சஷ்டி நாளான இன்று, சக்தியின் மைந்தன் குமரனை வேண்டுவோம். நம் சங்கடங்கள் அனைத்தையும் தீர்த்தருள்வான் கந்தவேலன்.
மாதந்தோறும் வருகிற சஷ்டியன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருப்பார்கள் பக்தர்கள். விரதமிருந்து அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று, கண் குளிர அழகன் முருகனைத் தரிசித்துப் பிரார்த்தனை செய்வது வழக்கம்.
இதோ... இன்று சஷ்டி தினம். வெள்ளிக்கிழமையும் கூட. அற்புதமான வெள்ளிக்கிழமை நாளில், சஷ்டி திதியும் சேர்ந்திருக்கும் வேளையில், முருகப்பெருமானை நினைத்து பூஜியுங்கள். கந்தசஷ்டி கவசம் முதலானவை பாராயணம் செய்து வழிபடுங்கள்.
முருகனுக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. எனவே செம்பருத்தி, சிகப்பு ரோஜா, செவ்வரளி முதலான மலர்கள் சூட்டி, அழகனை இன்னும் அழகுப்படுத்துங்கள். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து உங்கள் வேண்டுதல்களை மனதார அவனிடம் சொல்லுங்கள்.
உங்கள் சங்கடங்களையெல்லாம் தீர்த்தருள்வான் சக்திகுமாரன். தீராத வினைகளையும் தீர்த்தருள்வான் வேலவன்.
சஷ்டி நன்னாளில், அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் செல்லுங்கள். முடிந்தால், நான்குபேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். நம்மையும் நம் வாழ்வையும் இன்னும் இன்னும் உயர்த்துவான் கார்த்திகேயன்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
17 hours ago
ஆன்மிகம்
23 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago