துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு அதிபதி சுக்கிரன் வலுத்திருக்கிறார். 3-ல் செவ்வாயும் 11-ல் ராகுவும் உலவுவது நல்லது. 14-ம் தேதி முதல் சுக்கிரன் 2-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகும். 17-ம் தேதி முதல் சூரியன் ஜன்ம ராசிக்கு மாறுவது குறை. புதன், ஜன்ம ராசிக்கு வந்தாலும் ஓரளவு நலம் புரிவார். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். போட்டி பந்தயங்களிலும், விளையாட்டு விநோதங்களிலும் ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பரிசுகளும் பதக்கங்களும் கிடைக்கும். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும்.
நிலபுலங்கள் லாபம் தரும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். அயல்நாட்டுத் தொடர்பு வலுக்கும். பிற மொழி, மத, இனக்காரர்களால் அனுகூலம் உண்டாகும். அரசியல், நிர்வாகம்,ஆன்மிகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் காரியமாற்றினால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். மக்களாலும் தந்தையாலும் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். கண், கால் சம்பந்தமான உபாதைகள் உண்டாகும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பெரியவர்களிடம் பணிவு தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 14, 16.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: சாம்பல்நிறம், இளநீலம், சிவப்பு.
எண்கள்: 4, 6, 9.
பரிகாரம்: கணபதி ஜப, ஹோமம் செய்வது நல்லது. ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும் கேட்கவும் செய்யலாம்.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 10-ல் ராகுவும் 11-ல் சூரியனும் புதனும் குருவும் 12-ல் சுக்கிரனும் உலவுவதால் முக்கியமானவர்களது சந்திப்பும் அனுகூலமும் உண்டாகும். மகப்பேறு பாக்கியம் கிட்டும். புத்திசாலித்தனம் வெளிப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். பண நடமாட்டம் திருப்தி தரும். உழைப்பு வீண்போகாது. அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். உத்தியோகஸ்தர்களது எண்ணம் நிறைவேறும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் விருத்தி அடையும்.
வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். 14-ம் தேதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு மாறுவதால் புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்களின் சேர்க்கை நிகழும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். 17-ம் தேதி முதல் சூரியனும் புதனும் 12-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. அரசுப்பணியாளர்கள், அரசியல்வாதிகள், வியாபாரிகள் ஆகியோர் விழிப்புடன் இருப்பது நல்லது. தொழில்ரீதியாக இடமாற்றம் உண்டாகும். கண் உபாதை உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 14, 19.
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு, வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை, வெண்சாம்பல்நிறம், பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 4, 5, 6.
பரிகாரம்: விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபடவும். சனிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றுவது நல்லது.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும் 10-ல் சூரியனும் புதனும் 11-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும். மனத்தில் தெளிவு பிறக்கும். எதிர்ப்புக்கள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியம் நிறைவேறும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகுத் துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள்.
கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். 14-ம் தேதி முதல் சுக்கிரன் 12-ம் இடத்திற்கு மாறுவது நல்லது. புதிய பொருட்கள் சேரும். 17-ம் தேதி முதல் சூரியனும் புதனும் 11-ம் இடத்திற்கு மாறுவது விசேடமாகும். வாழ்க்கைத்துணைவராலும் தந்தையாலும் நலம் உண்டாகும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். கூட்டுத் தொழில் விருத்தி ஆகும். மூத்த சகோதர, சகோதரிகளால் அனுகூலம் ஏற்படும். வாரப் பின்பகுதியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 14, 16, 19.
திசைகள்: வடமேற்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், ஆரஞ்சு, பச்சை, இளநீலம், வெண்மை.
எண்கள்: 1, 5, 6, 7.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடவும். ஹனுமன் சாலீஸா படிப்பதும் கேட்பதும் நல்லது.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 9-ல் குருவும் 11-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். 14-ம் தேதி முதல் சுக்கிரன் 11-ம் இடத்திற்கு மாறுவது விசேடமாகும். 17-ம் தேதி முதல் சூரியனும் புதனும் 10-ம் இடத்திற்கு மாறுவது நல்லது. முக்கியமான தகவல் வந்து சேரும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். மகப்பேறு பாக்கியம் கிடைக்கும். பணப்புழக்கம் திருப்தி தரும். ஊகவணிகம், கொடுக்கல் வாங்கல் லாபம் கொண்டுவரும். மனத்தில் உற்சாகம் பெருகும். தெய்வப் பணிகள் நிறைவேறும். குடும்பத்தில் சச்சரவுகள் குறையும். சுபகாரியங்கள் நிகழ வாய்ப்புக்கூடிவரும்.
தகவல் தொடர்பு ஆக்கம் தரும். தொழிலாளர்களுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் நிறைவேறும். 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும், 12-ல் செவ்வாயும் இருப்பதால் சிறுசிறு இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்படும். சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் எச்சரிக்கை தேவை. எதிலும் நிதானமாக யோசித்து ஈடுபடவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 14, 19.
திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, வடகிழக்கு, மேற்கு.
நிறங்கள்: நீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 6, 8.
பரிகாரம்: நாகரை வழிபடுவது நல்லது. முருகனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும்.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் 9-ல் சுக்கிரனும் 10-ல் சனியும் 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். அலைச்சல் சற்று கூடும். அதற்கான பயன் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி காணலாம். நல்ல தகவல் வந்து சேரும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். வாரக் கடைசியில் புதிய சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள். புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். பெண்களுக்கு உற்சாகம் கூடும்.
மாணவர்கள் வளர்ச்சி காண்பார்கள். 14-ம் தேதி முதல் சுக்கிரன் 10-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது என்றாலும் தொழிலில் சீரான வளர்ச்சி காணலாம். தர்ம குணம் வெளிப்படும். 17-ம் தேதி முதல் சூரியனும் புதனும் 9-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. தந்தை நலனில் கவனம் தேவை. பண வரவு கூடும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். செந்நிறப்பொருட்கள் லாபம் தரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 14, 16, 19.
திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு.
நிறங்கள்: சிவப்பு, நீலம், பச்சை.
எண்கள்: 5, 6, 8, 9.
பரிகாரம்: ராகு, கேது, குருவுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும் 7-ல் குருவும் 8-ல் சுக்கிரனும் 10-ல் செவ்வாயும் உலவுவதால் நல்லவர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். பண வரவு அதிகரிக்கும். நல்ல தகவல் வந்து சேரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் ஆக்கம் தரும். பயணத்தின் மூலம் முக்கியமான காரியம் ஒன்று நிறைவேறும். கூட்டுத் தொழில் லாபம் தரும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். செய்தொழில் விருத்தி அடையும். மருத்துவம், இரசாயனம், விஞ்ஞானத் துறையினர சுபிட்சம் காண்பார்கள்.
14-ம் தேதி முதல் சுக்கிரன் 9-ம் இடத்திற்கு மாறுவதால் நற்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். 17-ம் தேதி முதல் சூரியன் 8-ம் இடத்திற்கு மாறுவது குறை. புதன் 8-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகும். அரசாங்கத்தாராலும், தந்தையாலும் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். உஷ்ணாதிக்கத்தால் உடல் நலம் பாதிக்கும். மறைமுக நோய்நொடி உபாதைகளும் உண்டாகும். குரு பலத்தால் சமாளிப்பீர்கள். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். நிலபுலங்கள் லாபம் தரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 14 (பிற்பகல்), 19.
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: புகைநிறம், பொன் நிறம், சிவப்பு, இளநீலம், வெண்மை .
எண்கள்: 3, 4, 6, 9.
பரிகாரம்: விநாயகரை வழிபடவும். சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
21 hours ago
ஆன்மிகம்
13 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago