யோகியின் செயல்கள்

By ஸ்ரீ அரவிந்தர்

அகங்காரம் நீங்கி இதயமும் தூயதான பொழுது செயல்களெல்லாம் அந்தராத்மாவின் ஆணைகளிலிருந்தும் ஆன்மாவின் சிகரங்களிலிருந்தும், ஆழங்களிலிருந்தும் வரும். இதுவரை நமது இதயத்துள் ரகசியமாய் இருந்த ஜீவநாதனே நேரே வெளிப்படையாகச் செயல்களை நடத்துவான்.

செயல்கள், நம்பிக்கைகள் சம்பந்தமான எல்லா வழக்கமான வழிகளையும், புறத்தேயிருந்து விதிக்கப்படும் எல்லா ஒழுக்க விதிகளையும் புற இயற்கை உருவாக்கிய அனைத்தையும் விட்டுவிட்டு இறைவன் ஒருவனையே சரண்புகு என்பதே கீதை யோகிக்குக் கூறும் முடிவான உத்தமமான ரகசிய வார்த்தை.

ஆசை, பற்று ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, எல்லா ஜீவன்களுடனும் ஒன்றாகி, ஆனந்த சத்யத்திலும் தூய்மையிலும் வாழ்ந்து, தனது உள் உணர்வின் மிக ஆழங்களிலிருந்து செயல்பட்டு, தனது மிக உயர்ந்த தெய்வீக ஆத்மாவால் ஆளப்படும்போது அவனது செயல்களெல்லாம் அவனுள் உள்ள தெய்வ ஆத்மா மூலம் நெறிப்படுத்தப்படும்.

இச்சக்தி ஞான முயற்சியில் ஈடுபட்டாலும், போர்புரியும் போதும், அன்பு செலுத்தும்போதும், தொண்டுகள் ஆற்றினாலும், வேறு எத்தொழில் புரிந்தாலும் தனது தெய்வத்தன்மையை இழப்பதில்லை. அதன் இயக்கமெல்லாம் இறைவன் இப்புவியில் வெளிப்பட்டு விளங்குவதையே, காலங்கடந்த பொருள் காலத்துள் பரிணமிப்பதையே குறியாகக் கொண்டு இயங்கும்.



ஸ்ரீ அரவிந்தர் - ஸ்ரீ அன்னையின் பொன்மொழிகள்,
காந்திமதி கிருஷ்ணன்,
வெளியீடு: நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு,
பாண்டிபஜார், தி.நகர். சென்னை.17 தொலைபேசி: 044- 24334397,
விலை: ரூ.100/-

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE