வார ராசி பலன் 28-01-2016 முதல் 03-02-2016 வரை (துலாம் முதல் மீனம் வரை)

By சந்திரசேகர பாரதி

துலாம் ராசி வாசகர்களே!

சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். பயணத்தின் மூலம் முக்கியமானதொரு எண்ணம் ஈடேறும். சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. நிதானமாக ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது நல்லது. சிறு விபத்துக்கு வாய்ப்புண்டு. எச்சரிக்கை தேவை.

குழந்தைகள் முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவது அவசியமாகும். தவறான தொடர்பை விட்டு விலகவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 31, பிப்ரவரி 3.

திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: இள நீலம், வெண்மை, சாம்பல் நிறம்.

எண்கள்: 4, 6.

பரிகாரம்: குரு, கேது ஆகியோருக்குப் பிரீதி செய்து கொள்வது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப ரட்சகாம்பிகையை வழிபடவும்.



விருச்சிக ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும் 3-ல் சூரியனும் 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவதால் பணவரவு கூடும். பல வழிகளில் வருவாய் வந்து சேரும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பேச்சில் திறமையும் இனிமையும் வெளிப்படும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். பயணத்தின் மூலம் முக்கியமான காரியம் நிறைவேறும்.

செய்தொழிலில் புதிய உத்திகளைக் கையாண்டு வெற்றி பெறுவீர்கள். ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்பு உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். வாரப் பின்பகுதியில் எதிர்பாராத மருத்துவச் செலவுகள் வரும். உடன்பிறந்தவர்களால் சிறு சங்கடம் உண்டாகும். இடமாற்றமும், நிலை மாற்றமும் உண்டு. கண், கால் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். தாய் நலனில் கவனம் தேவைப்படும். நிலபுலங்கள் விஷயத்தில் விழிப்புடன் ஈடுபடவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 29, பிப்ரவரி 3.

திசைகள்: தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், இளநீலம், பச்சை, பொன் நிறம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 4, 5, 6.

பரிகாரம்: முருகனையும், ஆஞ்சநேயரையும் வழிபடுவது நல்லது.



தனுசு ராசி வாசகர்களே!

உங்கள் ராசியில் சுக்கிரனும் 3-ல் கேதுவும், 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். நற்காரியங்களில் ஈடுபாடு கூடும். இயந்திரங்கள், எரிபொருட்கள், வெடிப்பொருட்கள், மின் சாதனங்கள், செந்நிறப் பொருட்கள் மூலம் லாபம் கிடைக்கும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும்.

கலைத் துறையினருக்குச் செழிப்பு கூடும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். வாரப் பின்பகுதியில் மனஅமைதி குறையும். வீண் செலவுகள் ஏற்படும். கண், கால் சம்பந்தமான உபாதைகள் உண்டாகும். அக்கம்பக்கத்தாரிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. பேச்சில் நிதானம் தேவை. சிலர், குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிய நிலைக்கு ஆளாக வேண்டிவரும். தந்தைநலனில் அக்கறை தேவை. தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் பிரச்சினைகள் சூழும். பக்குவம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 29, 31.

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: சிவப்பு, வெண்மை, மெரூன்.

எண்கள்: 6, 7. 9.

பரிகாரம்: விரயச் சனிக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்யவும். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவவும்.



மகர ராசி வாசகர்களே!

உங்கள் ராசநாதன் சனி 11-ல் இருப்பது விசேடமாகும். செவ்வாய், குரு, சுக்கிரன், ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயனைப் பெற்று வருவீர்கள். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும்.

எடுத்த காரியங்கள் நிறைவேறும். சொத்துக்கள் சேரும். சொத்துக்கள் மூலம் வருவாயும் கிடைக்கும். தொழிலாளர்களுக்கு வளர்ச்சி உண்டு. சமுதாய நலப் பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். தம்பதியர் உறவு நிலை சீராக இருந்துவரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். மக்களால் நலம் உண்டாகும். 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் இருப்பது சிறப்பாகாது. வியாபாரிகள் விழிப்புடன் இருந்தால் நஷ்டப்படாமல் தப்பலாம். பயணத்தின்போது பாதுகாப்பு தேவை. வீண் வம்பு வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 29, 31, பிப்ரவரி 3.

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: நீலம், பொன்நிறம், சிவப்பு.

எண்கள்: 3, 6, 8, 9.

பரிகாரம்: துர்க்கையையும், விநாயகரையும் மகாவிஷ்ணுவையும் வழிபடவும்.



கும்ப ராசி வாசகர்களே!

புதன், சுக்கிரன், சனி ஆகியோர அனுகூலமாக உலவுவதால் வியாபார நுணுக்கம் தெரியவரும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். உழைப்பு வீண்போகாது. கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகுத் துறைகள் ஆக்கம் தரும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். மாணவர்களது திறமை பளிச்சிடும். தான, தர்மப் பணிகளில் ஈடுபாடு கூடும்.

ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றின் சேர்க்கையோ, ஆதயமோ கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் விழிப்புத் தேவை. ஏற்றுமதி, இறக்குமதி துறைகளில் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆன்மிகவாதிகளுக்கும் பிரச்சினைகள் சூழும். குழந்தைகளால் செலவும் மன அமைதிக் குறைவும் உண்டாகும். அரசியல், நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றம் தடைப்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 31, பிப்ரவரி 3.

திசைகள்: மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: பச்சை, நீலம்.

எண்கள்: 5, 6, 8.

பரிகாரம்: சூரியனையும் நாகரையும் வழிபடுவது நல்லது.



மீன ராசி வாசகர்களே!

6-ல் ராகுவும் 7-ல் குருவும் 10-ல் புதனும் 11-ல் சூரியனும் உலவுவதால் பொருளாதார நிலையில் அபிவிருத்தி காணலாம். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். நல்லவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவற்றைப் பெற சந்தர்ப்பம் உருவாகும்.

அரசுப் பணியாளர்களது நிலை உயரும். விஞ்ஞானிகளும் ஆரய்ச்சியாளர்களும் வளர்ச்சி காண்பார்கள். சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும். வீண் சண்டை, சச்சரவுகள் உண்டாகும். பக்குவமாகச் சமாளிக்கவும். எரிபொட்கள், மின்சாரம், வெடிப்பொருட்கள், இயந்திரங்கள், கூர்மையான ஆயுதங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கை தேவை. விளையாட்டுகளில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட தேதிகள்: ஜனவரி 29, பிப்ரவரி 3.

திசைகள்: வடக்கு, கிழக்கு, வட கிழக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: பொன் நிறம், வெண்மை, பச்சை, ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 4, 5.

பரிகாரம்: திருமுருகனை வழிபடவும். கந்த சஷ்டி கவசம் படிப்பது நல்லது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

7 hours ago

ஆன்மிகம்

9 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்