துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 11-ல் ராகுவும், 12-ல் வக்கிர குருவும் உலவுவது நல்லது. இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லை. சுகமும் சந்தோஷமும் குறையும். நண்பர்கள், உறவினர்களால் பிரச்சினைகள் சூழும். மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். மறதியால் அவதி உண்டாகும். வயிறு, கண், கால் பாதம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். எதிர்ப்புகள் இருக்கும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். உடன்பிறந்தவர்களால் அனுகூலமிராது.
சண்டை, சச்சரவுகள் சற்று அதிகமாகும். அரசுப் பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. தந்தை நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். எக்காரியத்திலும் அவசரம் கூடாது. நிதானமாக யோசித்து ஈடுபடுவதன் மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். எரிபொருள், இயந்திரம், மின் சாதனங்கள் பயன்படுத்தும்போது எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 18 (முற்பகல்), 21, 22.
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: சாம்பல்நிறம், பொன் நிறம். l எண்கள்: 3, 4.
பரிகாரம்: ஸ்ரீலட்சுமி கணபதியை வழிபடவும்.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 6-ல் புதனும் 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். நல்லவர்கள் உங்களுக்கு நலம் புரிவார்கள். நல்ல காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பொருளாதார நிலை உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். பெண்களுக்கும் கலைஞர்களுக்கும் சுபிட்சம் கூடும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். திரவப் பொருட்கள் லாபம் தரும். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.
வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் ஆக்கம் தரும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். ஜன்ம ராசியில் வக்கிரச் சனி உலவுவதால் உடல் நலம் பாதிக்கும். அதிகம் உழைக்க வேண்டிவரும். 4-ல் கேது இருப்பதால் சுகம் குறையும். தாய் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். நிலபுலங்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்பு தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 18 (முற்பகல்), 21, 22.
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், பொன் நிறம், வெண்மை. l எண்கள்: 3, 4, 5, 6.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடவும்.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 4-ல் சுக்கிரனும் 6-ல் சூரியனும் செவ்வாயும், 10-ல் வக்கிர குருவும் உலவுவது நல்லது. குடும்பத்தில் குதூகலம் கூடும். கேளிக்கைகளிலும் விருந்துகளிலும் ஈடுபாடு அதிகரிக்கும். எதிரிகள் விலகிப் போவார்கள். போட்டிகள், விளையாட்டுகள், வழக்குகளில் வெற்றி காணச் சந்தர்ப்பம் உருவாகும். நண்பர்களால் நலம் ஏற்படும். நிலம், மனை, வீடு, வாகனச் சொத்துக்கள் சேரும்.
சொத்துக்கள் மூலம் அதிக ஆதாயமும் கிடைக்கும். மாதர்களது எண்ணம் ஈடேறும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். மக்கள் நலம் திருப்தி தரும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களது நிலை உயரும். எரிபொருட்கள், இயந்திரங்கள், மின் சாதனங்கள், தளவாடங்கள், கட்டிடப் பொருட்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 18 (முற்பகல்), 21, 22, 24.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை, சிவப்பு. l எண்கள்: 1, 3, 5, 6, 7, 9.
பரிகாரம்: சனிப் பிரீதி செய்து கொள்வது நல்லது.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 4-ல் புதனும் 9-ல் குருவும் 11-ல் சனியும் உலவுவது நல்லது. மதிப்பும் அந்தஸ்தும் உயரும். நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். நண்பர்களாலும் உறவினர்களாலும் அனுகூலம் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். தெய்வப் பணிகள் நிறைவேறும். தான, தர்மப் பணிகளில் ஈடுபாடு கூடும் பிறருக்குத் தாராளமாக உதவுவீர்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.
சமுதாய நலப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். 5-ல் சூரியனும் செவ்வாயும் இருப்பதால் மக்கள் நலனில் கவனம் தேவைப்படும். சிலருக்கு வயிறு, இதயம் சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு விலகும். 2-ல் கேதுவும் 8-ல் ராகுவும் இருப்பதால் வீண் விவகாரங்களில் ஈடுபடலாகாது.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 18 (முற்பகல்), 21, 22, 24.
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடகிழக்கு, வடக்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம், பச்சை. l எண்கள்: 3, 5, 6, 8.
பரிகாரம்: விநாயகரையும் துர்க்கையையும் வழிபடுவது நல்லது.
கும்பம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 10-ல் சனியும் உலவுவது நல்லது. குரு 8-ல் உலவினாலும்கூட வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். செல்வாக்கும் மதிப்பும் உயரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். பொது நலப் பணிகளில் ஈடுபாடு கூடும். பண வரவு அதிகமாகும் என்றாலும் செலவுகளும் கூடும். சிக்கனம் தேவை. பேச்சில் இனிமை தவழும். முக வசீகரம் பளிச்சிடும். ஜலப் பொருட்கள் லாபம் தரும்.
ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். சூரியன், செவ்வாய், புதன், ராகு, கேதுவின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் வீண் அலைச்சல் ஏற்படும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 21, 22, 24.
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை. l எண்கள்: 6, 8.
பரிகாரம்: மகாவிஷ்ணுவை வழிபடவும். நாக பூஜை செய்வது நல்லது.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும், 2-ல் புதனும் 3-ல் சூரியனும் செவ்வாயும், 6-ல் ராகுவும் 7-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் ஆதாயம் கிடைக்கும். புதிய பொருட்கள் சேரும். கலைத் துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். திரவப் பொருட்கள் லாபம் தரும். வியாபாரத்தில் அபிவிருத்தி காண வழி பிறக்கும்.
அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத் துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். முக்கியஸ்தர்களின் சந்திப்பு நிகழும். அதனால் அனுகூலமும் ஏற்படும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு கூடும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். பயணத்தின் மூலம் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். வாரப் பின்பகுதியில் குடும்பத்தில் குதூகலம் கூடும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 18 (முற்பகல்), 21, 22, 24.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: புகைநிறம், இளநீலம், வெண்மை, பச்சை. l எண்கள்: 1, 3, 4, 5, 6, 9.
பரிகாரம்: மகா கணபதியை வழிபடவும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago