மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் செவ்வாய் சுக்கிரனுடன் கூடி ஜன்ம ராசியில் இருப்பதாலும் 6-ம் இடத்தில் ராகு உலவுவதாலும் செல்வாக்கும் மதிப்பும் உயரும். வசதிகள் பெருகும். புதியவர்களது சந்திப்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். பயணத்தின் மூலம் முக்கியமான காரியங்கள் இப்போது நிறைவேறும். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் அனுகூலம் உண்டாகும்.
கூட்டுத் தொழில் லாபம் தரும். எதிர்ப்புகள் குறையும். சூரியன், புதன், கேது ஆகியோர் 12-ல் உலவுவதால் அரசுப் பணியாளர்களும் அரசியல்வாதிகளும் பொறுப்புணர்ந்து காரியமாற்றுவது நல்லது. தந்தை நலனில் கவனம் தேவை. சனி 8-ல் இருப்பதால் அதிகம் பாடுபட வேண்டிவரும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் பிரச்சினைகள் அதிகரிக்கும். வாரப் பின்பகுதியில் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.
அதிர்ஷ்டமான தேதி: ஏப். 6.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: புகை நிறம், சிவப்பு, இளநீலம்.
எண்கள்: 4, 6, 9.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடவும்.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் வக்கிர குருவும், 11-ல் சூரியன், புதன், கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பு. நண்பர்கள், உறவினர்கள் உதவுவார்கள். மாணவர்களது நிலை உயரும். அரசாங்கத்தில் எதிர்பார்த்திருந்த காரியம் இப்போது நிறைவேறும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகளால் ஆதாயம் கிடைக்கும். 7-ல் சனி, 12-ல் செவ்வாய் இருப்பதால் கணவன்-மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும்.
6-ம் தேதி முதல் புதன் 12-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. 7-ம் தேதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உடல் நலம் சீராகும். வாழ்க்கைத்துணையால் அனுகூலம் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்.6, 8.
திசைகள்: வடமேற்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம், பச்சை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 5, 6, 7.
பரிகாரம்: விஷ்ணு துர்கை, முருகனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 6-ல் சனியும், 10-ல் சூரியன், புதன், கேதுவும், 11-ல் செவ்வாய், சுக்கிரனும் உலவுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். அலைச்சல் வீண்போகாது. பணவரவு அதிகமாகும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்துவரும். தொழிலாளர்கள், உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். இஞ்ஜீனியர்களது நிலை உயரும்.
எதிரிகள் ஏமாந்து போவார்கள். வழக்கில் வெற்றி பெறச் சந்தர்ப்பம் உருவாகும். ஆசிரியர்கள் போற்றப்படுவார்கள். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். 6-ம் தேதி முதல் புதன் 11-ம் இடம் மாறுவதால் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். 7-ம் தேதி முதல் சுக்கிரன் 12-ம் இடம் மாறுவதால் வசதிகள் பெருகும். சுபச் செலவுகள் கூடும். பிள்ளைகள் முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய வேண்டிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 6, 8.
திசைகள்: தென்மேற்கைத் தவிர இதர திசைகள்.
நிறங்கள்: பச்சை, நீலம்.
எண்கள்: 1, 3, 5, 6, 7, 8, 9.
பரிகாரம்: ராகு கால துர்கை வழிபாடு நலம் தரும்.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 10-ல் செவ்வாயும் உலவுவதால் பண வரவு சற்று கூடும். எதிரிகள் அடங்குவார்கள். செய்து வரும் தொழிலில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு வாய்ப்புக் கூடிவரும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பொறியியல், சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும்.
விருதுகள், பாராட்டுகள், சன்மானம் ஆகியவை கிடைக்கும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துகள் சேரும். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் விருத்தி அடையும். சுகானுபவம் ஏற்படும். 6-ம் தேதி முதல் புதன் 10-ம் இடம் மாறுவதால் வியாபாரம் சிறக்கும். மாணவர்களது நிலை உயரும். 7-ம் தேதி முதல் சுக்கிரன் 11-ம் இடம் மாறுவதால் சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும். மன மகிழ்ச்சி பெருகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 6, 8.
திசைகள்: தெற்கு, தென்மேற்கு.
நிறங்கள்: சிவப்பு, புகை நிறம்.
எண்கள்: 4, 9.
பரிகாரம்: சனிப் பிரீதி செய்து கொள்வது நல்லது. ஆஞ்சநேயர், விநாயகரை வழிபடவும்.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 8-ல் புதனும், 9-ல் செவ்வாய், சுக்கிரனும், 12-ல் வக்கிர குருவும் உலவுவது சிறப்பு. புத்திசாலித்தனம் கூடும். தான, தர்மப்பணிகளிலும் தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு அதிகரிக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். தொலைதூரத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்களால் நலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும்.
ராசிநாதன் சூரியன் 8-ல் கேதுவுடன் சஞ்சரிப்பதால் மனதில் ஏதேனும் சலனம் ஏற்படும். 2-ல் ராகு இருப்பதால் வீண் வாதத்தைத் தவிர்க்கவும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. சனி 4-ல் இருப்பதால் அலைச்சல் அதிகமாகும். உடல் சோர்வு ஏற்படும். 6-ம் தேதி முதல் புதன் 9-ம் இடம் மாறுவதும், சுக்கிரன் 10-ம் இடம் மாறுவதும் சிறப்பாகாது. இருந்தாலும் தொழில் ரீதியாக வளர்ச்சியைக் காணமுடியும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்.6, 8.
திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: இளநீலம், பொன் நிறம்.
எண்கள்: 3, 6, 9.
பரிகாரம்: ராசியாதிபதி சூரியன் 8-ல் இருப்பதால் சூரிய வழிபாடு அவசியம். சர்ப்ப சாந்தி செய்து கொள்ளுங்கள்.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும், 8-ல் சுக்கிரனும், 11-ல் குருவும் உலவுவது சிறப்பு. வார ஆரம்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அலைச்சல் கூடும். உடல் அசதி உண்டாகும். வாரப் பின்பகுதியில் பணப் புழக்கம் அதிகரிக்கும். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். 6-ம் தேதி முதல் புதன் 8-ம் இடம் மாறுவதால் வியாபாரம் பெருகும். 7-ம் தேதி முதல் சுக்கிரன் 9-ம் இடம் மாறி, பலம் பெறுவதால் தொலைதூரத் தொடர்பு ஆக்கம் தரும்.
புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். ஜன்ம ராசியில் ராகுவும், 7-ல் சூரியன், கேது ஆகியோரும் உலவுவதால் பிறரிடம் சுமுகமாகப் பேசிப் பழகுவது நல்லது. எதிலும் அவசரம் கூடாது. நிதானம் மிகவும் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 6, 8.
திசைகள்: மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, நீலம், பொன் நிறம்.
எண்கள்: 3, 6, 8.
பரிகாரம்: சூரியன், செவ்வாய், ராகு, கேதுவுக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது. நாகரை வழிபடவும். சூரிய நமஸ்காரம் செய்யவும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
2 hours ago
ஆன்மிகம்
4 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago