வார ராசிபலன் 24-11-2016 முதல் 30-11-2016 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

By சந்திரசேகர பாரதி

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 8-ல் புதனும், 9-ல் சுக்கிரனும், 10-ல் செவ்வாயும், 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பு. எதிர்ப்புகள் விலகும். வாழ்வில் வளம் பெருகும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். வியாபாரத்தில் முன்னேற்றம் காண வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத்துணைவராலும், தொழில் கூட்டாளிகளாலும் அனுகூலம் உண்டாகும். செயலில் வேகம் கூடும். இயந்திரப் பணிகள் லாபம் தரும்.

இஞ்ஜீனீயர்களது நிலை உயரும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். 5-ல் ராகு, 6-ல் குரு, 8-ல் சூரியன்; சனி ஆகியோர் உலவுவதால் பிள்ளைகள் நலம் பாதிக்கும். தந்தைக்கும் உங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வயிறு, மறைமுக உறுப்புகள் சம்பந்தமான உபாதைகள் உண்டாகும். உடல் நலனில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 24 (பிற்பகல்), 25, 27.

திசைகள்: வடக்கு, தென் கிழக்கு, வட மேற்கு, தெற்கு.

நிறங்கள்: மெரூன், இளநீலம், சிவப்பு, பச்சை. l எண்கள்: 5, 6, 7, 9.‎

பரிகாரம்: குரு, சனிக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது. சூரிய நமஸ்காரம் செய்யவும்.



ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 8-ல் சுக்கிரன், 10-ல் கேது உலவுவது விசேஷம். தெய்வானுக்கிரகம் உண்டாகும். மந்திர, தந்திர, யந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடு கூடும். மகப்பேறு பாக்கியம் உண்டாகும். பணப் புழக்கம் திருப்தி தரும். எதிர்ப்புகள் கட்டுக்குள் அடங்கியே இருக்கும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். உத்தியோகஸ்தர்களது நோக்கம் நிறைவேறும்.

புதிய ஆடை, அணிமணிகள் சேரும். 25-ம் தேதி முதல் புதன் 8-ம் இடம் மாறுவது நல்லது. வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். குடும்ப நலம் சீராகும். மாணவர்களது நிலை உயரும். சித்தர்கள், மகான்களின் தரிசனம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். பெற்றோர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தைவழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 24 (பிற்பகல்), 25, 27.

திசைகள்: வட மேற்கு, வட கிழக்கு, தென் கிழக்கு.

நிறங்கள்: மெரூன், இள நீலம், பொன் நிறம். l எண்கள்: 3, 6, 7.

பரிகாரம்: நாகர் வழிபாடு நல்லது.



மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 6-ல் சூரியன்; புதன்; சனி ஆகியோர் உலவுவதால் நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். வேற்று மொழி, மத, இனக்காரர்களால் அனுகூலம் உண்டாகும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். முக்கியஸ்தர்களின் சந்திப்பு நிகழும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைக்கும். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.

கலைஞர்கள், பெண்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. இயந்திரப்பணியாளர்கள், இன்ஜினீயர்கள் விழிப்புடன் செயல்பட்டால் சங்கடங்களிலிருந்து தப்பலாம். உடன்பிறந்தவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். தந்தை நலனில் கவனம் செலுத்தவும். மறைமுக நோய் நொடி உபாதைகள் ஏற்படும். வாரப் பின்பகுதியில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 25-ம் தேதி முதல் புதன் 7-ம் இடம் மாறுவது சிறப்பாகாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 24 (பிற்பகல்), 25, 27.

திசைகள்: தென் மேற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு.

நிறங்கள்: புகை நிறம், பச்சை, கருநீலம், ஆரஞ்சு. l எண்கள்: 1, 4, 5, 8.

பரிகாரம்: மகாகணபதியை வழிபடவும்.



கடக ராசி வாசகர்களே

கோசாரப்படி கிரகநிலை அனுகூலமாக இல்லை. குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. விஷ பயம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள், தொழிலாளர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் சரிவிலிருந்து தப்பலாம். பொருள் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. புதிய முயற்சிகளை ஒத்திப்போடவும்.

உடன்பணிபுரிபவர்களிடம் விழிப்புடன் பழகுவது நல்லது. பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். வாழ்க்கைத் துணைவியாலும், பெண்களாலும் சங்கடம் ஏற்படும். மதிப்பு குறையும். கலைஞர்களுக்கு எதிர்ப்புகள் அதிகரிக்கும். 25-ம் தேதி முதல் புதன் 6-ம் இடத்திற்கு மாறுவதால் வியாபாரிகளுக்குப் பிரகாசமான சூழ்நிலை உருவாகும். நண்பர்களுடன் வாக்குவாதம் வேண்டாம். கடன் விவகாரங்களில் யாருக்கும் கையெழுத்திட வேண்டாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 24 (பிற்பகல்), 25, 27.

திசை: வட மேற்கு. l நிறம்: வெண்மை. l எண்: 2.

பரிகாரம்: நாகரை வழிபடவும். கோளறு திருப்பதிகம் வாசிக்கவும்.



சிம்மம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 4-ல் புதன், 5-ல் சுக்கிரன், 6-ல் செவ்வாய் உலவுவது நல்லது. பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு உண்டாகும். பேச்சில் திறமை கூடும். முக வசீகரம் உண்டாகும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். உடன்பிறந்தவர்கள், பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.

வழக்கில் நல்ல தீர்ப்பை எதிர்பார்க்கலாம். மனதில் துணிவு பிறக்கும். தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். கலைஞர்களுக்கு வெற்றிகள் குவியும். பெண்களின் எண்ணம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள், விஞ்ஞானிகள் வளர்ச்சி காண்பார்கள். 25-ம் தேதி முதல் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடும். மகப்பேறு பாக்கியம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 24 (பிற்பகல்), 25, 27.

திசைகள்: தென் கிழக்கு, வட கிழக்கு, தெற்கு, வடக்கு.

நிறங்கள்: இள நீலம், வெண்மை, பச்சை, பொன் நிறம். l எண்கள்: 3, 5, 6, 9.

பரிகாரம்: துர்க்கை, விநாயகர், நாகேஸ்வரரை வழிபடவும்.



கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன்; சனி, 4-ல் சுக்கிரன், 6-ல் கேது உலவுவது நல்லது. அலைச்சல் வீண்போகாது. இடமாற்றம், நிலைமாற்றம் ஏற்படும். பொருளாதார நிலை சீராகவே இருக்கும். குடும்பத்தில் அமைதி காணலாம். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத் திறமை கூடும். தொழில்நுட்பத் துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். சமுதாய நல முன்னேற்றப் பணியாளர்கள் நற்பெயருக்குப் பாத்திரமாவார்கள்.

இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள், கச்சாப் பொருள் தொழில் லாபம் தரும். கலைஞர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள். 25-ம் தேதி முதல் புதன் 4-ம் இடம் மாறுவதால் மாணவர்களுக்கு மந்த நிலை விலகும். வியாபாரிகள் வெளிச்சமான பாதையைக் காண்பார்கள். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். புதிய பதவி, பட்டங்கள் தேடிவரும். சொத்துகள் சேரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 24 (பிற்பகல்), 25, 27.

திசைகள்: தென் கிழக்கு, மேற்கு, வட மேற்கு.

நிறங்கள்: வெண்மை, இளநீலம், மெரூன். l எண்கள்: 1, 6, 7, 8.

பரிகாரம்: குரு, தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

16 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்