மகிழ்ச்சியான நேரத்திலும் எல்லை மீறாதவர்களே! உங்கள் ராசியை சந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் புதுவிதமாக யோசிப்பீர்கள். உங்களுடைய திறமையை பயன்படுத்தி முன்னேறுவதற்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். வீரியத்தைவிட காரியம்தான் முக்கியம் என்பதை உணர்வீர்கள். ஜூன் 17-ம் தேதி வரை குரு உங்களுடைய ராசிக்குள்ளேயே நின்றுகொண்டிருப்பதால் அவ்வப்போது முன்கோபப்படுவீர்கள். பெரிய நோய்கள் இருப்பதைப் போன்ற பிரமை வந்து நீங்கும்.
ஆனாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது. ஜூன் 18-ம் தேதிக்குப் பிறகு சுறுசுறுப்பாவீர்கள். தடைபட்ட காரியங்களும் நல்ல விதத்தில் முடிவடையும். தள்ளிப் போன காரியங்களெல்லாம் முதல் முயற்சியிலேயே முடியும். பழைய கடன் பிரச்சினையை தீர்க்க வழி பிறக்கும். அடகிலிருந்த நகையையும் மீட்பீர்கள். குடும்பத்திலும் அடுத்தடுத்து நல்லது நடக்கும். மகளுக்கு வரன் பார்த்து ஓய்ந்து போய்விட்டீர்களே! இந்த வருடத்தின் பிற்பகுதியில் அனைவரும் மெச்சும்படி திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். இந்த வருடம் முழுக்க சனி உங்களுடைய ராசிக்கு 5-ம் வீட்டிலேயே நிற்பதால் பிள்ளைகளின் பிடிவாத குணம் அதிகமாகும்.
அவர்கள் பாதை மாறாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளுடன் இயல்பாகப் பேசி பழகுவதற்கு நீங்கள் அதிக நேரம் ஒதுக்குவது நல்லது. அவர்களின் குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டாமல் அவர்களின் திறமைகளையும் நீங்கள் பாராட்டிப் பேசுவது நல்லது. தாய்வழி உறவினர்களுடன் சின்னச் சின்ன மோதல்கள் வரும். ராகு, கேது ஓரளவு சாதகமாக இருப்பதால் இந்த வருடத்தில் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். வெளிமாநிலத்தவர், வெளிநாட்டவர் மூலமாக ஆதாயமடைவீர்கள். முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்தி பிரார்த்தனையை இந்த வருடம் நிறைவேற்றுவீர்கள்.
குலதெய்வக் கோயிலை புதுப்பித்து முன்னின்று கும்பாபிஷேகம் நடத்துவீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சுக்கிரன் 8-ம் வீட்டில் நிற்கும் போது இந்த ஆண்டு பிறந்திருப்பதால் வாகனத்தை மாற்றுவீர்கள். வாயுப் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. வாயுக் கோளாறால் நெஞ்சு வலி, மூட்டு வலி வந்து நீங்கும். வியாபாரத்தில் பல நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயம் உண்டு. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும்.
வருடப் பிற்பகுதியில் அதிரடி லாபம் உண்டு. உத்தியோகத்தில் அடிக்கடி தொல்லை கொடுத்து வந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். மார்ச், ஏப்ரல், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். புது வேலை வாய்ப்பும் கூடி வரும்.
வழிபாடு - பைரவர்
மதிப்பெண் - ஜனவரி - ஜூன் - 40/100, ஜூலை - டிசம்பர் - 80/100
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
2 hours ago
ஆன்மிகம்
6 hours ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
10 days ago
ஆன்மிகம்
16 days ago
ஆன்மிகம்
18 days ago
ஆன்மிகம்
18 days ago
ஆன்மிகம்
18 days ago
ஆன்மிகம்
18 days ago
ஆன்மிகம்
19 days ago
ஆன்மிகம்
23 days ago
ஆன்மிகம்
23 days ago
ஆன்மிகம்
24 days ago