மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 3-ல் சூரியனும் செவ்வாயும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு கூடும் நேரமிது. எதிரிகள் விலகிப் போவார்கள். முக்கியமானதொரு எண்ணம் இப்போது நிறைவேறும். செலவுகள் சற்று அதிகரிக்கும். சிக்கன நடவடிக்கை தேவை. கலைத்துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரப் பெறுவார்கள். அரசுப்பணியாளர்களது கோரிக்கை நிறைவேறும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும். கூடும்.
வழக்குகளிலும் விளையாட்டுகளிலும் வெற்றி கிடைக்கும். குருவும் சனியும் அனுகூலமாக உலவாததால் பொருளாதாரப் பிரச்சினை ஏற்படும். பிறருக்கு ஜாமீன் கொடுக்கலாகாது. கெட்டவர்களின் தொடர்பை விட்டு விலகி, நல்லவர்களின் நட்புறவை நாடிப் பெறுவது நல்லது. மக்கள் நலனில் அக்கறை தேவைப்படும். நண்பர்கள், உறவினர்களால் செலவுகள் ஏற்படும். வாரப் பின்பகுதியில் பெண்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் கூட்டாளிகள் உதவுவார்கள். புதிய ஆடை, அணிமணிகள் சேரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 15, 16, 19.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு, கிழக்க
நிறங்கள்: சிவப்பு, வெண்மை, இளநீலம், ஆரஞ்சு.
எண்கள்: 1, 6, 7, 9.
பரிகாரம்: குரு, சனி ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்து கொள்ளவும். பெரியவர்களையும் மகான்களையும் வணங்கி அவர்களது நல்வாழ்த்துக்களைப் பெறுவது நல்லது.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 5-ல் குருவும் 10-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. செய்தொழிலில் அபிவிருத்தி காணலாம். திரவப் பொருட்கள் லாபம் தரும். உடன்பிறந்தவர்கள் மற்றும் மக்களால் நலம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். பல வழிகளில் வருவாய் வந்து சேரும். குடும்பத்தில் சிறு சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். மாணவர்களது நிலை உயரும். மாதர்கள் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். நல்லவர்களின் நட்புறவு கிடைக்கும். புத்திசாலித்தனம் கூடும்.
4-ல் ராகுவும் 7-ல் சனியும் இருப்பதால் அலைச்சல் சற்று அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் நல்லதும் அல்லாததுமான பலன்கள் கலந்தவாறு ஏற்படும். உத்தியோகஸ்தர்கள், ஆன்மிகவாதிகள், விஞ்ஞானிகள் அனுகூலமான போக்கைக் காண்பார்கள். சுப காரியங்களுக்காகவும், வாழ்க்கை வசதிகளைக் கூட்டிக் கொள்ளவும் செலவு செய்வீர்கள். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வப் பணிகள் நிறைவேறும். .
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 15, 16, 19.
திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, வடக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, பொன் நிறம், பச்சை.
எண்கள்: 3, 5, 6, 7.
பரிகாரம்: வன துர்க்கையை வழிபடவும்.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 6-ல் சனியும், 11-ல் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் காரியத்தில் வெற்றி கிட்டும். பண வரவு சீராகவே இருந்துவரும். புதியவர்களின் தொடர்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். உழைப்புக்குரிய பயன் கிடைத்துவரும். திறமை வீண்போகாது. தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அனுகூலமான போக்கு நிலவிவரும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள். மாதர்களது எண்ணம் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கையோ, ஆதாயமோ கிடைக்கும்.
ஜன்ம ராசியில் சூரியனும் செவ்வாயும் உலவுவதால் எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது. உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். தந்தை நலனில் கவனம் தேவை. வாரப் பின்பகுதியில் சுக்கிரனும் சந்திரனும் 11-ம் இடத்தில் இணைவதால் பண வரவு அதிகமாகும். ஆடவர்களுக்குப் பெண்களால் நலம் உண்டாகும். குடும்ப நலம் திருப்தி தரும். தோற்றப்பொலிவு ஏற்படும். அழகுப் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 15, 16, 19, 21. . . .
திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: வெண்மை, இளநீலம், கறுப்பு.
எண்கள்: 4, 5, 6, 8.
பரிகாரம்: கணபதியை வழிபடவும்.
கடக ராசி வாசகர்களே
கோசாரப்படி கிரக நிலை சாதகமாக இல்லை. ஜனன கால ஜாதகப்படி யோக பலம் உள்ள தசை, புத்தி, அந்தரங்கள் நடந்தால் மட்டுமே சுப பலன்கள் உண்டாகும். ஜாதக பலமும் இல்லாதவர்களுக்கு சோதனைகள் கூடவே செய்யும். எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். எக்காரியத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது நல்லது. மனத்தில் ஏதேனும் சலனம் உண்டாகும்.
விஷத்தாலும், விஷ ஜந்துக்களாலும் பாதிக்கப்பட நேரலாம். வாரப் பின்பகுதியில் சந்திரன் உங்கள் ராசிக்கு 0, 10ஆம் இடங்களில் உலவும் நிலை அமைவதால் தெய்வப் பணிகளிலும், தர்மப்பணிகளிலும் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி பெறலாம். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். தந்தையாலும், மக்களாலும், உடன்பிறந்தவர்களாலும் இடர்ப்பாடுகள் உண்டாகும். அரசு விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. செய்தொழிலில் இடமாற்றம் உண்டாகும். பொருள் வரவைக் காட்டிலும் செலவுகள் கூடும். சிக்கனம் தேவை. கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட தேதிகள்: ஜூன் 19, 21.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, இளநீலம்.
எண்கள்: 2, 6.
பரிகாரம்: நவக்கிரக ஜப, ஹோமம் செய்யவும். கோளறு திருப்பதிகம் வாசிப்பது சிறப்பாகும்.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 9-ல் சுக்கிரனும் 11-ல் சூரியனும் புதனும் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். உடல் நலம் சீராகும். மனத்தில் துணிவு கூடும். செயலில் வேகம் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். கொடுக்கல்-வாக்கல் லாபம் தரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். அரசியல்வாதிகளுக்கும் அரசுப்பணியாளர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள்.
பொறியாளர்களது நோக்கம் நிறைவேறும். ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் ஆதாயம் கிடைக்கும். முக்கியஸ்தர்களின் சந்திப்பும் அதனால் அனுகூலமும் ஏற்படும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். எதிர்ப்புக்கள் அகலும். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். போட்டிகளிலும், விளையாட்டுகளிலும் வெற்றி கிட்டும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு உண்டாகும். வாரக் கடைசியில் தெய்வப் பணிகள் நிறைவேறும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தந்தையால் அதிக நலம் ஏற்படும். பெண்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் பல ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 15, 16, 21.
திசைகள்: தெற்கு, வடகிழக்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, பொன் நிறம், ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 5, 6, 9
பரிகாரம்: விநாயகரை வழிபடவும்.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 6-ல் கேதுவும் 8-ல் சுக்கிரனும் 10-ல் சூரியனும் செவ்வாயும் புதனும் உலவுவது நல்லது. எதிர்ப்புக்களைக் கடந்து வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். தெய்வப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். நல்லவர்களின் தொடர்பு நலம் சேர்க்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள். வழக்கில் நல்ல திருப்பமோ, வெற்றியோ கிடைக்கும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத் திறமை கூடும். பண வரவு அதிகரிக்கும். வாரப் பின்பகுதியில் எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். தொலைந்த, மறைந்த பொருள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கையோ, அவற்றால் வருவாயோ கிடைக்கும். எலக்ட்ரிக்கல், எலக்டெரானிக்ஸ் துறைகள் லாபம் தரும். செய்தொழிலில் அபிவிருத்தி காண வாய்ப்பு கூடிவரும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்பு கிடைக்கச் சந்தர்ப்பம் உருவாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 15, 16, 19 (முற்பகல்). .
திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடமேற்கு, வடக்கு.
நிறங்கள்: நீலம், மெரூன்,, பச்சை.
எண்கள்: 1, 6, 6, 7, 8, 9.
பரிகாரம்: துர்க்கைக்கோ, காளிக்கோ நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago