வார ராசிபலன் 12-2-2015 முதல் 18-2-2015 வரை (துலாம் முதல் மீனம் வரை)

By சந்திரசேகர பாரதி

துலாம் ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் 5-ல் சுக்கிரனும், 6-ல் செவ்வாயும் கேதுவும் 10-ல் வக்கிர குருவும் உலவுவதால் மனதிற்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். நண்பர்கள், உறவினர்களது தொடர்பு பயன்படும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வருவாய் கூடப் பெறுவார்கள். கலைத்துறையினருக்கு சுபிட்சம் உண்டாகும்.

ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். புதிய பதவி, பட்டங்கள் சிலருக்கு கிடைக்கும். எந்திரப்பணிகள் லாபம் தரும். போட்டிப் பந்தயங்களில் வெற்றி காணலாம். கடன் கிடைக்கும். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். மக்களால் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். 17-ஆம் தேதி முதல் கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் பிரச்னைகள் சூழும். பக்குவம் தேவை. சமாளிப்பது நல்லது. வாழ்க்கைத்துணைவரின் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 15, 18.

திசைகள்: வடக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, வான் நீலம், பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6, 7, 9.

பரிகாரம்: ஆதவனை வழிபடவும். துர்க்கைக்கு நெய்தீபம் ஏற்றுவது நல்லது.

விருச்சிக ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் 4-ல் சுக்கிரனும் 9-ல் குருவும் 11-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். அரசு சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். பெரியவர்களும் தனவந்தர்களும் ஆதரவாக இருப்பார்கள். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். பட்டம்,பதவிகள் வந்து சேரும். பண வரவு அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி கிட்டும். மக்கள் நலம் சீராகவே இருந்துவரும்.

கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். புதிய ஆடை, அணிமணிகளும் அலங்காரப்பொருட்களும் சேரும். உழைப்புக்கேற்ற பயன் உண்டு. 13-ம் தேதி முதல் அலைச்சல் கூடும். 17-ம் தேதி முதல் சுக்கிரன் ஐந்தாமிடத்திற்கு மாறுவதால் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் உருவாகும். மன மகிழ்ச்சி பெருகும். வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். மக்களுக்காக சுபச் செலவுகளை மேற்கொள்ள வேண்டிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 15, 18.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, வெண்சாம்பல் நிறம், இளநீலம்.

எண்கள்: 1, 3, 4, 6.

பரிகாரம்: செவ்வாய், சனி, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும்.

தனுசு ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 3-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். பேச்சுத்திறன் கூடும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பொருளாதார நிலை உயரும். கணவன், மனைவி உறவு நிலை திருப்திகரமாக இருந்துவரும். தொழில் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவீர்கள். கணிதம், எழுத்து, விஞ்ஞானம் போன்ற துறைகள் ஆக்கம் தரும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும்.

அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகம் லாபம் தரும். பயணம் ஆக்கம் தரும். 13-ம் தேதி முதல் சூரியன் மூன்றாமிடத்திற்கு மாறுவதால் அரசுதவி கிடைக்கும். முக்கியஸ்தர்கள் சந்திப்பு பயன்தரும். 17-ம் தேதி முதல் சுக்கிரன் நான்காமிடத்திற்கு மாறுவதால் புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. கண், கால் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 15, 18.

திசைகள்: வடக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: இளநீலம், பச்சை, வெண்மை.

எண்கள்: 4, 5, 6.

பரிகாரம்:

செவ்வாய், சனி, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யவும்.

மகர ராசி வாசகர்களே!

உங்கள் ராசிநாதன் சனி 11-ல் இருப்பது சிறப்பாகும். செவ்வாய், குரு, சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். துணிச்சல் கூடும். தன்னம்பிக்கை பெருகும். போட்டிப் பந்தயங்களிலும் வழக்குகளிலும் வெற்றி கிட்டும். சமுதாய நல முன்னேற்றப்பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். விவசாயம் லாபம் தரும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்களால் ஆதாயம் கிடைக்கும். கறுப்பு, கருநீல நிறப்பொருட்கள் லாபம் தரும்.

எந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். சொத்துக்களின் சேர்க்கை நிகழும். குடும்ப நலம் திருப்தி தரும். சுப காரியங்கள் நிகழும். நல்லவர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். பேச்சில் இனிமை கூடும். வேலையில்லாதவர்களுக்கு தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். அலைச்சல் வீண்போகாது. கலைத்துறை ஊக்கம் தரும். பெண்களுக்கு உற்சாகம் பெருகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவருக்கு மனத்தெளிவு பிறக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 15, 18.

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, வடமேற்கு.

நிறங்கள்: நீலம், சிவப்பு, வெண்மை, மெரூன்.

எண்கள்: 6, 7, 8, 9.

பரிகாரம்: சூரிய வழிபாடு செய்வது நல்லது.



கும்ப ராசி வாசகர்களே!

உங்கள் ராசியில் சுக்கிரனும் 10-ல் சனியும் உலவுவது சிறப்பாகும் குரு 6-ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பது நல்லது. தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சமூகநலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பாராட்டுகள் குவியும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் உழைப்புக்குரிய பயன் உண்டு. கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும்.

மாதர்களது எண்ணம் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். குடும்பத்தில் கலகமும் குழப்பமும் ஏற்படும். வீண்வம்பு கூடாது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. அரசு விவகாரங்களில் விழிப்புடன் ஈடுபடுவதன் மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். தந்தை நலனிலும் சகோதர நலனிலும் கவனம் செலுத்த வேண்டிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 14 (பிற்பகல்), 15, 18.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு.

நிறங்கள்: வெண்மை, நீலம்.

எண்கள்: 6, 8

பரிகாரம்: நவக்கிரக வழிபாடு நலம் தரும். கண் பார்வையற்றவர்களுக்கு உதவுவது நல்லது.

மீன ராசி வாசகர்களே!

உங்கள் ராசிநாதன் குரு 5-ல் உலவுவது சிறப்பாகும். சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். எதிர்ப்புக்கள் அடங்கும். பொருளாதார நிலை உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மக்களாலும் தந்தையாலும் நலம் உண்டாகும்.

அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு கூடும்.

13-ம் தேதி முதல் சூரியன் 12-ம் இடத்திற்கு மாறுவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கண், கால் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். தந்தை நலனில் கவனம் தேவைப்படும். எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 15, 18 (பகல்).

திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: இளநீலம், பச்சை, ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 5, 6.

பரிகாரம்: விநாயகரையும், துர்க்கையையும் வழிபடுவது நல்லது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

22 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்