முனிகிரி என்கிற கரந்தை

By விஜி சக்கரவர்த்தி

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சைவ, வைணவ, சமண, புத்த மதங்கள் தழைத்தோங்கியிருந்த காஞ்சிபுர நகரத்தை சுற்றியிருந்த இடங்களிலெல்லாம் அம்மதங்கள் சிறப்போடு இருந்தன.

காஞ்சிபுரத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் இரட்டைக் கிராமங்களான கரந்தை, திருப்பணமூர் எனும் சமண கிராமங்களுள்ளன. முனிவர்கள் பலர் இங்கு வாழ்ந்ததால் கரந்தைக்கு முனிகிரி என்ற பெயருமுண்டு.

சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னரால் கட்டப்பட்ட சமணர் கோயில் கரந்தையில் உள்ளது. இக்கோயில் நெடிதுயர்ந்த மதிலால் சூழப்பட்டுள்ளது.

பல்வேறு காலகட்டங்களில் சோழர், விஜயநகர மன்னர், சிற்றரசர்கள் ஆகியோர் இக்கோயிலை ஆதரித்துள்ளனர் என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கோயிலின் மூலவர் 17- வது தீர்த்தங்கரரான பகவான் குந்துநாதர் சுதை வடிவில் காட்சி தருகிறார்.

வீரஇராஜேந்திர சோழன் திருப்பணிகள் செய்ததால் இக்கோயில் வீரஇராஜேந்திர பெரும்பள்ளி எனப்பட்டது கருவறையின் பின்புறம் புடைப்புச் சிற்பமாக பகவான் பார்சுவநாதர் மேற்கு திசை நோக்கி திருநறுங்கொண்டையெனும் இடத்தில் இருப்பதுபோல் இருப்பதால் மேற்றிசைப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.

சோழர்காலக் கல்வெட்டும் இப்பெயரையே சுட்டுகிறது. இத்தலத்தில் பாகுபலி, சிலையாக மிகக் கலை நயத்தோடு, நேர்த்தியோடு காட்சித் தருகிறார்.

உயரமான கருவறையில் சுதை வடிவிலுள்ள மகாவீரர் திருக்காட்டாம்பள்ளி ஆழ்வார் எனப்படுகிறார். இக்கருவறையிலிருந்து பார்த்தால் கிழக்கேயுள்ள மாமண்டூர் குகைப்பள்ளி புலப்படும்படியும் கருவறை உயரமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக ஆதிபகவன் கோயில். ஆலங்காட்டா எனும் மலையிலிருந்த கோயிலைப் பழுதின்றி பிரித்துவந்து இங்கு கட்டியுள்ளனர்.

இங்குள்ள தர்மதேவி மிக மூர்த்திகரமானதென்று நம்புகின்றனர். அகளங்கர் எனும் பெரும் புகழ் வாய்ந்த மாமுனிவர் தருமதேவி ஆசியுடன் அரசன் இமசீதளன் காலத்தில் பௌத்தரை சமயவாதம் செய்து வென்றுள்ளார்.

அகளங்க முனிவரின் சிலையும் பாதக் கமலங்களும் மண்டபமும் இத்தலத்தில் அமைக்கப்பட்டுள்ளன சம்மந்தபத்திரர், முனிபத்திரர் ஆகிய முனிவர்களின் திருப்பாதங்களும் நிறுவப்பட்டுள்ளன.

காலஞ்சென்ற டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி முதலியார் எனும் முன்னாள் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் தருமதேவியைப் பற்றி வெகுவாகப் புகழ்வார். அறப்பாவலர் அர்க்ககீர்த்தி, ‘பன்னலன் பெருகிட பறம்பையி லுறைகின்ற தருமதேவி’ எனப் பாடுகிறார்.

ஆண்டுதோறும் இவ்வூரில் மகாத்திருவிழாவின்போது தெப்ப உற்சவம் நடை பெறுகிறது. குந்துநாத அஷ்டகம், தருமதேவி பத்து, தோத்திரத் திரட்டு ஆகிய நூல்கள் இத்தலத்தையும் தருமதேவியையும் புகழ்ந்து பாடுகின்றன. கரந்தையில்

பல அறவோர்கள் தோன்றி சமணத்தையும் தமிழையும் வளர்த்துள்ளனர். அவர்கள் வழியில் கரந்தை அ.சுகுமாரன் என்பவர் இன்றும் பல ஜைன நூல்கள் எழுதி தமிழ்ப் பணி ஆற்றி வருகிறார். முனைவர். ஏ. ஏகாம்பரநாதன் இத்திருத்தல வரலாற்றை எழுதிய நற்பணியைச் செய்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்