திருவரங்கத்தின் சமுத்திரப் பெருமையை ஒரு சிமிழுக்குள் கனகச்சிதமாகக் கொண்டுவந்திருக்கிறது வேதா டி. ஸ்ரீதரனின் `அரங்கமா நகருளானே’ என்னும் இந்நூல். இந்த அரிய முயற்சி கைகூடியிருப்பதும் தெய்வ சங்கல்பம்தான் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக விளக்குகிறது நூலின் உள்ளடக்கம்.
திருக்கோயிலின் பிரம்மாண்டத்தை ஒரே பத்தியில் நம் கண் முன் விரிக்கிறார் நூலாசிரியர். உலகிலேயே ஏழு பிராகாரங்கள் கொண்ட திருக்கோயில் இது ஒன்றுதான். உலகில் உள்ள புராதன ஆலயங்களிலேயே மிகவும் பெரியது இந்தத் திருக்கோயில்தான். ஏழு பிராகாரங்களையும், ஒன்பது தீர்த்தங்களையும், 21 கோபுரங்களையும் தன்னகத்தே கொண்டு, 13 நீர்நிலைகள், 13 கலசங்களுடன் 236 அடி உயர ராஜகோபுரத்துடன், 156 ஏக்கர் பரப்பளவில் கம்பீரத்துடன் காட்சி தருகிறது திருக்கோயில் என்கிறார்.
திருக்கோயிலின் பிரம்மோற்சவம் வரலாறு, தலபுராணம், தொன்மை, ஆலய வழிபாடு, பூலோக வைகுந்தமாக மதிக்கப்படும் திருவரங்கத் திருத்தலத்தின் முக்கிய சன்னிதிகள் குறித்த விளக்கங்கள், திருவிழாக்கள், ராமானுஜரின் பங்களிப்பு, அரிய புகைப்படத் தொகுப்புகள், ஆழ்வார்களின் பெருமைகள், ஆவணங்கள், பெருமாளின் வைரம் திருடுபோன கதை என பக்கத்துக்கு பக்கம் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களின் ஊர்வலம் அந்தக் காலத்துக்கே பயணிக்கவைக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் ஆலயத்திலிருக்கும் ஆண்டாள் திருக்கரத்தை அலங்கரிக்கும் பச்சைக்கிளியும் தினமும் இலைகளைக் கொண்டும், மூங்கிலைக் கொண்டும், மாதுளம்பூவைக் கொண்டும் நான்கு மணிநேரம் உழைப்பில் தயாராகிறது என்பதும், இத்திருப்பணியைச் செய்பவர்கள் சாத்தாத வைஷ்ணவர்கள் என்னும் செய்தி ஆச்சரியமளிக்கிறது.
தேவதாசி வெள்ளையம்மாளின் தியாகம்
ஏழு பிராகாரங்களில் அகலங்கார திருச்சுற்றில் கிழக்குப் பகுதியில் எழும்பியிருக்கும் வெள்ளைக் கோபுரம் முக்கியமானது. பகைவர்களின் படையெடுப்பில், ரங்கநாதர் விக்கிரகத்தை கைப்பற்ற சேனாதிபதி கோயிலுக்குள் வருகிறார். அவரை, தாசி வெள்ளையம்மாள் என்பவர் ரங்கநாதரின் சிலை இருக்கும் இடத்தைக் காட்டுகிறேன் என்று அழைத்துக் கொண்டு, கோபுரத்தின் உச்சியை அடைகிறாள். அங்கிருந்து சேனாதிபதியை கீழே தள்ளிவிட்டு, தானும் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்கிறார். அவரின் தியாகத்தைப் போற்றும் வகையிலேயே அந்தக் கோபுரம் வெள்ளைக் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது.
இன்றளவும் அந்தக் கோபுரத்திற்குப் பூச்சுகள் எதுவும் பூசாமலேயே பராமரிக்கப்படுகிறது. அந்தத் தாசி இறக்கும் தறுவாயில், “இனிமேல் ஸ்ரீரங்கத்து தேவதாசிகள் இறந்தால், அவர்களுக்கு மடைப்பள்ளியில் இருந்து நெருப்பும், ஆலயத்தின் தீர்த்தப் பிரசாதம், பெருமாள் மாலை, பரிவட்டம் ஆகிய மரியாதைகளும் அளிக்கப்பட வேண்டும்” என்று பிரார்த்தித்தாள் வெள்ளையம்மாள். பெருமாளும் ``அவ்வாறே ஆகுக” என்று அருளினார். அது முதல் ஏறக்குறைய 630 ஆண்டுகளுக்கு ஸ்ரீரங்கத்து தேவதாசிகளுக்கு இந்த மரியாதை செய்யப்பட்டுவந்துள்ளது என்னும் தகவலும் இந்நூலில் பதிவாகியிருக்கிறது.
அரையர் சேவை
நாலாயிர திவ்ய பிரபந்தத்தைத் தொகுத்த நாதமுனிகளால் ரங்கநாதருக்கு நடத்தப்பட்டதே அரையர் சேவை. அரையர் சேவையின் சிறப்பையும் ராமானுஜர் வாழ்ந்த காலத்தில் ஏறக்குறைய 700 அரையர்கள் இருந்த செய்தியும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
அரங்கமா நகருளானே - வேதா T. ஸ்ரீதரன்
வேத ப்ரகாசனம், இரண்டாவது மாடி,
64, மதுரை சாமி மடம் தெரு, பெரம்பூர், சென்னை - 11.
தொலைபேசி: 044-22425447. | விலை : 300/-
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
11 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago