வார ராசி பலன் 06-08-2015 முதல் 12-08-2015 வரை (துலாம் முதல் மீனம் வரை)

By சந்திரசேகர பாரதி

துலாம் ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 6-ல் கேதுவும் 10-ல் சூரியனும் செவ்வாயும், 11-ல் புதனும் குருவும் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். தொழில் விருத்தி அடையும். வேலையில்லாதவர்களுக்கு வாய்ப்புக் கூடிவரும். பண நடமாட்டம் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும்.

தர்மப் பணிகளில் ஈடுபாடு கூடும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். அரசுப் பணியாளர்களது நிலை உயரும். எதிரிகள் அடங்குவார்கள். தந்தையால் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழிலில் லாபம் அதிகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 6, 10 (பிற்பகல்), 12

திசைகள்: கிழக்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: மெரூன், பச்சை, இள நீலம், வெண்மை, பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 5, 6, 7.

பரிகாரம்: துர்கை அம்மனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.

விருச்சிக ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 10-ல் புதனும் 11-ல் ராகுவும் உலவுவது விசேடமாகும். எதிரிகள் விலகிப் போவார்கள். மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் கூடும். வியாபாரம் பெருகும். கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற இனங்கள் ஆக்கம் தரும். நண்பர்களும் உறவின்ர்களும் உதவி புரிவார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். வாழ்க்கைத் துணைவரால் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகள் உதவுவார்கள்.

வழக்குகளில் அனுகூலம் தென்படும். வாரப் பின்பகுதியில் சந்திரன் 8-ஆமிடம் மாறுவதால் மனத்தில் ஏதேனும் சலனம் ஏற்படும். தந்தை நலனில் கவனம் தேவைப்படும். வீண் செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். மக்களால் மன அமைதி குறையும். உடன்பிறந்தவர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். காரியத்தில் முழுக்கவனம் தேவை. தொழில் ரீதியாகச் சில பிரச்னைகள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 6, 9

திசைகள்: தென்மேற்கு, வடக்கு, கிழக்கு

நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், பச்சை, ஆரஞ்சு

எண்கள்: 1, 4, 5.

பரிகாரம்: கேது, சனிக்கு பிரீதி, பரிகாரங்கள் செய்யவும்.

தனுசு ராசி வாசகர்களே!

ராசி அதிபதி குரு 9-ல் இருப்பது விசேஷம். சுக்கிரன், சனி, ராகு ஆகியோரது சஞ்சாரமும் சிறப்பாக இருப்பதால் உற்சாகம் பெருகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வசதிகள் பெருகும். பெற்றோரால் மக்களுக்கும் மக்களால் பெற்றோருக்கும் அனுகூலம் உண்டாகும். பெரியவர்களும் தனவந்தர்களும் ஆதரவாக இருப்பார்கள். பண நடமாட்டம் கூடும்.

அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் அதிகரிக்கும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு கூடும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். சுப காரியங்கள் நிகழும். தொழில் விருத்தி அடையும். 4-ல் கேதுவும், 8-ல் சூரியனும் செவ்வாயும் உலவுவதால் சுகம் குறையும். சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 6, 9, 10, 12.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, மேற்கு

நிறங்கள்: புகை நிறம். வெண்மை, கறுப்பு, இளநீலம், பொன் நிறம்.

எண்கள்: 3, 4, 5, 6, 8.

பரிகாரம்: சூரியனையும், செவ்வாயையும் வழிபடுவது நல்லது. விநாயகருக்கு ஆராதனைகள் செய்யவும்.

மகர ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 8-ல் புதனும் சுக்கிரனும் 10-ல் சனியும் உலவுவதால் அலைச்சலும் உழைப்பும் வீண்போகாது இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், விஞ்ஞானிகள், கணிதத் துறையாளர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். கலைஞர்கள் எதிர்ப்புக்களுக்கிடையேயும் வளர்ச்சி காண்பார்கள். பொது நலப் பணியாளர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் செழிப்புக் கூடும். 7-ல் சூரியனும் செவ்வாயும் இருப்பதல் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, ஒற்றுமை குறையும். சகிப்புத் தன்மை தேவை. பிறரிடம் சுமுகமாகப் பழகுவதன் மூலம் அவர்களது அதிருப்திக்கு ஆளாகாமல் தப்பலாம். வீண் வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 6, 9, 10, 12.

திசைகள்: மேற்கு, வடமேற்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, நீலம், மெரூன்.

எண்கள்: 5, 6, 7, 8.

பரிகாரம்:

சூரியன், செவ்வாய், குருவுக்கு பிரீதி, பரிகாரங்கள் செய்யவும்.

கும்ப ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் செவ்வாயும் 7-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். மனத்துணிவு கூடும். செயலில் வேகம் பிறக்கும். அரசு சமப்ந்தமான காரியங்கள் நிறைவேறும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். அரசுப் பணியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நிர்வாகத் துறையினருக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். பெரியவர்களும் தனவந்தர்களும் மேலதிகாரிகளும் உதவுவார்கள்.

தகவல் தொடர்பு இனங்களால் அளவோடு அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். ஆசிரியர்கள் போற்றப்படுவார்கள். ஆன்மிகம், அற நிலையம், ஜோதிடம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ஓரளவு வளர்ச்சி தெரியவரும். வாழ்க்கைத் துணைவராலும் மக்களாலும் அனுகூலம் உண்டாகும். 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் இருப்பதால் வீண் வம்பு வேண்டாம். குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 6, 9, 10, 12.

திசைகள்: கிழக்கு, தெற்கு, மேற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: நீலம், பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 8.

பரிகாரம்:

சர்ப்ப சாந்தி செய்யவும்.

மீன ராசி வாசகர்களே!

கோசாரப்படி புதன் ஒருவரே அனுகூலமாக உலவுகிறார். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லை. அலைச்சல் கூடும். மன நிம்மதி குறையும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காண முடியாமல் போகும். தேவைகள் அதிகமாகும். கடன்படவும் நேரலாம். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. பேச்சில் நிதானம் தேவை. வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும்.

சகிப்புத் தன்மை தேவை. கூட்டாளிகளால் தொல்லைகள் சூழும். சிலருக்கு கூட்டு வியாபாரத்தில் நெருக்கடிகள் ஏற்படும். பங்குதாரர்கள் பிரிந்து போகக்கூடும். தொழிலாளர்கள், உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பத்தகாத இடமாற்றமும், நிலைமாற்றமும் ஏற்படும். மக்களால் மன வருத்தம் உண்டாகும். வியாபாரிகள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களின் உழைப்பு வீண்போகாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 6, 9, 10, 12.

திசைகள்: வடக்கு. வடமேற்கு.

நிறங்கள்: பச்சை, வெண்மை.

எண்கள்: 2, 5.

பரிகாரம்: கோளறு திருப்பதிகம் வாசிப்பது நல்லது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

12 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்