துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும் 11-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். எதிர்ப்புக்கள் குறையும். சுகமும் சந்தோஷமும் கூடும். நண்பர்கள் நலம் புரிவார்கள். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்களின் சேர்க்கை நிகழும். வாகன யோகம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும்.
கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். தொழில் பங்குதாரர்கள் உதவி புரிவார்கள். பயணத்தால் நலம் உண்டாகும். போக்குவரத்துச் சாதனங்கள், பயணம் சார்ந்த தொழில்கள், ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள், தோல் பொருட்கள் மூலம் லாபம் கிடைக்கும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். வீண்வம்பு கூடாது. மக்கள் நலனில் கவனம் தேவைப்படும். கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை. கண், வயிறு, கால் சம்பந்தமான உபாதைகள் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதி: டிசம்பர் 9 | திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சாம்பல்நிறம், இளநீலம் | எண்கள்: 4, 6.
பரிகாரம்: குருவையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது நல்லது.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 3-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை திருப்தி தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். தெய்வப்பணிகள் நிறைவேறும். குடும்ப நலம் சீராக இருந்துவரும். மகன் அல்லது மகளுக்கு சுப காரியங்கள் நிகழச் சந்தர்ப்பம் கூடிவரும்.
கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் லாபம் தரும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். கணிதம், விஞ்ஞானம், வியாபாரம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். ஜன்ம ராசியில் சூரியனும் சனியும் 4-ல் செவ்வாயும் கேதுவும் உலவுவதால் அலைச்சலும் உழைப்பும் அதிகமாகும். தலை, இதயம் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும். தாய் நலனில் அக்கறை தேவை. நிலபுலங்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 9, 13
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், பொன் நிறம், இளநீலம் | எண்கள்: 3, 4, 5, 6.
பரிகாரம்: ஜன்மச் சனிக்கும், 4-ல் உலவும் செவ்வாய்க்கும் கேதுவுக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 3-ல் செவ்வாயும் கேதுவும் உலவுவது நல்லது. செயலில் வேகம் கூடும். எதிர்ப்புக்களை வெல்லும் பராக்கிரமம் உண்டாகும். போட்டிகள், பந்தயங்கள், விளையாட்டுகள், வழக்குகள் ஆகியவற்றில் வெற்றி பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். விருந்து, உபசாரங்களிலும்; கேளிக்கை, உல்லாசங்களிலும் ஈடுபாடு உண்டாகும்.
முக வசீகரம் கூடும். பொருளாதார நிலை சீராக இருந்துவரும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். பேச்சில் இனிமையும் திறமையும் வெளிப்படும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். த்யானம், யோகா ஆகியவற்றில் நாட்டம் உண்டாகும். 12-ல் சூரியனும் சனியும் இருப்பதால் எதிர்பாராத செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். கண், கால் பாதம் சம்பந்தமான உபாதைகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் விரும்பத்தகாத இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 9, 13.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை, சிவப்பு | எண்கள்: 6, 7, 9.
பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்யவும். ஆஞ்சநேயரை வழிபடவும். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவது நல்லது.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசியில் சுக்கிரனும் 9-ல் குருவும் 11-ல் சூரியனும் சனியும் உலவுவதால் முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். நல்ல தகவல் வந்து சேரும். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும். மக்களால் பெற்றோருக்கும் பெற்றோரால் மக்களுக்கும் நலம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். கலைஞர்களுக்குப் புகழோடு பொருளும் கிடைக்கும் மாதர்களது எண்ணம் ஈடேறும். தெய்வப் பணிகள் நிறைவேறும். சுப காரியங்கள் நிகழச் சந்தர்ப்பம் கூடிவரும்.
பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். முக்கியஸ்தர்கள் உதவி புரிவார்கள். செய்து வரும் தொழில் வளர்ச்சி பெறும். 2-ல் செவ்வாயும் கேதுவும், 8-ல் ராகுவும் உலவுவதால் குடும்பத்தில் கூச்சலும் குழப்பமும் ஏற்படும். வீண்சண்டை, சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது. கோபத்தைக் குறைத்துக் கொள்வது அவசியமாகும். பயணத்தின்போது விழிப்புத் தேவை. இயந்திரப்பணியாளர்கள், இஞ்சினீயர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் பாதுகாப்புடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 9, 13.
திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, கிழக்கு, மேற்கு.
நிறங்கள்: நீலம், பொன் நிறம், ஆரஞ்சு | எண்கள்: 1, 3, 6, 8.
பரிகாரம்: விநாயகரையும் துர்கையையும் வழிபடுவது நல்லது.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், சனி ஆகியோரும், 11-ல் புதனும் 12-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. பேச்சில் திறமை வெளிப்படும். குடும்பத்தில் அமைதி காணலாம். தகவல் தொடர்பு பயன்படும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். பொதுப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளச் சந்தர்ப்பம் உருவாகும்.
அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். ஜன்ம ராசியில் செவ்வாயும் கேதுவும், 7-ல் ராகுவும் உலவுவதால் உடலில் காயம்பட நேரலாம்; கவனம் தேவை. புதியவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்பு தேவை. மக்களாலும், உடன்பிறந்தவர்களாலும் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களும் ஆசிரியர்களும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 9, 13.
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு.
நிறங்கள்: நீலம், பச்சை, ஆரஞ்சு | எண்கள்: 1, 5, 6, 8.
பரிகாரம்: சர்ப்பேஸ்வரரை வழிபடவும். குருவுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும்.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும் 7-ல் குருவும் 10-ல் புதனும் 11-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். நல்லவர்கள் உங்களுக்கு நலம் புரிய முன்வருவார்கள். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும். திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். வியாபாரம் பெருகும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும்.
ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். பயணத்தால் நலம் உண்டாகும். உடன்பிறந்த சகோதரிகளால் அனுகூலம் ஏற்படும். பண நடமாட்டம் அதிகரிக்கும். என்றாலும் செவ்வாயும் கேதுவும் 12-ல் இருப்பதால் எதிர்பாராத செலவுகளும் இழப்புக்களும் கூட ஏற்படும். கைப்பொருளைப் பத்திரப்படுத்திக் கொள்வதுடன் சிக்கன நடவடிக்கையும் தேவை. தந்தை நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 9, 13.
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: புகைநிறம், பொன் நிறம், பச்சை, இளநீலம் | எண்கள்: 3, 4, 5, 6.
பரிகாரம்: மகா கணபதியையும் விநாயகரையும் வழிபடவும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
17 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago