மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசியிலேயே இருப்பதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எதிர்ப்புகளைக் கடந்து வாழ்வில் வெற்றி பெறச் சந்தர்ப்பம் உருவாகும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். காடு, மலை, வனாந்தரங்களில் தொழில் புரிபவர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். சுக்கிரன் ராசியில் இருப்பதால் மன உற்சாகம் கூடும்.
புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். பெண்களாலும், வாழ்க்கைத்துணையாலும் நலம் ஏற்படும். 12-ல் சூரியன், புதன், கேது உலவுவதால் பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். வியாபாரிகள் விழிப்புடன் இருந்தால் நஷ்டத்தைத் தவிர்க்கலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். வாரப் பின்பகுதியில் புதிய சொத்துகள் சேர வாய்ப்பு உண்டு.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 29, 30 (முற்பகல்), ஏப். 1.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: புகை நிறம், சிவப்பு, இளநீலம்.
எண்கள்: 4, 6, 9.
பரிகாரம்:
ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும். ஸ்ரீ லட்சுமி நாராயணரை வழிபடவும்.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் வக்கிர குருவும், 11-ல் சூரியனும், புதனும் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பு. செல்வாக்கும் மதிப்பும் உயரும். குடும்ப நலம் திருப்தி தரும். பணப் புழக்கம் அதிகரிக்கும். பேச்சில் திறமை கூடும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். தந்தையால் ஓரிரு காரியங்கள் நிறைவேறும்.
சொத்துகள் லாபம் தரும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சேரும். சுகானுபவம் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கடல் வாணிபம் செய்பவர்கள் வளர்ச்சிக் காண்பார்கள். பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மனத்தெளிவு பிறக்கும். இடமாற்றம் சிலருக்கு ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 29, 30 (முற்பகல்), ஏப்.1
திசைகள்: வடமேற்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம், பச்சை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 5, 6, 7.
பரிகாரம்: துர்கைக்கோ காளிக்கோ நெய்தீபம் ஏற்றி வழிபடவும். ஏழைப் பெண்களுக்கு உதவுவது நல்லது.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 6-ல் சனியும், 10-ல் சூரியனும் புதனும் கேதுவும், 11-ல் செவ்வாயும் சுக்கிரனும் உலவுவதால் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். போட்டிகள், பந்தயங்கள், வழக்கு, விளையாட்டு, ஆகியவற்றில் வெற்றி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். பண வரவு திருப்தி தரும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும்.
நிலபுலங்கள் லாபம் தரும். பொதுப்பணிகளில் ஈடுபாடு கூடும். அரசாங்கத்தாரால் அனுகூலம் ஏற்படும். தந்தையால் நலம் உண்டாகும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகள் லாபம் தரும். மகப்பேறு பாக்கியம் உண்டாகும். மற்றவர்கள் புகழத்தக்க வகையில் சாதனைகளை ஆற்றுவீர்கள். வாரப்பின்பகுதியில் முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 29, 30 (முற்பகல்), ஏப்.1.
திசைகள்: தென்மேற்கைத் தவிர இதர திசைகள் சிறப்பானவை.
நிறங்கள்: கறுப்பு கூடாது. இதர நிறங்கள் அதிர்ஷ்டமானவை.
எண்கள்: 1, 3, 5, 6, 7, 8, 9.
பரிகாரம்: துர்கை காயத்ரி, ராகு கால துர்கா ஸ்தோத்திரம் சொல்வது நல்லது.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 10-ல் செவ்வாயும் உலவுவதால் முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். மன உற்சாகம் பெருகும். பொறியியல், சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். திட, வீர, பராக்கிரமம் வெளிப்படும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கில் வெற்றி கிட்டும்.
பயணத்தால் அனுகூலம் உண்டாகும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். செய்து வரும் தொழில்விருத்தி அடையும். அயல்நாட்டுத் தொடர்பு ஆக்கம் தரும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். தந்தையால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். வியாபாரிகள் அகலக்கால் வைக்க வேண்டாம். வாரப்பின்பகுதியில் பிறர் போற்றும் விதத்தில் சாதனைகள் ஆற்றுவீர்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 29, 30 (முற்பகல்), ஏப்.1.
திசைகள்: தெற்கு, தென்மேற்கு.
நிறங்கள்: சிவப்பு, புகை நிறம்.
எண்கள்: 4, 9.
பரிகாரம்: சக்தி வழிபாடு நலம் தரும். ஆஞ்சநேயரை வழிபடுவதும் நல்லது.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரனும் 12-ல் வக்கிர குருவும் உலவுவது சிறப்பு. செவ்வாய் 9-ல் இருந்தாலும் தன் சொந்த வீட்டில் இருப்பதால் நலம் உண்டாகும். தெய்வப்பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு கூடும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் ஆக்கம் தரும். நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை திருப்தி தரும்.
புதிய சொத்துகளும் பொருட்களும் சேரும். கலைத்துறையினருக்கு வரவேற்பு அதிகமாகும். பெண்களுக்கு மன உற்சாகம் பெருகும். வியாபாரிகளுக்கு அளவோடு லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். உஷ்ண சம்பந்தமான உடல் உபாதைகள் ஏற்படும். ஏற்றுமதி-இறக்குமதி துறையினர் விழிப்புடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 29, ஏப்.1.
திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: இளநீலம், பொன் நிறம்.
எண்கள்: 3, 6, 9.
பரிகாரம்: ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும். நாக பூஜை செய்யவும். ஹனுமன் சாலீஸா படிப்பதும் கேட்பதும் நல்லது.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 8-ல் சுக்கிரனும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பு. பொது நலப்பணிகளில் ஈடுபாடு அதிகமாகும். நல்ல தகவல் வந்து சேரும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காணலாம்.
நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். தொழிலாளர்களுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். 7-ல் சூரியனும் புதனும் கேதுவும் உலவுவதால் கணவன் மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. பிள்ளைகளால் முக்கியமான எண்ணம் ஈடேறும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 29, 30 (முற்பகல்).
திசைகள்: மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 3, 6, 8.
பரிகாரம்: சூரியன், செவ்வாய், ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
2 hours ago
ஆன்மிகம்
4 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago