தான, தர்மப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கடல் வாணிபம் லாபம் தரும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். கலைஞர்களது எண்ணம் ஈடேறும். மாதர்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும்.

புதிய ஆடை, அணிமணிகளும் அலங்காரப் பொருட்களும் சேரும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். புதியவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். வாழ்க்கைத் துணைவரால் செலவுகள் ஏற்படும். அரசுப் பணிகளில் விழிப்புத் தேவை. தந்தை நலனில் அக்கறை தேவைப்படும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. உடல் நலனில் கவனம் தேவை. நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்படுவது அவசியம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 22, 24, 26.

திசைகள்: மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: பச்சை, நீலம்.

எண்கள்: 5, 6, 8, 9.

பரிகாரம் சூரிய வழிபாடு அவசியம். நாகராஜரை வழிபடவும்.



மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும் 7-ல் குருவும் 10-ல் புதனும் 11-ல் சூரியனும் உலவுவதால் முயற்சி பலிதமாகும். நண்பர்களும் உறவினர்களும் உதவ முன்வருவார்கள். புதிய பொருட்கள் சேரும். வியாபாரம் பெருகும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்வு அதிகரிக்கும். பிற மொழி, மத, இனக்காரர்களால் அனுகூலம் உண்டாகும். பயணத்தால் ஒரு காரியம் ஈடேறும்.

8-ல் செவ்வாய் இருப்பதால் தீ, மின்சாரம், வெடிபொருட்கள், இயந்திரங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றின் பக்கம் நெருங்கும்போது எச்சரிக்கை தேவை. சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். உடன்பிறந்தவர்களுக்கும் உங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சொத்துகள் சம்பந்தமான பிரச்சினைகள் உண்டாகும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. எதிலும் அவசரம் கூடாது. நிதானம் மிகவும் தேவை.

அதிர்ஷ்ட தேதிகள்: ஜனவரி 22, 24, 26.

திசைகள்: வடக்கு, கிழக்கு, வடகிழக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: பொன் நிறம், வெண்மை, பச்சை, ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 4, 5.

பரிகாரம்: சுப்பிரமணியருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது. சஷ்டி கவசம் படிக்கவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

7 hours ago

ஆன்மிகம்

9 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்