துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 11-ல் குரு உலவுவது விசேஷம். 2-ல் யோகக்காரகன் சனியும், புதனும் இணைந்திருப்பது அனுகூலமாகும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். நல்லோர் தொடர்பு நலம் சேர்க்கும். உத்தியோகஸ்தர்கள் நிலை உயரும். ஆசிரியர்களின் நோக்கம் நிறைவேறும். மாணவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.
பிள்ளைகள், தந்தையால் அனுகூலம் ஏற்படும். சொத்துகள் சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். ஜன்ம ராசியில் சூரியனும், 12-ல் செவ்வாய், ராகு உலவுவதால் கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். மனதில் ஏதேனும் பயம் ஏற்படும். வீண் செலவுகளைத் தவிர்ப்பதுடன், கைப்பொருளைப் பத்திரமாக வைத்துக்கொள்வது நல்லது. பயணத்தின்போது விழிப்புத் தேவை. 17-ம் தேதி முதல் பொருளாதார நிலை மேலும் உயரும். குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படும். வீண்வம்பு வேண்டாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 13, 15, 18.
திசைகள்: வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: மெரூன், இள நீலம், வெண்மை, பொன் நிறம், பச்சை.
எண்கள்: 3, 5, 6, 7.
பரிகாரம்: சூரியன், செவ்வாய், ராகுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது. ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும் கேட்கவும் செய்யலாம்.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் செவ்வாய் 11-ல் சுக்கிரன், ராகுவுடன் கூடி இருப்பது விசேஷம். முக்கியமான எண்னங்கள் இப்போது நிறைவேறும். எதிர்ப்புகள், தடைகள், குறுக்கீடுகள் விலகும். வழக்கு, வியாஜ்ஜியங்கள்; விளையாட்டு விநோதங்கள்; போட்டிப் பந்தயங்களிலும் வெற்றி கிட்டும். எதிரிகள் மனம் மாறி உதவுவார்கள். கலைத்துறை ஊக்கம் தரும்.
வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். பயணத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். உழைப்புக்குப் பின்வாங்காமல் கடுமையாகப் பாடுபடுபவர்களுக்கு அதிகம் பயன் கிடைக்கும். சோர்வுக்கும் சோம்பலுக்கும் இடம் தரலாகாது. எந்தவொரு வேலையையும் ஒத்திப்போட வேண்டாம். உடனுக்குடன் செய்வது நல்லது. வாரப் பின்பகுதியில் பண வரவு சற்று அதிகரிக்கும். நல்ல தகவல் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் ஏற்படும். முயற்சி பலிக்கும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். சனி, புதன், சூரியன் அனுகூலமாக உலவுவதால் உடல்நலனில் கவனம் தேவை. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 15, 18.
திசைகள்: தென்மேற்கு, தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, வெண்சாம்பல் நிறம், இளநீலம்.
எண்கள்: 4, 6, 9.
பரிகாரம்: சூரியன், சனிக்கு அர்ச்சனை செய்வது நல்லது. சிவ வழிபாடு நலம் கூட்டும்.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 9-ல் குரு, 10-ல் செவ்வாய், ராகு ஆகியோரும், 11-ல் சூரியன் உலவுவது சிறப்பு. மன மகிழ்ச்சி கூடும். அந்தஸ்தும் மதிப்பும் உயரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காணலாம். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும்.
நல்லவர்களின் ஆசிகளும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளாலும் உடன்பிறந்தவர்களாலும் அனுகூலம் உண்டாகும். 4-ல் கேதுவும், 12-ல் சனியும், புதனும் உலவுவதால் அலைச்சல் அதிகமாகும். இடமாற்றம் உண்டாகும். வீண் செலவுகள் ஏற்படும். வேலையாட்களால் தொல்லைகள் சூழும். 17-ம் தேதி முதல் சூரியன் 12-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. கண், கால், நரம்பு சம்பந்தமான உபாதைகள் உண்டாகும். குரு பலம் இருப்பதால் சமாளிப்பீர்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 15, 18.
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: புகை நிறம். பொன் நிறம், சிவப்பு.
எண்கள்: 1, 3, 4, 9.
பரிகாரம்: திருமால், ஆஞ்சநேயரை வழிபடவும்.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் சனி லாப ஸ்தானத்தில் இருப்பது விசேஷம். சூரியன், புதன், சுக்கிரன், கேதுவின் சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். புதிய பதவி, பட்டங்கள் வந்து சேரும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் உண்டாகும்.
கலைஞர்களுக்கு அளவோடு நலம் உண்டாகும். ஆன்மிகத்திலும், தத்துவார்த்தங்களிலும் ஈடுபாடு அதிகரிக்கும். தொழிலாளர்களது நிலை உயரும். விவசாயிகளுக்கு வருவாய் அதிகமாகும். பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் பொருட்கள் லாபம் தரும். சுபச் செலவுகள் சற்று கூடும். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். பொதுப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் ஏற்படும். 17-ம் தேதி முதல் சூரியன் 11-ம் இடம் மாறுவதும் சிறப்பாகும். நிர்வாகத்திறமை கூடும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 13, 18.
திசைகள்: மேற்கு, வடமேற்கு, வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: பச்சை, நீலம், மெரூன்.
எண்கள்: 1, 5, 6, 7, 8.
பரிகாரம்: குரு, தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 7-ல் குரு, 8-ல் சுக்கிரன், 10-ல் புதனும் சனியும் உலவுவது சிறப்பு. புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பிறருக்கு உதவுவீர்கள். பொது நலப்பணியாளர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். பிள்ளைகள் நலம் மகிழ்ச்சி தரும். வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள், தொழிலாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு, நல்ல இடம் மாற்றம் கிடைக்கும்.
பெரியவர்களும் தனவந்தர்களும் ஆதரவாக இருப்பார்கள். மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். இயந்திரப்பணியாளர்கள், இன்ஜினீயர்கள், போக்குவரத்து துறைகளைச் சேர்ந்தவர்கள், வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்களுக்கு பிரச்சினைகள் சூழும். பக்குவமாகச் சமாளிக்கவும். உடன்பிறந்தவர்களால் மன அமைதி கெடும். எக்காரியத்திலும் அவசரப்படாமல் பொறுமையாக ஈடுபடுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 13, 15.
திசைகள்: வடகிழக்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: பச்சை, நீலம், பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 6, 8.
பரிகாரம்: செவ்வாய், ராகுவுக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது அவசியம்.
மீன ராசி வாசகர்களே
கோச்சாரப்படி கிரக நிலை சிறப்பாக இல்லாததால் உடல்நலம் பாதிக்கும். மனதில் ஏதேனும் சலனம் உண்டாகும். பிள்ளைகளால் பிரச்சினைகள் சூழும். பொருளாதார நிலை சாதாரணமாகவே காணப்படும். கடன் தொல்லை சற்று கூடும். பெற்றோர் நலனில் கவனம் தேவை. புதிய முயற்சிகளை ஒத்திப்போடுவது நல்லது. மாமூலாகச் செய்து வரும் காரியங்களிலும்கூட அதிக கவனம் தேவை.
பிறரிடம் சுமூகமாகப் பழகவும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இருக்காது. விட்டுக் கொடுத்துப் போகவும். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். பயணத்தின்போது எச்சரிக்கை தேவை. வீண்விவகாரங்களில் தலையிட வேண்டாம். கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. ஜனன கால, ஜாதக பலம் உள்ளவர்கள் கவலைப்படத் தேவையில்லை. ஜாதக பலமும் சாதகமாக இல்லாதவர்களுக்குச் சோதனைகள் சற்று அதிகரிக்கவே செய்யும். இறைவழிபாட்டிலும் கிரக வழிபாட்டிலும் முழு நம்பிக்கையோடு ஈடுபடுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதி: நவம்பர் 13, 15, 18 தேதிகள் சுமாரானவை.
திசை: தெற்கும் வடகிழக்கும், வடமேற்கும் பொதுவில் நலம் தரும். .
நிறங்கள்: வெண்மை, சிவப்பு.
எண்கள்: 2, 9.
பரிகாரம்: நவக்கிரக ஜப, ஹோமம் செய்வது நல்லது. முடியாதவர்கள் ஹோமம் நடக்கும் இடம் சென்று அதில் கலந்து கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
11 hours ago
ஆன்மிகம்
13 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago