வார ராசிபலன் 01-06-2017 முதல் 07-06-2017 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

By சந்திரசேகர பாரதி

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசியில் சுக்கிரனும் 2-ல் புதனும் 3-ல் செவ்வாயும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். தோற்றப் பொலிவு கூடும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழிலில் அபிவிருத்தி காணலாம். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பேச்சில் திறமை கூடும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழி பிறக்கும். எதிரிகள் அடங்குவார்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். பொறியாளர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். விளையாட்டுகளிலும் வழக்குகளிலும் நல்ல திருப்பம் உண்டாகும். ஆன்மிக, அறநிலையப் பணியாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். 5-ல் ராகுவும் 6-ல் குருவும் இருப்பதால் மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 1, 4, 5, 6.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு, வடக்கு.

நிறங்கள்: சிவப்பு, வெண்மை, இளநீலம், பச்சை.

எண்கள்: 5, 6, 7, 0.‎

பரிகாரம்: குருப் பிரீதி செய்து கொள்ளவும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.



ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் 10-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. நல்லவர்கள் நலம் புரிவார்கள். அலைச்சல் வீண்போகாது. மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். பண நடமாட்டம் அதிகமாகும். ஊக வணிகம், கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். உத்தியோகஸ்தர்களது நோக்கம் நிறைவேறும். ஆசிரியர்கள், மத போதகர்கள், ஆன்மிகச் சொற்பொழிவாளர்கள் ஆகியோர் போற்றப்படுவார்கள். மந்திர, தந்திர, யந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும். வேத விற்பன்னர்களுக்கு செழிப்புக் கூடும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்புகள் கூடிவரும். மந்திர சித்தி சிலருக்குக் கிட்டும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். சுப செலவுகள் செய்ய வேண்டிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 1, 4, 5, 6.

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, பொன் நிறம்.

எண்கள்: 3, 6, 7.

பரிகாரம்: துர்க்கையை வழிபடவும்.



மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 6-ல் சனியும், 11-ல் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் பயணத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். புதியவர்களின் தொடர்பும் அதனால் நலமும் ஏற்படும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். ஆராய்ச்சியாளர்களுக்கு வரவேற்பு கூடும். போக்குவரத்து, பயணம் சம்பந்தமான தொழில் லாபம் தரும். தோல் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். கலைத் துறையினருக்கு சுபிட்சம் கூடும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை உருவாகும். மகப்பேறு பாக்கியம் கிட்டும். பெண் குழந்தைகளாலும் மனைவியாலும் நலம் ஏற்படும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் சேரும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். ஜன்ம ராசியில் செவ்வாயும், 9-ல் கேதுவும் 12-ல் சூரியனும் புதனும் உலவுவதால் தந்தை நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். உடலில் காயம்பட நேரலாம்; எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 1, 4, 5, 6.

திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: வெண்மை, இளநீலம், கறுப்பு.

எண்கள்: 4, 8.

பரிகாரம்: சுப்பிரமணியரையும் திருமாலையும் வழிபடுவது நல்லது.



கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 11-ல் சூரியன் புதன் ஆகியோர் உலவுவது சிறப்பாகும். இதர கிரகங்கள் கோசாரப்படி சிறப்பாக இல்லை. இதனால் எதிலும் விசேடமான வளர்ச்சியைக் காண முடியாமல் போகும். குடும்ப நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். பொருளாதார நிலை சாதாரணமாகவே காணப்படும். பிறரால் ஏமாற்றப்பட நேரலாம். பெரியவர்கள், தனவந்தர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. வீண் விவகாரங்களில் ஈடுபடலாகாது. புதிய துறைகளில் அதிகம் முதலீடு செய்ய வேண்டாம். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் தொல்லைகள் சூழும். பேச்சில் சூடான வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது நல்லது. பயணத்தின்போதும் விளையாட்டின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்பு தேவை. உடன்பிறந்தவர்களால் செலவுகள் ஏற்படும். மக்களால் மன வருத்தம் உண்டாகும். தொழில் ரீதியாக இடமாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஜூன் 1, 4, 5, 6.

திசைகள்: கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: சிவப்பு, ஆரஞ்சு.

எண்கள்: 1, 5.

பரிகாரம்: குருவையும், தட்சிணாமூர்த்தியையும் துர்க்கையையும் வழிபடுவது நல்லது.



சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 9-ல் சுக்கிரனும் 10-ல் சூரியனும் புதனும் 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். பேச்சில் திறமை கூடும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு உண்டாகும். முகப்பொலிவு கூடும். தெய்வப் பணிகள் நிறைவேறும். தருமப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். பொருளாதார நிலை திருப்தி தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். உடன்பிறந்தவர்களாலும், மக்களாலும், வாழ்க்கைத் துணைவராலும் நலம் பல உண்டாகும். புதிய முயற்சிகள் கைகூடும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் தொழிலில் அதிக வருவாய் கிடைக்கும். நிலபுலங்கள் சேரும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். கடன் தொந்தரவு குறையும். பிரச்சினைகள் எளிதில் தீரும். செய்தொழில் விருத்தி அடையும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 1, 4, 5, 6.

திசைகள்: தெற்கு, வடகிழக்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, பொன் நிறம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 5, 6, 9.

பரிகாரம்: துர்க்கைக்கு ஏற்றி வழிபடவும்.



கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 6-ல் கேதுவும் 8-ல் சுக்கிரனும் 10-ல் செவ்வாயும் உலவுவது நல்லது. அலைச்சல் சற்று அதிகரிக்கும். வீண் செலவுகள் ஏற்படும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது அவசியமாகும். இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும். நல்லவர்களின் தொடர்பால் நலம் பெற வாய்ப்புகள் கூடிவரும். குடும்ப நலம் சீராகவே இருக்கும். எதிரிகள் அடங்குவார்கள். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிட்டும். பொதுநலப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள் நற்பெயர் பெறுவார்கள். ஆன்மிக வாதிகளுக்கு மதிப்பு உயரும். கலைத் துறையினருக்குப் பிரச்சினைகள் தீரும். மாதர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். பொறியாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். தருமப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 4, 5, 6.

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடமேற்கு, தெற்கு.

நிறங்கள்: நீலம், கருஞ்சிவப்பு.

எண்கள்: 6, 7, 8, 9.

பரிகாரம்: ஆதிபராசக்தியை வழிபடவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்