துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 2-ல் புதனோடு கூடியிருப்பதும், குருவால் பார்க்கப்படுவதும் சிறப்பாகும். 3-ல் உள்ள செவ்வாயும் 6-ல் உள்ள கேதுவும் உங்கள் ஆற்றலை வெளிப்படுத்துவார்கள். எதிர்ப்புக்கள் விலகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பல வழிகளில் வருவாய் வந்து சேரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். கலைத்துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும்.
வியாபாரிகளுக்கு லாபம் கூடும். மாணவர்களது நிலை உயரும். மாதர்கள் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். கேளிக்கை, உல்லாசங்களிலும் ஈடுபாடு உண்டாகும். போட்டிகளில் வெற்றி கிட்டும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது நிறைவேற்றி வருவீர்கள். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வழக்கில் சாதகமான திருப்பம் உண்டாகும். பயணத்தின்போது விழிப்புடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டு விலகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ,நவம்பர் 20, 21, 26.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு, தெற்கு.
நிறங்கள்: சிவப்பு, மெரூன், வெண்மை, வான் நீலம், பச்சை.
எண்கள்: 5, 6, 7, 9.
பரிகாரம்: சூரியன், ராகு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும்.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 9-ல் ,குருவும் 11-ல் ராகுவும் உலவுவதால் வார ஆரம்பத்தில் வீண் செலவுகள் ஏற்படும். அதன்பிறகு அழகு அம்சம் கூடும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கலைத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். மாதர்களது நிலை உயரும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள்,வாசனைத் திரவியங்களின் சேர்க்கை நிகழும். பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு உதவி புரிவார்கள். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும்.
பண நடமாட்டம் கூடும். கடன் தொல்லை குறையும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சந்தர்ப்பம் உருவாகும். 22-ஆம் தேதி முதல் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 3ஆமிடம் மாறி, அதிபலம் பெற்று, குருவின் பார்வையையும் பெறுவதால் வீர, தீர, பராக்கிரமம் கூடும். செயற்கரிய காரியங்களையும் கூட சுலபமாக நிறைவேற்றுவீர்கள். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிட்டும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். வழக்கில் சாதகமான போக்கு தென்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ,நவம்பர் 20, 26.
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு..
நிறங்கள்: பொன் நிறம், வெண்சாம்பல் நிறம், இளநீலம்.. .
எண்கள்: 3, 4, 6, 9.
பரிகாரம்: சனி, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபடவும்.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 10-ல் ராகு 11-ல் சனி 12-ல் சுக்கிரன் ஆகியோர் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். சமுதாய நல முன்னேற்றப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். வார நடுப்பகுதியில் சந்திரன் பன்னிரெண்டாம் இடத்திற்கு மாறி, சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோருடன் கூடுவதால் உடல்நலம் பாதிக்கும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை. கண் உபத்திரவம் உண்டாகும். வியாபாரிகள் பண விஷயத்தில் விழிப்புடன் செயல்படவும். மாணவர்கள் படிப்பில் முழு அக்கறை செலுத்தவும். எக்காரியத்திலும் அவசரம் கூடாது. நிதானம் மிகவும் தேவை. 22-ம் தேதி முதல் செவ்வாய் இரண்டாமிடத்திற்கு மாறுவது சிறப்பாகாது என்றாலும் செவ்வாய் தன் உச்ச ராசியில் உலவத் தொடங்குவதால் மக்களால் நலம் உண்டாகும். உடன்பிறந்தவர்களால் அதிக நன்மை ஏற்படும். தர்ம சிந்தனை உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 20, 21. 26 (இரவு).
திசைகள்: தென்மேற்கு, மேற்கு, .
நிறங்கள்: நீலம், புகை நிறம், இளநீலம், வெண்மை.
எண்கள்: 4, 6, 8.
பரிகாரம்: குரு, கேது, செவ்வாய் ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது. சூரிய நமஸ்காரம் செய்யவும். திருமாலை வழிபடவும்.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும் 7-ல் குருவும், 10-ல் சனியும் 11-ல் சூரியனும் புதனும் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வெளிநாட்டு வேலைக்காகக் காத்திருப்பவர்கள் அதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். புதிய பதவி, பட்டங்கள் வந்து சேரும். மூத்த சகோதர, சகோதரிகளால் நலம் உண்டாகும். வியாபாரம் பெருகும்.
தந்தையாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும். அரசு உதவி கிடைக்கும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். எதிரிகள் அடங்குவார்கள். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். வாரக் கடைசியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது நல்லது. எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபட்டால் வெற்றி வாய்ப்புக்கள் கூடவே செய்யும்.
அதிர்ஷ்டமான தேதிகள்:,நவம்பர் 20 21, 26 (இரவு).
திசைகள்: வடகிழக்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம்..மெரூன்.
எண்கள்: 1, 3, 5, 6, 7, 8..
பரிகாரம்: செவ்வாய்க்குப் பிரீதியாக முருகனை வழிபடவும். இளைஞர்களுக்கு வேலை கிடைக்க உதவி செய்யவும்.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் சூரியன், புதன் ஆகியோரும் 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். தொலைதூரத் தொடர்பு ஓரளவு பயன்படும். காரியத்தில் வெற்றி கிட்டும். அரசு உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கும் அரசுப்பணியாளர்களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். கணிதம், விஞ்ஞானம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.
தந்தையால் அனுகூலம் உண்டாகும். பிதுரார்ஜித சொத்துக்கள் சேரும். 22-ம் தேதி முதல் செவ்வாய் பன்னிரெண்டாமிடத்திற்கு மாறுவதால் தொழிலில் மாற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்களால் செலவுகள் ஏற்படும். வீண்வம்பு, வழக்குகளில் ஈடுபடலாகாது. அக்கம்பக்கம் உள்ளவர்களால் தொல்லைகள் சூழும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 20, 21, 26 (பகல்).
திசைகள்: கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: வெண்மை, சிவப்பு, பச்சை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 5, 6, 8, 9 .
பரிகாரம்: துர்க்கையையும் விநாயகரையும் வழிபடுவது நல்லது. பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது அவசியமாகும்.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் குருவும் செவ்வாய், சுக்கிரன் ஆகியோரும் அனுகூலமாக உலவுகிறார்கள். வார ஆரம்பத்தில் சந்திரன், சனியுடன் கூடி 8-ல் உலவுவது சிறப்பாகாது. எதிர்பாராத செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். மன அமைதி குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண்விவகாரங்கள் வேண்டாம். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும்.
எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். இயந்திரப்பணியாளர்களுக்கு சுபிட்சம் கூடும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். கலைத்துறையினருக்கும் மாதர்களுக்கும் அனுகூலமான போக்கு நிலவிவரும். 22-ம் தேதி முதல் செல்வாக்கும் மதிப்பும் உயருவதுடன் பொருளாதார நிலையிலும் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ,நவம்பர் 24, 25, 26.
திசைகள்: வடகிழக்கு, தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: பொன் நிறம், வெண்மை, இளநீலம், சிவப்பு.
எண்கள்: 3, 6, 9.
பரிகாரம்: சனிப்பிரீதி செய்து கொள்வது நல்லது. உடல் ஊனமுள்ளவர்களுக்கு உதவி செய்யவும். சனிக்கிழமை சாயங்காலத்தில் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
13 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago