வார ராசி பலன் | 20-2-14 முதல் 26-2-14 வரை - (மேஷம் முதல் கன்னி வரை)

By சந்திரசேகர பாரதி

மேஷம்

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6ஆம் இடத்திலும் சுக்கிரன் 9-லும் புதன் 10-லும், சூரியன் 11இலும் உலவுவது சிறப்பாகும். குரு 3இல் வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். அரசு சம்பந்தமான காரியங்கள் இனிது நிறைவேறும். பெரியவர்களும் மேலதிகாரிகளும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். ஆடை, அணிகலன்கள் சேரும். 21ஆம் தேதி முதல் புதன் வக்கிர நிவர்த்தி பெறுவதால் வியாபாரம் சூடுபிடிக்கும்.

புதிய துறைகளில் ஈடுபடவும் சிலருக்கு வாய்ப்புக் கூடிவரும். மாணவர்களுடைய நிலை உயரும். பேச்சில் திறமை வெளிப்படும். எலெக்ட் ரானிக், கம்ப்யூட்டர் போன்ற இனங்கள் லாபம் தரும். 25ஆம் தேதி முதல் சுக்கிரன் 10 ஆம் இடம் மாறுவது சிறப்பாகாது. கலைஞர்களுக்குச் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். மேல்படிப்பு படிப்பவர்கள் கவனமாக இருக்கவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப். 20, 21 (பகல்), 24, 26.

திசைகள்: தெற்கு, கிழக்கு, வடகிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: பொன் நிறம், சிவப்பு, வெண்மை.

எண்கள்: 1, 3, 5, 6, 9.

ரிஷபம்

உங்கள் ராசிக்கு 2இல் குருவும், 6இல் சனி, ராகு ஆகியோரும், 8இல் சுக்கிரனும் 10இல் சூரியனும் உலவுவது சிறப்பாகும்.

எதிர்ப்புக்களைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். கலைத்துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். அயல்நாட்டவரால் அனுகூலம் உண்டாகும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள் லாபம் தரும். கறுப்பு, கருநீல நிறப்பொருட்கள், விளைபொருட்கள், தாதுப்பொருட்கள் ஆகியவற்றின் மூலம் அதிகம் ஆதாயம் கிடைத்துவரும். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகள், குடும்பப் பெரியவர்கள் ஆகியோர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

5இல் செவ்வாயும் 9இல் வக்கிர புதனும் இருப்பதால் மக்களால் நல்லதும் அல்லாததுமான பலன்கள் கலந்தவாறு எற்படும். 21ஆம் தேதி முதல் புதன் வக்கிர நிவர்த்தி பெறுவதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். 25ஆம் தேதி முதல் சுக்கிரன் 9ஆமிடம் மாறுவதால் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் அதிகமாகும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப். 20, 21, 26.

திசைகள்: வடகிழக்கு, மேற்கு, தென்மேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: பொன் நிறம், நீலம், வெண்மை.

எண்கள்: 1, 3, 4, 5, 6, 8.

மிதுனம்

கோசாரப்படி புதன், கேது ஆகியோரது சஞ்சாரம் மட்டுமே அனுகூலமாக உள்ளது. இதர கிரகங்களின் நிலை சிறப்பாக இல்லாததால் எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது நல்லது. அவசரப்போக்குக்கு இடம் தரலாகாது. மக்கள் நலனில் அக்கறை தேவைப்படும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களை எண்ணி ஏமாற வேண்டாம். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

விட்டுக் கொடுத்துப் பழகிவருவது நல்லது. கூட்டாளிகளை நம்பி முக்கியப் பொறுப்புக்களை ஒப்படைக்க வேண்டாம். 21ஆம் தேதி முதல் புதன் வக்கிர நிவர்த்தி பெறுவதால் வியாபாரிகள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். 25ஆம் தேதி முதல் சுக்கிரன் 8ஆமிடம் மாறுவதால் கலைஞர்களுக்கு மந்தநிலை விலகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். குடும்பத்தில் அமைதி காணலாம். பெண்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப். 20, 21, 24.

திசைகள்: வடக்கு, வடமேற்கு.

நிறங்கள்: பச்சை, மெரூன்.

எண்கள்: 5, 7.

கடகம்

3இல் செவ்வாயும், 10இல் கேதுவும் 12இல் வக்கிர குருவும் உலவுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபட்டு வெற்றியும் பெறுவீர்கள். விளையாட்டு ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பரிசுகள் கிடைக்கும். பொறியியல் துறை லாபம் தரும். சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனை பல ஆற்றுவார்கள். செயலில் வேகம் கூடும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பொருள்வரவு அதிகமாகும். கட்டடப் பொருட்கள் லாபம் தரும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களில் நல்ல திருப்பம் ஏற்படும்.

4இல் ராகு, சனி ஆகியோரும், 6இல் சுக்கிரனும், 8இல் சூரியனும் இருப்பதால் உடல்நலனில் கவனம் தேவைப்படும். பெற்றோர் நலனிலும் அக்கறை அவசியமாகும். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். சொத்துக்களைப் பராமரிக்க அதிக செலவு செய்ய வேண்டிவரும். பெண்களுக்கும் கலைஞர்களுக்கும் சோதனையான நேரமிது. கேளிக்கைகளைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப். 20, 21, 24, 26.

திசைகள்: வடமேற்கு, வடகிழக்கு, தெற்கு.

நிறங்கள்: மெரூன், பொன் நிறம், சிவப்பு.

எண்கள்: 3, 7, 9.

சிம்மம்

உங்கள் ராசிக்கு 3இல் சனியும், ராகுவும், 5இல் சுக்கிரனும் 6இல் புதனும், 11இல் குருவும் உலவுவது சிறப்பாகும். முன்னேற்றத்துக்கான தகவல் வந்து சேரும். சிறு பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிவரும். அனுகூலமும் உண்டாகும். புதியவர்களது தொடர்பால் நலம் உண்டாகும். அயல்நாட்டு வர்த்தகம் பெருகும். கலைத்துறையினருக்கு சுபிட்சம் கூடும். பெண்களுக்கு மன உற்சாகம் பெருகும்.

வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். மக்களால் அனுகூலமும் உண்டாகும். 21ஆம் தேதி முதல் புதன் வக்கிர நிவர்த்தி பெறுவதால் மாணவர்களது நிலை உயரும். 25ஆம் தேதி முதல் சுக்கிரன் 6 ஆம் இடம் மாறுவது சிறப்பாகாது. 2இல் செவ்வாயும் 7இல் சூரியனும் 9இல் கேதுவும் உலவுவதால் குடும்பத்தில் சிறுசிறு சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். பிறரிடம் கோபப்படாமல் நிதானமாகப் பேசிப் பழகுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப். 20, 21, 24, 26.

திசைகள்: மேற்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: பொன் நிறம், நீலம், சிவப்பு.

எண்கள்: 3, 4, 6, 8.

கன்னி

4இல் உள்ள சுக்கிரனும் 6இல் சஞ்சரிக்கும் சூரியனும் 10இல் உலவும் வக்கிர குருவும் நலம் புரியும் நிலையில் உலவுகிறார்கள். இதனால் உங்கள் தோற்றப்பொலிவு கூடும். சுகானுபவம் உண்டாகும். மாதர்களது நிலை உயரும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். அரசியல்வாதிகள் தங்கள் கொள்கைகளை வெளிப்படுத்தி, நற்பெயர் பெறுவார்கள். வருவாய் வந்து சேரும். ஜன்ம ராசியில் செவ்வாய் இருப்பதால் எக்காரியத்திலும் பொறுமையாக யோசித்து ஈடுபடுவது நல்லது.

2இல் சனி, ராகு உலவுவதால் பேச்சில் நிதானம் தேவை. குடும்ப நலனில் அக்கறை செலுத்தவும். 5இல் புதன் வக்கிரமாக இருப்பதால் வியாபாரத்தில் முழுக்கவனம் தேவை. 21ஆம் தேதி முதல் புதன் வக்கிர நிவர்த்தி பெறுவதாலும் 25ஆம் தேதி முதல் சுக்கிரன் 5-ஆமிடம் மாறி புதனுடன் கூடுவதாலும் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப். 20, 21, 24, 26.

திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: பொன் நிறம், வெண்மை, இளநீலம், பச்சை.

எண்கள்: 1, 3, 5, 6.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

16 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்