மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், புதன், ராகு ஆகியோர் சஞ்சரிப்பது சிறப்பாகும். 4-ல் உள்ள குரு 8-ல் சஞ்சரிக்கும் உங்கள் ராசிநாதனையும் 10, 12-ம் இடங்களையும் பார்ப்பதால் மதிப்புக்கும் அந்தஸ்துக்கும் குறைவிராது. நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். வீண் செலவுகள் குறையும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத திடீர்ப் பொருள் வரவு வாரப் பின்பகுதியில் உண்டாகும்.
13-ம் தேதி முதல் செவ்வாய் 9-ம் இடம் மாறுவதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். அரசியல், நிர்வாகம், வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காணமுடியும். 6-ல் சுக்கிரனும் 7-ல் சனியும் இருப்பதால் வாழ்க்கைத் துணையின் நலனில் கவனம் தேவை. கலைஞர்கள், மாதர்கள் ஆகியோர் விழிப்புடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். ஆடவர்களுக்குப் பெண்களால் தொல்லைகள் சூழும். பக்குவமாகச் சமாளிக்கவும்.
அதிர்ஷ்டமான நாட்கள்: அக்டோபர் 10, 12, 13.
திசைகள்: கிழக்கு, வடக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: சிவப்பு, பச்சை, புகை நிறம், ஆரஞ்சு.
எண்கள்: 1, 4, 5, 9.
பரிகாரம்: லட்சுமி அஷ்டகம் சொல்வது நல்லது. ஏழைப் பெண்களுக்கு உதவவும். ஸ்ரீசூக்த ஜபம் செய்வது நல்லது. லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும், 6-ல் சனியும், 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். முக்கியமான ஓரிரு எண்ணங்கள் இப்போது நிறைவேறும். பிள்ளைகளால் அளவோடு நலம் உண்டாகும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் ஈடேற வழிபிறக்கும். கலைஞர்கள் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள். ஆன்மிக, அறநிலையப் பணியாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். 3-ல் குருவும், 5-ல் சூரியன், ராகு ஆகியோரும் உலவுவதால் பிள்ளைகள் நலனில் கவனம் தேவை.
பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் விழிப்புடன் செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். 13-ம் தேதி முதல் செவ்வாய் 8-ம் இடம் மாறுவதால் எக்காரியத்திலும் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது. எதிரிகளால் தொல்லைகள் ஏற்படும். இயந்திரப்பணியாளர்கள், இஞ்சினீயர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது அவசியம். உடன்பிறந்தவர்களுக்கும் உங்களுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்டமான நாட்கள்: அக்டோபர் 12, 13.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு, மேற்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, பச்சை, நீலம்.
எண்கள்: 5, 6, 7, 8.
பரிகாரம்: குருப் பிரீதி செய்யவும். துர்கைக்கு நெய் விளக்கேற்றி வழிபடவும். அந்தணர்கள், வேத விற்பன்னர்களுக்கு உதவுவது நல்லது.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 4-ல் புதனும், சுக்கிரனும், 6-ல் செவ்வாயும், 10-ல் கேதுவும் சஞ்சரிப்பதால் எடுத்த காரியங்களில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பணப் புழக்கம் திருப்திகரமாக இருந்துவரும். மனதில் துணிவு பிறக்கும். தன்னம்பிக்கை கூடும். பிரச்சினைகள் எளிதில் தீரும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் கிடைத்துவரும். நல்லவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்ப நலம் திருப்தி தரும். சுப காரியங்கள் நிகழும். எதிரிகளின் கரம் வலுக்குறையும்.
தெய்வப் பணிகள் நிறைவேறும். சாதுக்களின் தரிசனம் கிடைக்கும். 13-ம் தேதி முதல் செவ்வாய் 7-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. பிறரிடம் சுமுகமாகப் பேசிப் பழகுவது அவசியம். சண்டை, சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரிகளுக்கு வாரப் பின்பகுதி சிறப்பானதாக அமையும். மாணவர்களது நிலை உயரும். 4-ல் சூரியனும், ராகுவும் உலவுவதால் அலைச்சலைத் தவிர்க்க இயலாமல் போகும். அதனால் உடல் சோர்வு ஏற்படும். தாய் நலனில் கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்டமான நாட்கள்: அக்டோபர் 10, 12, 13.
திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, தெற்கு, வடக்கு.
நிறங்கள்: இளநீலம், வெண்மை, மெரூன், பச்சை, பொன் நிறம், மஞ்சள்.
எண்கள்: 3, 5, 6, 7, 9.
பரிகாரம்: சூரிய நாராயணன், துர்கையம்மனை வழிபடவும்.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும், ராகுவும் உலவுவது சிறப்பாகும். செவ்வாய் 5-ல் இருப்பது கோசாரப்படி சிறப்பாகாது என்றாலும் அவர் தன் சொந்த வீட்டில் அமர்ந்து குருவின் பார்வையைப் பெறுவதால் நலம் புரிவார். வெளியூர், தொலைதூரத் தொடர்பு ஓரளவுக்குப் பயன்படும். செய்து வரும் தொழிலில் வளர்ச்சி காணலாம். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். முக்கியஸ்தர்கள் உங்களுக்கு உதவுவார்கள். எலெக்ட் ரானிக், கம்ப்யூட்டர், தகவல் தொடர்பு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும்.
பிள்ளைகளால் அளவோடு நலம் உண்டாகும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். 13-ம் தேதி முதல் செவ்வாய் 6-ம் இடம் மாறுவதால் செயலில் வேகம் பிறக்கும். காரியத்தில் வெற்றி கிட்டும். நிலபுலங்களின் சேர்க்கை நிகழும். எதிர்ப்புக்கள் விலகும். வழக்கில் நல்ல திருப்பத்தைக் காணலாம். வாரக் கடைசியில் செலவுகள் சற்று கூடும். சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது நல்லது.
அதிர்ஷ்டமான நாட்கள்: அக்டோபர் 10, 12, 13.
திசைகள்: தென்மேற்கு, கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: சாம்பல் நிறம், ஆரஞ்சு, சிவப்பு.
எண்கள்: 1, 4, 6, 9.
பரிகாரம்: அர்த்தாஷ்டம சனியின் காலமிது என்பதால் சனிப் பிரீதி செய்து கொள்வது நல்லது.
சிம்ம ராசி நேயர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும், சுக்கிரனும், 3-ல் சனியும், 4-ல் செவ்வாயும் உலவுவதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வருவாய் கூடும். பேச்சில் திறமை வெளிப்படும். கலைத்துறையினருக்கு அளவோடு நலம் உண்டாகும். தொழிலாளர்களது கோரிக்கைகள் சில இப்போது நிறைவேறும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் சலசலப்புக்கள் குறையும். சுபச் செலவுகள் அதிகமாகும். 2-ல் சூரியனும், ராகுவும் இருப்பதாலும் 8-ல் கேது சஞ்சரிப்பதாலும் பிற மொழி, மத, இனக்காரர்களால் பிரச்சினைகள் சூழும்.
ஏற்றுமதி-இறக்குமதி இனங்களைச் சேர்ந்தவர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. 13-ம் தேதி முதல் செவ்வாய் 5-ம் இடம் மாறுவதால் ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மக்களால் அனுகூலம் உண்டாகும். குரு 12-ல் இருப்பதால் பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. பெரியவர்களின் மனம் குளிரும்படி நடந்து கொள்வது நல்லது.
அதிர்ஷ்டமான நாட்கள்: அக்டோபர் 10, 12, 13.
திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு.
நிறங்கள்: நீலம், சிவப்பு, வெண்மை.
எண்கள்: 5, 6, 8, 9.
பரிகாரம்: சர்ப்ப சாந்தி செய்து கொள்ளவும். ஆதித்ய ஹ்ருதயம் படிப்பது நல்லது. வேத விற்பன்னர்களுக்கு உதவவும்.
கன்னி ராசி நேயர்களே
உங்கள் ராசியில் சுக்கிரனும், 3-ல் செவ்வாயும், 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். 11-ம் தேதி முதல் ராசிநாதன் புதன் வக்கிர நிவர்த்தி பெற்று ராசியில் சஞ்சர்ப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் முக்கியமான காரியங்கள் இப்போது நிறைவேறும். தர்ம சிந்தனை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். பெண்களின் நோக்கம் நிறைவேறும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். மருத்துவம், ரசாயனம், விஞ்ஞானம், ஆன்மிகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு சுபிட்சம் கூடும். பொருள் வரவு அதிகரிக்கும். மன உற்சாகம் பெருகும்.
துணிவோடும், தன்னம்பிக்கையோடும் செயல்பட்டு காரியத்தில் வெற்றி காண்பீர்கள். வாரப் பின்பகுதி சிறப்பாக அமையும். தெய்வப் பணிகளிலும் தர்மப் ணிகளிலும் ஈடுபாடு கூடும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். 13-ம் தேதி முதல் செவ்வாய் 4-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. சுகம் குறையும். எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. தாய் நலனில் கவனம் தேவை. பயணத்தின்போது விழிப்புடன் இருக்கவும்.
அதிர்ஷ்டமான நாட்கள்: அக்டோபர் 12, 13.
திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, வடக்கு.
நிறங்கள்: வெண்மை, இளநீலம், பொன் நிறம், சிவப்பு.
எண்கள்: 3, 5, 6, 9.
பரிகாரம்: ராகு, கேது, சூரியன், சனி ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
14 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago