மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் சுக்கிரனும், 5-ல் குருவும், 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பு. முக்கியமான காரியங்கள் வார முன்பகுதியில் நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். மக்களால் அனுகூலம் உண்டாகும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் அதிகமாகும். சாதுக்கள் தரிசனம் கிடைக்கும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். பெண்களின் எண்ணம் நிறைவேறும். மாணவர்களது நோக்கம் நிறைவேறும். வாரப் பின்பகுதியில் செலவுகள் சற்று அதிகரிக்கும். சிக்கன நடவடிக்கை தேவை. ராசிநாதன் செவ்வாய் சனியுடன் கூடி 8-ல் இருப்பதால் உடல் நலனில் அக்கறை தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 21, 22.
திசைகள்: வடக்கு, தென் கிழக்கு, வட கிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, ஆரஞ்சு, பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 6, 7.
பரிகாரம்: செவ்வாய், சனிக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது. கந்தசஷ்டி கவசம், ஹனுமன் சாலீஸா படிக்கவும்.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் சுக்கிரனும், 10-ல் கேதுவும் உலவுவது நல்லது. 24-ம் தேதி முதல் புதன் 4-ம் இடம் மாறுவது சிறப்பு. தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வப் பணிகள் நிறைவேறும். எடுத்த காரியங்களை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். ஜலப் பொருட்கள் லாபம் தரும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியம் ஈடேறும். கலைத் துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். கணவன்-மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. 24-ம் தேதி முதல் வியாபாரிகளுக்கு மந்த நிலை விலகும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 21, 22, 24, 25.
திசைகள்: கிழக்கு, வட மேற்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, மெரூன்,வெண்மை, இள நீலம். எண்கள்: 1, 6, 7.
பரிகாரம்: சக்தி வழிபாடு நலம் தரும்.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும், 3-ல் ராகுவும், 6-ல் செவ்வாயும் சனியும் உலவுவது சிறப்பு. 24-ம் தேதி முதல் புதன் 3-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. வார ஆரம்பம் சாதாரணமாகவே காணப்படும். மனதில் ஏதேனும் சலனம் ஏற்படும். குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். தந்தை நலனில் கவனம் தேவை. வாரப் பின்பகுதியில் எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதார நிலை உயரும். திரவப் பொருட்களால் லாபம் கிடைக்கும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். கேளிக்கை, உல்லாசங்கள், விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு கூடும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். இயந்திரப் பணியாளர்களுக்கு லாபம் கூடும். இஞ்ஜீனியர்கள் வளர்ச்சி காண்பார்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 22, 24, 25.
திசைகள்: வடக்கு, தென் மேற்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: கறுப்பு, பச்சை, வெண்மை, இள நீலம்.
எண்கள்: 4, 5, 6, 9.
பரிகாரம்: விநாயகரை வழிபடுவது நல்லது.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும், 2-ல் குருவும் உலவுவது நல்லது. பெரியவர்களும் தனவந்தர்களும் உதவி புரிவார்கள். வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புகள் கூடிவரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள் நிலை உயரப் பெறுவார்கள். தெய்வப் பணிகள் நிறைவேறும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் உலவுவதால் சிறுசிறு இடர்பாடுகள் அவ்வப்போது ஏற்படும். விஷ பயம் உண்டாகும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. பயணத்தின்போது பாதுகாப்பு அவசியம். 24-ம் தேதி முதல் வியாபாரம், கணிதம், எழுத்து, விஞ்ஞானத் துறைகளைச் சேர்ந்தவர்கள் அனுகூலமான போக்கைக் காண்பார்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 21, 24 (பிற்பகல்), 25.
திசைகள்: வட கிழக்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: பொன் நிறம், வெண்மை, இள நீலம்.
எண்கள்: 3, 6, 9.
பரிகாரம்: மகா கணபதியை வழிபடவும்.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 12-ல் சுக்கிரன் உலவுவது ஒன்றே சிறப்பு. அவரும் சூரியனோடு கூடி இருக்கிறார். கோசாரம் சிறப்பாக இல்லை. ஜனன கால ஜாதகப்படி தற்சமயம் யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் நலம் உண்டாகும். ஜாதக பலமும் இல்லாதவர்களுக்குச் சங்கடங்கள் ஏற்படும். அலைச்சல் கூடும். உடல் நலம் பாதிக்கும். வரவைக் காட்டிலும் செலவுகள் கூடும். இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். மனதில் ஏதேனும் கவலை இருந்துவரும். புதியவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. வியாபாரிகள், தொழிலாளர்கள், உத்தியோகஸ்தர்கள் தங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றி வருவதன் மூலம் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். வீண் வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. அரசாங்கத்தாரால் தொல்லைகள் சூழும். தந்தை நலனில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்களால் மன வருத்தம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 21, 22.
திசைகள்: தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: இள நீலம், வெண்மை.
எண்கள்: 6, 9.
பரிகாரம்: கோளறு திருப்பதிகம் வாசிப்பது நல்லது.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும் சனியும், 6-ல் கேதுவும், 11-ல் சூரியனும் புதனும் சுக்கிரனும் உலவுவதால் மன மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். வழக்கில் வெற்றி கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்குப் பரிசுகளும் சன்மானங்களும் கிடைக்கும். நிலபுலங்கள் சேரும். சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும். போட்டிகளில் ஈடுபாடு கூடும். துணிச்சலான காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவி வரும். கலைஞர்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். பெண்களின் நிலை உயரும். கணவன்- மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். 24-ம் தேதி முதல் புதன் 12-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. செய்துவரும் தொழிலில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 21, 22, 24, 25.
திசைகள்: வடக்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: பச்சை, வெண்மை, இள நீலம்.
எண்கள்: 1, 5, 6, 7, 9.
பரிகாரம்: குருவை வழிபடுவது நல்லது. துர்க்கை, காளிக்கு நெய் தீபம் ஏற்றுவது சிறப்பாகும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
14 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago