சூரியோதயத்திற்குப் பின்னும் தூங்காதீர்கள்!

By வி. ராம்ஜி

தினமும் சூரிய உதயத்துக்கு முன்னதாக எழுந்து கொள்ளவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். ஏன்... எதற்காக?

வேத காலக் கடவுள் சூரிய பகவான் என்கின்றன ஞானநூல்கள். உலகிற்கு வெளிச்சம் தருவதுடன் இரவு-பகலையும் உருவாக்குகிறார். உடலுக்கு சக்தியையும் தருகிறார். பலத்தையும் வழங்குகிறார் சூரியக் கடவுள்.

சூரியன் ஏழு குதிரைகளைப் பூட்டிய தேரில் வருகிறார். சூரியக் கடவுளை விட அதிக சக்தி உள்ள தெய்வம் இல்லை எனும் அளவிற்கு வலிமை பெற்றவர் அவர்.

சூரியன் எழுவதற்குரிய அறிகுறிகள் தெரிந்ததுமே பறவைகளும், மிருகங்களும் தங்கள் கடமையைத் தொடங்கி விடுகின்றன. ஆனால் மனிதர்களில் முக்கால்வாசிபேர் சூரியனின் வருகைக்குப் பிறகும் தூங்குகிற பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். சூரியனுக்கு மரியாதை கொடுக்காததால், அவர் தரும் இயற்கைச் சீற்றங்களைத் தாங்க முடியாமல் தவிக்கின்றனர்.

அதிகாலையில் எழுந்து சூரியனை வரவேற்க எல்வோரும் தயாராக வேண்டும். அப்படி செய்தால் இயற்கை சீற்றம் வர வாய்ப்பே இல்லை என்கிறது ரிக் வேதம்.

சூரியோதயத்திற்கு முன்பாக வானத்தில் பொன்னிறம் ஜொலிக்கும். இதுபோன்று தங்க நிறத்தில் வானம் ஜொலித்தால் அனைவரும் எழுந்து விட வேண்டும் எனப் பொருள்.

அதிகாலையில் எழும் பழக்கம் உடையவர்கள் மிக அதிக சக்தி பெறுவதுடன் நேர் வழியில் நடக்கிறார்கள் என்பதும் ரிக் வேதத்தின் கணக்கீடாக சொல்லப்பட்டிருக்கிறது. சூரியோதயத்திற்குப் பின்னும் தூங்கிக் கொண்டிருக்காதீர்கள். அது உடல், மன ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல!

எனவே சூரியோதயத்திற்கு முன் எழுவோம். அதிக சக்தியையும் ஆற்றலையும் புத்திக் கூர்மையையும் பெறுவோம். ஞானத்தில் சிறந்துவிளங்குவோம். புத்தி சாதுர்யத்துடன் வாழ்வோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

15 hours ago

ஆன்மிகம்

21 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

மேலும்