துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 11-ல் உலவும் ராகு நலம் புரியும் நிலையில் இருக்கிறார். 9-ல் உலவும் புதனும் அளவோடு உதவுவார். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லை. ராசிநாதன் சுக்கிரன் 7-ல் இருந்தாலும் ராசியைப் பார்ப்பது நல்லது. இதனால் உங்கள் மதிப்பு உயரும். உடல் நலம் கவனிப்பின் பேரில் சீராகவே இருந்துவரும். நண்பர்களும் உறவினர்களும் நலம் புரிவார்கள். வாரப் பின்பகுதியில் தான, தர்மப்பணிகளிலும் தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். ஜலப்பொருட்கள் ஆதாயம் கொண்டுவரும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். புதியவர்களின் தொடர்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். ஏற்றுமதி இறக்குமதி இனங்களால் ஆதாயம் கிடைக்கும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. 5-ல் கேதுவும் 12-ல் குருவும் இருப்பதால் மக்களால் மன அமைதி குறையும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களை எண்ணி ஏமாற வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். மறதியால் அவதி ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 25, 26, 28.
திசைகள்: தென்மேற்கு, வடக்கு.
நிறங்கள்: சாம்பல்நிறம், பச்சை .
எண்கள்: 4, 5.
பரிகாரம்: குருவையும் கேதுவையும் தட்சிணாமூர்த்தியையும், விநாயகரையும் வழிபடவும்.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். நல்லவர்கள் உங்களுக்கு உற்ற துணையாக இருப்பார்கள். நல்ல காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பிறரிடம் சுமுகமாகப் பழகுவீர்கள். கூட்டுத் தொழிலில் ஓரளவு லாபம் கிடைக்கும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். எதிர்ப்புகள் இருக்கும் என்றாலும் அவற்றைச் சமாளிக்கும் புத்திசாலித்தனம் அமையும். சூரியனும் செவ்வாயும் 8-ல் இருப்பதால் அரசுப் பணிகளில் விழிப்பு தேவை. தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. பொறுமை அவசியம் தேவை. உடலில் காயம்பட நேரலாம். மின்சாரம், எரிபொருள், கட்டடப் பொருள், வெடிப்பொருள், கூரிய ஆயுதங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கை தேவை. வாரப் பின்பகுதியில் புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். பொருளாதார நிலை உயரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். தான, தர்மப்பணிகளிலும், தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு கூடும். திரவப் பொருட்களால் லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 26, 28. .
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, வ்டக்கு.
நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், பொன் நிறம், பச்சை
எண்கள்: 3, 4, 5.
பரிகாரம்: சூரியன், செவ்வாய் ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது. திருமுருகனை வழிபடவும்.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 5-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. எதிர்ப்புகளைச் சமாளிக்கும் சக்தி உண்டாகும். போட்டிகளில் வெற்றி கிட்டும். தியானம், யோகாவில் ஈடுபாடு கூடும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். பெண்களுக்கு மன மகிழ்ச்சி அதிகரிக்கும். கேளிக்கை, உல்லாசங்களிலும்; விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு அதிகமாகும். நல்லவர்களின் நட்பு நலம் சேர்க்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். பெண்களால் ஆடவர்களுக்கு அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி இடையே சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் எச்சரிக்கை தேவை. வாரப் பின்பகுதியில் பிரச்சினைகள் சற்று அதிகரிக்கும். மனத்தில் சலனம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள், உழைப்பாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் பொறுப்புடணர்ந்து கடமையாற்றினால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். பொருள் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. பெற்றோருக்கும் மக்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 25, 28.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை.
எண்கள்: 6, 7.
பரிகாரம்: குருவுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும் 6-ல் சூரியனும் செவ்வாயும் புதனும் 9-ல் குருவும் 11-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். அறிவாற்றல் பளிச்சிடும். மனத்தில் தெளிவும் தன்னபிக்கையும் கூடும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். எதிரிகள் விலகிப் போவார்கள். காரியத்தில் வெற்றி கிடைக்கும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். விளையாட்டு விநோதங்களில் வெற்றி பெற வாய்ப்பு உண்டாகும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறைகள் லாபம் தரும். நிலம், மனை, வீடு, வாகனச் சொத்துக்க்ள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். பெரியவர்கள், தனவந்தர்களின் சந்திப்பும் ஆதரவும் பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும் என்றாலும் பாதுகாப்பும் தேவை. கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். செலவுகள் சற்று அதிகரிக்கும் என்றாலும் சமாளிப்பீர்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 25, 26.
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடகிழக்கு, வடக்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம், சிவப்பு.
எண்கள்: 1, 3, 5, 6, 8, 9.
பரிகாரம்: நாகரை வழிபடுவது நல்லது. கணபதியையும், துர்க்கையையும் வழிபடவும்.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 10-ல் சனியும் உலவுவது நல்லது. நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். மக்கள் நலம் கவனிப்பின்பேரில் சீராக இருந்துவரும். எதிர்ப்புகள் குறையும். உடன்பிறந்த சகோதரிகள் நலம் புரிவார்கள். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். போட்டிகளில் வெற்றி கிட்டும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். குரு 8-ல் இருப்பதால் சுப காரியங்கள் நிகழக் குறுக்கீடுகள் முளைக்கும். மக்களால் சிறுசிறு பிரச்சினைகள் சூழும். வங்கிகள், சேமிப்பு நிறுவனங்கள், கருவூலப் பணிகளில் இருப்பவர்கள் விழிப்புடன் செயல்பட்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முன்னேற்றம் தடைப்படும். ஜன்ம ராசியில் கேதுவும் 7-ல் ராகுவும் இருப்பதால் சிறுசிறு பிரச்சினைகள் அவ்வப்போது ஏற்படும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 25, 26, 28. .
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடக்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை, பச்சை.
எண்கள்: 5, , 6, 8.
பரிகாரம்: அஷ்டமத்தில் உலவும் குருவுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது அவசியமாகும். நாக பூஜை செய்யவும்.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும், 4-ல் புதனும் 6-ல் ராகுவும் 7-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். மனத்தில் துணிவு பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிபுரிவார்கள். அலைச்சல் கூடும் என்றாலும் அதற்கான பயன் கிடைக்கும். மார்பு, இதயம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். நண்பர்களாலும் உறவினர்களாலும் நலம் உண்டாகும். புதிய சொத்துகள் சேரும். மக்களால் மன மகிழ்ச்சி கூடும். பண நடமாட்டம் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மகப்பேறு பாக்கியம் கிட்டும். திரவப் பொருட்களால் லாபம் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். கலைத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள் சேரும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகுத் துறைகள் லாபம் தரும். பயணத்தின் மூலம் முக்கியமான காரியம் நிறைவேறும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சிலருக்கு மந்திர சித்தி ஏற்படும். குருவருளால் திருவருள் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 25, 26, 28.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு, வடக்கு.
நிறங்கள்: புகைநிறம், இளநீலம், வெண்மை, பச்சை
எண்கள்: 3, 4, 5, 6.
பரிகாரம்: சூரியனை வழிபடவும். ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்யவும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago