மேஷம்:
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 3-ல் சூரியனும் செவ்வாயும் 4-ல் புதனும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். மனத்தில் உற்சாகம் பெருகும். இனிமையாகப் பேசி மற்றவர்களைக் கவருவீர்கள். செயலில் வேகம் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். அரசு உதவி கிடைக்கும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நிலபுலங்கள் லாபம் தரும். புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். இன்ஜினீயர்களது நிலை உயரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் செழிப்புக் கூடும். ஆடை, அணிமணிகள் சேரும். 5-ல் ராகுவும், 6-ல் குருவும் இருப்பதால் மக்கள் நலம் பாதிக்கும். சனி 8-ல் இருப்பதால் அதிகம் பாடுபட வேண்டிவரும். கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது. உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றம் தடைப்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 30, ஜூலை 3. .
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு, தெற்கு, கிழக்கு. .
நிறங்கள்: சிவப்பு, வெண்மை, இளநீலம்..
எண்கள்: 1, 5, 6, 7, 9.
பரிகாரம்: குரு, சனி ஆகியோருக்குப் பிரீதி,, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.
ரிஷபம்:
உங்கள் ராசிக்கு அதிபதி சுக்கிரன் ராசியிலேயே இருப்பது சிறப்பாகும். குரு 5-ல் அமர்ந்து ராசியைப் பார்ப்பது குறிப்பிடத்தக்கது. 10-ல் உலவும் கேது நலம் புரிவார். தோற்றப்பொலிவு கூடும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும் சுப காரியங்கள் நிகழும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களும் கைக்கு கிடைக்கும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களது எண்ணம் நிறைவேறும். ஆசிரியர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் மதிப்பு உயரும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் கிடைக்கும். அலைச்சல் வீண்போகாது. எதிர்ப்புக்கள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். 2-ல் சூரியனும் செவ்வாயும் இருப்பதாலும், 3-ல் புதன் உலவுவதாலும் பேச்சில் சூடான வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது நல்லது. குடும்ப நலனில் அக்கறை தேவை. வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. கெட்டவர்களின் தொடர்பு கூடாது.
அதிர்ஷ்டமான தேதிகள்:ஜூன் 30, ஜூலை 3, 5. . . .
திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, பொன் நிறம்.
எண்கள்: 3, 6, 7.
பரிகாரம்: வன துர்கைவை வழிபடவும்.
மிதுனம்:
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 3-ல் ராகுவும், 6-ல் சனியும், 12-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. பேச்சில் திறமை வெளிப்படும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். ஜலப் பொருட்கள் லாபம் தரும். புதியவர்களின் தொடர்பும் அதனால் நன்மையும் உண்டாகும். பயணத்தினால் முக்கியமான எண்ணம் நிறைவேறும். கணிதம், எழுத்து, பத்திரிகை, விஞ்ஞானம், போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். நிலபுலன்கள் ஓரளவு லாபம் தரும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். நல்லவர்கள் உங்களைச் சூழ்ந்து இருப்பார்கள். ஜன்ம ராசியில் சூரியனும் செவ்வாயும் இருப்பதால் எதிலும் பதற்றப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது. உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல் நலனில் கவனம் செலுத்தி வருவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 30, ஜூலை 3, 5. .
திசைகள்: மேற்கு, வடக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு. .
நிறங்கள்: சிவப்பு, நீலம், பச்சை.
எண்கள்: 4, 5, 6, 8.
பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடுவது நல்லது.
கடகம்:
உங்கள் ராசிக்கு 11-ல் சுக்கிரன் உலவுவது நல்லது. இதர கிரகங்கள் சாதகமாக இல்லை. கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கல் கூடிவரும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். ஆடை, அணிமணிகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்புத் தேவை. பொருளாதாரப் பிர்சனைகள் ஏற்படும். உடல் நலம் ஒருநாள் போல் மறுநாளிராது. குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். குடும்பத்தை விட்டுச் சிலர் பிரிந்திருக்க வேண்டிவரும். கண் உபத்திரவம் ஏற்படும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் குறைவு. பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். மறதியால் அவதி ஏற்படும். புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியமாகும். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். அரசாங்கத்தாராலும், தந்தையாலும், உடன்பிறந்தவர்களாலும் பிரச்னைகள் சூழும். தொழில் ரீதியாக இட மாற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட தேதிகள்: ஜூன் 30, ஜூலை 3. . .
திசை: தென் கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, வான் நீலம். .
எண்: 6..
பரிகாரம்: நவக்கிரகங்களையும் வழிபட்வும்.
சிம்மம்:
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 11-ல் சூரியனும் செவ்வாயும் உலவுவது நல்லது. பேச்சில் திறமை கூடும். செயலில் வேகம் பிறக்கும். மதிப்பும் அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். அரசு உதவி கிடைக்கும். அரசு வேலை சிலருக்கு இந்த நேரத்தில் அமையும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களிலும்; விளையாட்டு, விநோதங்களிலும்; போட்டிப் பந்தயங்களிலும் வெற்றி கிடைக்கும். முக வசீகரம் கூடும். நல்லவர்கள் உங்களுக்கு நலம் புரிவார்கள். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புக்களும் பதவிகளும் கிடைக்கும். சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். அலைச்சலும் உழைப்பும் கூடும் என்றாலும் அதற்கான பயன் கிடைக்கும். 4-ல் சனி இருப்பதாலும், 12-ல் புதன் உலவுவதாலும் நண்பர்கள், உறவினர்களால் சில இடர்ப்பாடுகள் உண்டாகும். வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் பிரச்னைகள் சூழும். எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 30, ஜூலை 3, 5.
திசைகள்: தெற்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, பொன் நிறம், ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 6, 9
பரிகாரம்: துர்கையையும் ஆஞ்சநேயரையும் வழிபடுவது நல்லது.
கன்னி:
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 6-ல் கேதுவும் 9-ல் சுக்கிரனும் 10-ல் சூரியனும் செவ்வாயும் 11-ல் புதனும் உலவுவது சிறப்பாகும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். முக்கியமான எண்ணங்கள் ஈடேற வழிபிறக்கும். நல்லவர்களின் நட்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். குடும்ப நலம் திருப்தி தரும். பண நடமாட்டம் கூடும். எதிரிகள் அடங்குவார்கள். காரியத்தில் வெற்றி கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்புக் கூடிவரும். வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். பொது நலப்பணியாளர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். அரசு உதவி பெற வாய்ப்பு உண்டாகும். விளையாட்டு விநோதங்களில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும். பிதுரார்ஜித சொத்துக்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கடல் வாணிபம், லாபம் தரும். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம். முயற்சி பலிதமாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 30, ஜூலை 3, 5.
திசைகள்: மேற்கு, வடக்கு, வடமேற்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: நீலம், மெரூன், பச்சை.
எண்கள்: 5, 6, 7, 8.
பரிகாரம்: துர்கைக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago