அனுமன் இருக்க பயமேன்!

By வி. ராம்ஜி

சனிக்கிழமை நாளில், அனுமனுக்கு துளசிமாலையோ வடைமாலயோ சார்த்தி வழிபடுவோம். நம் மன பயங்களை நீக்கி, மனோபலத்தைத் தந்து, காரியத்தில் வெற்றியைத் தந்தருள்வார் ஆஞ்சநேயர்.

சனிக்கிழமை, பெருமாளுக்கும் அனுமனுக்கும் உரிய அற்புதநாள். இந்த நாளில், அருகில் உள்ள அனுமன் கோயிலுக்குச் செல்வது மிகுந்த நன்மையைத் தந்தருளும். பெருமாள் கோயிலில் உள்ள அனுமன் சந்நிதியையும் வணங்கி வரலாம்.

அனுமன் வழிபாடு எப்போதுமே காரியத்தில் வீரியத்தைத் தரவல்லது. மனக்கிலேசங்களை நீக்கி, மனதில் தெளிவையும் பலத்தையும் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

இந்த சனிக்கிழமை நன்னாளில், அருகில் உள்ள அனுமன் ஆலயத்துக்குச் சென்று, ஆஞ்சநேயரைத் தரிசனம் செய்யுங்கள். அவருக்கு துளசி மாலை சார்த்துங்கள். வெற்றிலை மாலை சார்த்தி வேண்டிக் கொண்டால், எடுத்த காரியம் யாவும் தடையின்றி நிகழும். அந்தச் செயல்கள் அனைத்துமே வெற்றியைப் பெறும் என்பது ஐதீகம்.

முடிந்தால், வடைமாலை சார்த்தி வாயுமைந்தனை வேண்டிக் கொள்ளுங்கள். பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். சத்ருக்கள் தொல்லை ஒழியும் என்கிறார்கள் பக்தர்கள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

14 hours ago

ஆன்மிகம்

20 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

மேலும்