விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும், 11-ல் ராகுவும், 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பு. நல்லவர்களின் தொடர்பால் நலம் சேரும். வாழ்க்கைத் துணைவரால் ஓரிரு நன்மைகள் உண்டாகும். தந்தையால் சிறு சங்கடம் ஏற்படும். வாரப் பின்பகுதியில் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். வியாபாரத்தில் வளர்ச்சி காணச் சந்தர்ப்பம் உருவாகும். வேலைப் பளு சற்று கூடவே செய்யும். உழைப்புக்குப் பின்வாங்காமல் அதிகம் பாடுபட்டால் பயன் பெறலாம். 25-ம் தேதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதால் நூதனப் பொருட்சேர்க்கை நிகழும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். 26-ம் தேதி முதல் புதன் 3-ம் இடம் மாறுவதால் வியாபாரத்தில் அதிக கவனம் தேவை.
அதிர்ஷ்ட தேதிகள்: டிச. 27, 28, 30.
திசைகள்: தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், இளநீலம், பச்சை.
எண்கள்: 4, 5, 6.
பரிகாரம்: முருகனை வழிபடவும். சனிக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு அதிபதி குரு 9-ல் உலவுவது விசேஷமாகும். சூரியனும் குருவும் பரிவத்தனையாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் உங்கள் அந்தஸ்தும், புகழும் மதிப்பும் உயரும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். பிள்ளைகளால் பெற்றோருக்கும் பெற்றோரால் பிள்ளைகளுக்கும் அனுகூலம் உண்டாகும். வழக்கில் வெற்றி கிடைக்கும். செய்தொழில் விருத்தி அடையும். சுப காரியங்கள் நிகழும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். பொருளாதார நிலை உயரும். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். நிலபுலங்களால் ஆதாயம் உண்டு. இயந்திரப் பணிகள் லாபம் தரும். விவசாயிகள், பொதுப் பணியாளர்கள் பொறுப்புணர்ந்து காரியமாற்றிவருவது நல்லது. 25-ம் தேதி முதல் சுக்கிரன் 12-ம் இடம் மாறுகிறார். சனியோடு கூடுகிறார். சிக்கனம் தேவை. 26-ம் தேதி முதல் வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம்.
அதிர்ஷ்ட தேதிகள்: டிச. 25, 30.
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: புகை நிறம், பொன் நிறம், சிவப்பு.
எண்கள்: 1, 3, 4, 5, 6, 9.
பரிகாரம்: சனிப் பிரீதி செய்யவும். ஊனமுள்ளவர்களுக்கு உதவவும்.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 10-ல் செவ்வாய், சுக்கிரனும், 11-ல் சனி உலவுவது நல்லது. மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். செயலில் வேகம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல மாற்றம் உண்டாகும். ஊதிய உயர்வு பெற வாய்ப்பு உண்டாகும். பொது நலப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். தொழிலாளர்களது நோக்கம் நிறைவேறும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துகள் சேரும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். மக்களால் சில இடர்ப்பாடுகளும் செலவுகளும் மன அமைதிக் குறைவும் உண்டாகும். தந்தை நலனில் அக்கறை தேவை. 25-ம் தேதி முதல் சுக்கிரன் 11-ம் இடம் மாறுவது சிறப்பு. 26-ம் தேதி முதல் தர்மப் பணிகள், தெய்வப் பணிகளில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும்.
அதிர்ஷ்ட தேதிகள்: டிச. 25, 27, 28.
திசைகள்: மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: நீலம், மெரூன்.
எண்கள்: 6, 7, 8, 9.
பரிகாரம்: சூரியன், குருவுக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்யவும்.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் சனி 10-ல் உலவுவது சிறப்பு. சூரியன், புதன், குரு, சுக்கிரனின் சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் சுப காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். புதிய பொருட்கள் சேரும். மகப்பேறு அல்லது பிள்ளைகளால் பாக்கியம் உண்டாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். நல்லவர்களின் தொடர்பு கிட்டும். அதனால் அனுகூலமும் உண்டாகும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். தந்தையால் நலம் உண்டாகும். கலைஞர்களுக்கு வெற்றிகள் குவியும். தான, தர்மப் பணிகளில் ஈடுபாடு கூடும். பொதுநலப் பணியாலர்களுக்கு மதிப்பு உயரும். 26-ம் தேதி முதல் சுக்கிரன் 10-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. 26-ம் தேதி முதல் புதன் 12-ம் இடம் மாறுவதால் வியாபாரத்தில் அதிக கவனம் தேவை.
அதிர்ஷ்ட தேதிகள்: டிச. 25, 27, 28.
திசைகள்: வடகிழக்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: பச்சை, நீலம், பொன் நிறம், ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 5, 6, 8.
பரிகாரம்: சரபேஸ்வரரை வழிபடவும்.
மீன ராசி வாசகர்களே
சூரியன், புதன், சுக்கிரனின் சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி கிட்டும். உடன்பிறந்த சகோதரியால் அனுகூலம் ஏற்படும். நல்ல தகவல் ஒன்று வார முன்பகுதியில் வந்து சேரும். நண்பர்கள், உறவினர்களது சந்திப்பு நிகழும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். மாணவர்களது நிலை உயரும். அறிவாற்றல் பளிச்சிடும். நிறுவன, நிர்வாகத் துறையினருக்கு முன்னேற்றமான பாதை புலப்படும். அரசு உதவி கிடைக்கும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் விளையாட்டுகளில் ஈடுபடும்போதும் பாதுகாப்பு அவசியம். 25-ம் தேதி முதல் புதிய பொருட்கள் சேரும். 27-ம் தேதி முதல் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட தேதிகள்: டிச. 25, 27, 28, 30.
திசைகள்: வடமேற்கு, வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, சிவப்பு, பச்சை, வான் நீலம்.
எண்கள்: 1, 5, 6.
பரிகாரம்: குரு, தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடவும். சர்ப்ப சாந்தி செய்து கொள்ளவும்.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், 6-ல் சனி, 10-ல் கேது உலவுவது சிறப்பு. வார ஆரம்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தை விட்டுச் சிலர் பிரிந்திருக்க நேரலாம். நண்பர்கள், உறவினர்களால் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். வார நடுப்பகுதியில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். முக்கியமான ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். வாரப் பின்பகுதியில் பணப் புழக்கம் அதிகமாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு உண்டாகும். உழைப்பு வீண்போகாது. கலைஞர்களுக்கு 24-ம் தேதி வரை சுபிட்சம் நிறைந்திருக்கும். அதன் பிறகு சுக்கிரன் 6-ம் இடம் மாறுவதால் எதிர்ப்புகள் கூடும். 26-ம் தேதி முதல் புதன் 8-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு நல்ல திருப்பம் உண்டாகும். பொது நலப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பாராட்டுகள் குவியும்.
அதிர்ஷ்ட தேதிகள்: டிச. 25, 27, 28, 30.
திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, மேற்கு.
நிறங்கள்: நீலம், மெரூன்.
எண்கள்: 6, 7, 8.
பரிகாரம்:
துர்கையம்மனையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது நல்லது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
7 hours ago
ஆன்மிகம்
9 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago