மோதகமும் அதிரசமும் படைக்கலாம்

By க்ருஷ்ணி

எந்த சுபநிகழ்வாக இருந்தாலும் முழுமுதற் கடவுளாக விநாயகரை வணங்கிய பிறகே தொடங்குவது வழக்கம். பெரிய அளவில் இல்லையென்றாலும் பசுஞ்சாணத்திலும் மஞ்சளிலும்கூட பிள்ளையாரைப் பிடித்து வைத்து வழிபடுவார்கள். தென்னகதில் பிள்ளையாராக அருள்தரும் யானைமுகனை வட இந்திய மக்கள் கணபதியாக வழிபடுகிறார்கள். விநாயகர் அவதரித்த நாள் ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் இந்தக் கொண்டாட்டம் பத்து நாட்கள்வரை நீளும்.

ஆரம்பத்தில் பொதுமக்கள் கொண்டாட்டமாக இருந்த விநாயகர் சதுர்த்தியை மராட்டிய மன்னர் சிவாஜி, நாட்டு மக்களை ஒருங்கிணைத்துப் பெரும்விழாவாக மாற்றினார். பிறகு இந்திய தேசியத் தலைவர்களில் ஒருவரான பால கங்காதர திலகரால் 1893-ல் இந்துக்கள் கொண்டாடும் பெரும்விழாவாக முன்னெடுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டுவருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

நான்கு நிலை வழிபாடு

சிவன் – பார்வதி தம்பதியின் மகனான விநாயகர், 108 பெயர்களால் வணங்கப்படுகிறார். வினை தீர்க்கும் விநாயகரின் சதுர்த்தி, நான்கு நிலைகளில் கொண்டாடப்படுகிறது. சிலையினுள்ளோ உருவத்துக்குள்ளோ தேவதையை ஆவாகப்படுத்தும் ‘பிரானபிரதிஷ்தா’ அதில் முதல் நிலை.

16 வகைகளில் வழிபடுவது இரண்டாம் நிலை. பூஜை முடிந்த பிறகு விநாயகரை எடுத்துச் செல்வது மூன்றாவது நிலை. இறுதியாக சிலையை நீர்நிலைகளில் கரைப்பது நான்காம் நிலை. இப்படி நீர்நிலைகளில் கரைப்பதன் மூலம் அதன் வழியாகக் கயிலாயத்தில் இருக்கும் தனது பெற்றோரை அவர் அடைவதாக ஐதீகம்.

எருக்க மலர் வழிபாடு

மூஷிக வாகனனான விநாயகர், மோதகப் பிரியர். வெல்லமும் தேங்காயும் சேர்த்துப் பூரணமாக வைத்துச் செய்த கொழுக்கட்டையை அவருக்குப் படைக்கலாம். இது தவிர சுண்டல், அதிரசம், லட்டு போன்றவற்றை வைத்தும் வழிபடலாம். அருகம்புல் மட்டுமல்லாமல் அவருக்குப் பிரியமான எருக்கம்பூ மாலையை அணிவிக்கலாம்.

மகாபாரதம் எழுதிய கணபதி

மகாபாரதக் கதையை வியாசர் சொல்ல, விநாயகர் எழுதியதாக ஐதீகம். நூலை உருவாக்கும் கிரந்தகர்த்தா ஒருவராகவும் அதைக் கேட்டு எழுதுபவர் வேறொருவராகவும் இருப்பது அந்தக் கால வழக்கம். அந்த வகையில் ஓங்கார வடிவமாகவும் உலக இயக்கத்துக்குக் காரணமாகவும் விளங்கும் விநாயகர், வியாசர் முன் அமர்ந்து பாரதத்தை எழுதிமுடித்தார். தன் யானை முகத்துக்கு அழகு சேர்த்த தந்தத்தை ஒடித்து எழுத்தாணியாக்கிக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

ஐந்து கரங்களே அபயங்களே

விநாயகப் பெருமானுக்கு ஐந்து கரங்கள். பாசத்தை ஏந்தியிருக்கும் ஒரு கை, படைத்தலைக் குறிக்கிறது. தந்தம் ஏந்திய கை காக்கும் தொழிலைக் குறிக்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித்தலைக் குறிக்கிறது. இதனால்தான் படைத்தல், அழித்தல், காத்தல் ஆகிய மூன்று தொழில்களைச் செய்யும் மும்மூர்த்தியாகவும் வணங்கப்படுகிறார். மோதகம் ஏந்திய கை அருளையும் தும்பிக்கை மறைத்தலையும் குறிப்பதால் இவர் பராசக்தியாகவும் எல்லாம் வல்ல பரமேஸ்வரனாகவும் அருள்பாலிக்கிறார்.யானைமுகன்

விநாயகரின் பிறப்பு குறித்துச் சொல்லப்படும் கதைகளில் அன்னை பார்வதியால் அவர் உருவாக்கப்பட்டார் என்பதே பரவலாகக் கூறப்படும் கதை. ஒரு முறை பார்வதி குளித்துக்கொண்டிருந்தபோது விநாயகரை உருவாக்கி, குளியலறைக்கு வெளியே காவலுக்கு நிறுத்திவைக்கிறார்.

அப்போது அங்கே வந்த சிவபெருமான், பார்வதி இருந்த அறைக்குச் செல்ல முற்பட்டார். அன்னையின் ஆணைப்படி அவரை உள்ளே விடாமல் விநாயகர் தடுக்கிறார். இதனால் கோபமடைந்த சிவபெருமான், விநாயகரின் தலையைக் கொய்துவிடுகிறார். வெளியே வரும் பார்வதி நடந்ததை சிவபெருமானுக்கு விளக்குகிறார். ஏற்கெனவே கொய்துவிட்ட தலையை மீண்டும் விநாயகரின் உடலில் பொருத்த முடியாது என்பதால், உயிருள்ள உடம்பிலிருந்து ஒரு தலையை எடுத்துப் பொருத்த முடிவெடுக்கிறார்கள்.

விநாயகருக்கு யானையின் தலைதான் கிடைக்கிறது. அன்று முதல் யானைத் தலையுடன் அருள்பாலிக்கத்தொடங்குகிறார் விநாயகர். அரக்கர்களை அழிப்பதற்காக பிற தெய்வங்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன் – பார்வதியாக உருவாக்கப்பட்டவர் விநாயகர் என்று சொல்கிறவர்களும் உண்டு.

யானைமுகன்

விநாயகரின் பிறப்பு குறித்துச் சொல்லப்படும் கதைகளில் அன்னை பார்வதியால் அவர் உருவாக்கப்பட்டார் என்பதே பரவலாகக் கூறப்படும் கதை. ஒரு முறை பார்வதி குளித்துக்கொண்டிருந்தபோது விநாயகரை உருவாக்கி, குளியலறைக்கு வெளியே காவலுக்கு நிறுத்திவைக்கிறார். அப்போது அங்கே வந்த சிவபெருமான், பார்வதி இருந்த அறைக்குச் செல்ல முற்பட்டார்.

அன்னையின் ஆணைப்படி அவரை உள்ளே விடாமல் விநாயகர் தடுக்கிறார். இதனால் கோபமடைந்த சிவபெருமான், விநாயகரின் தலையைக் கொய்துவிடுகிறார். வெளியே வரும் பார்வதி நடந்ததை சிவபெருமானுக்கு விளக்குகிறார். ஏற்கெனவே கொய்துவிட்ட தலையை மீண்டும் விநாயகரின் உடலில் பொருத்த முடியாது என்பதால், உயிருள்ள உடம்பிலிருந்து ஒரு தலையை எடுத்துப் பொருத்த முடிவெடுக்கிறார்கள்.

விநாயகருக்கு யானையின் தலைதான் கிடைக்கிறது. அன்று முதல் யானைத் தலையுடன் அருள்பாலிக்கத்தொடங்குகிறார் விநாயகர். அரக்கர்களை அழிப்பதற்காக பிற தெய்வங்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன் – பார்வதியாக உருவாக்கப்பட்டவர் விநாயகர் என்று சொல்கிறவர்களும் உண்டு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்