வார ராசிபலன் 20-10-2016 முதல் 26-10-2016 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

By சந்திரசேகர பாரதி

மேஷம்

உங்கள் ராசிக்கு 8-ல் சுக்கிரனும் 11-ல் கேதுவும் உலவுவது நல்லது. குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்துபசாரங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். நல்ல தகவல் வந்து சேரும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மக்களாலும் வாழ்க்கைத்துணைவராலும் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை.

பெரியவர்களின் மனம் குளிருமாறு நடந்து கொள்ளவும். ஆன்மிகம், அறநிலையப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள் தெளிவு பெறுவார்கள். 25-ம் தேதி முதல் செவ்வாய் 10-ம் இடத்திற்கு மாறுவதால் செய்தொழிலில் அபிவிருத்தி காணலாம். நிலபுலங்களின் சேர்க்கையோ, அதனால் ஆதாயமோ பெற வாய்ப்பு உண்டாகும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். உத்தியோகஸ்தர்களும் தொழிலாளர்களும் அதிகம் பாடுபட வேண்டிவரும். உழைப்புக்குப் பின்வாங்கலாகாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 23, 25, 26.

திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, தெற்கு.

‎நிறங்கள்: மெரூன், இளநீலம், சிவப்பு.

எண்கள்: 6, 7, 9.‎

பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கும் ஆஞ்சநேயருக்கும் அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்யவும்.



ரிஷபம்

உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் 6-ல் சூரியனும் புதனும் 10-ல் கேதுவும் உலவுவது நல்லது. செல்வாக்கும் மதிப்பும் உயரும். முக்கியமான காரியங்கள் இனிதே நிறைவேறும். பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு உதவி புரிவார்கள். பணவரவு அதிகரிக்கும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகளில் ஆதாயம் கிடைக்கும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். ஆசிரியர்களது நிலை உயரும். மருத்துவர்கள் புகழ் பெறுவார்கள்.

கணவன் மனைவி இடையே சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. இயந்திரப்பணியாளர்களும் பொறியாளர்களும் பொறுப்புடன் செயல்பட்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். கலைஞர்களுக்கு எதிர்ப்புக்கள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் மனஅமைதி குறையும். மக்கள் நலம் சீராக இருந்துவரும். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். 25-ஆம் தேதி முதல் சகோதர நலம் சீராகும். புனிதப்பணிகளுக்காகச் செலவு செய்வீர்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 23, 25, 26.

திசைகள்: வடமேற்கு, வடக்கு, கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: மெரூன், பச்சை, பொன் நிறம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 5, 7

பரிகாரம்: பராசக்தியையும் முருகனையும் வழிபடவும்.



மிதுனம்

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 6-ல் சனியும் உலவுவதால் வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். தோல் பொருட்கள் லாபம் தரும். உழைப்புக்குரிய பயன் கிடைத்துவரும். சமுதாய நலப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பொருள் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தந்தையாலும் வாழ்க்கைத்துணைவராலும் பிரச்சினைகள் சூழும். பக்குவமாகச் சமாளிக்கவும். நெருங்கிய நண்பர்கள் உதவுவார்கள். செய்தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம்.

கலைத்துறையினருக்கு முன்னேற்றம் தடைப்படும். ஆடவர்களுக்குப் பெண்களால் தொல்லைகள் ஏற்படும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் பங்குதாரர்களை நம்பி முக்கியப் பொறுப்புக்களை ஒப்படைக்க வேண்டாம். 25-ம் தேதி முதல் செவ்வாய் 8-ம் இடத்திற்கு மாறுவது குறை. எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. வீண்வம்பு கூடாது. சகோதர நலனில் கவனம் தேவைப்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 22, 25, 26.

திசைகள்: தென்மேற்கு, வடக்கு, மேற்கு.

நிறங்கள்: புகை நிறம், பச்சை, கருநீலம்.

எண்கள்: 4, 5, 8.

பரிகாரம்: மகாலட்சுமியையும் சுப்பிரமணியரையும் வழிபடவும்.



கடகம்

உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் 5-ல் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் உலவுவது நல்லது. நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். நிலம், மனை, வீடு, வாகனங்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு அதிகமாகும். கலைஞர்கள் தங்கள் திறமைக்குரிய வளர்ச்சியைக் காண்பார்கள். இயந்திரங்கள், எரிபொருட்கள், தளவாடங்கள், கட்டடப் பொருட்கள், மின் சாதனங்களால் ஆதாயம் கிடைக்கும். எதிரிகள் கட்டுக்குள் அடங்கி இருப்பார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களில் நல்ல திருப்பம் உண்டாகும்.

குரு பலம் குறைந்திருப்பதால் பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. தொழில் அதிபர்கள், உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். மக்களால் மன அமைதி குறையும். 25-ம் தேதி முதல் செவ்வாய் 7-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. பிறரிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 23, 25, 26.

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, தெற்கு.

நிறங்கள்: வெண்மை, இளநீலம், பச்சை, சிவப்பு.

எண்கள்: 5, 6, 9.

பரிகாரம்: நாகரை வழிபடவும். குரு ஸ்தானத்தில் உள்ளவர்களை வணங்கி அவர்களது ஆசிகளைப் பெறுவது நல்லது.



சிம்மம்

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 3-ல் சூரியனும் 4-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. செய்தொழில் வளர்ச்சி பெறும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். வரவேண்டிய பாக்கிப் பணம் வசூலாகும். கடன் தொல்லை குறையும். மக்களாலும், தந்தையாலும் வாழ்க்கைத்துணைவராலும் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். சுபகாரியங்கள் நிகழ வாய்ப்பு கூடிவரும். எதிர்ப்புக்கள் விலகும். பிரச்சினைகள் தீரும். நல்லவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

அலைச்சலால் உடல் அசதி ஏற்படும். வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். 25-ம் தேதி முதல் செவ்வாய் 6-ம் இடத்திற்கு மாறி, குருவின் பார்வையைப் பெறுவதால் வழக்கு, வியாஜ்ஜியங்களிலும்; போட்டி பந்தயங்களிலும் வெற்றி காண வழிபிறக்கும். எதிர்ப்புக்களின் கரம் வலுக்குறையும். செயலில் வேகம் கூடும். மன உறுதி அதிகமாகும். எண்ணங்கள் ஈடேற வழிபிறக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 22, 25, 26.

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, ஆரஞ்சு, பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 6, 9.

பரிகாரம்: துர்க்கைக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.



கன்னி

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 3-ல் சுக்கிரனும் சனியும், 6-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். பேச்சில் திறமை வெளிப்படும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு கூடும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற இனங்கள் லாபம் தரும். எதிர்ப்புக்களை வெல்லும் சக்தி பிறக்கும். சமுதாய நலப்பணியாளர்கள் புகழ் பெறுவார்கள். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும்.

இயந்திரப்பணியாளர்களும் பொறியாளர்களும் பொறுப்புடன் செயல்படுவது அவசியமாகும். குடும்பத்தில் சிறு பிரச்சினைகள் ஏற்படும். வீண்செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. பயணத்தின்போது பாதுகாப்பு தேவை. அரசியல், நிர்வாகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் காரியமாற்றுவது அவசியமாகும். 25-ம் தேதி முதல் செவ்வாய் 5-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. மக்கள் நலனில் கவனம் தேவைப்படும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 22, 26.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு.

நிறங்கள்: வெண்மை, இளநீலம், மெரூன், பச்சை.

எண்கள்: 5, 6, 7, 8.

பரிகாரம்: துர்க்கைக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்து வழிபடுவது நல்லது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

17 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்