தி
ருவனந்தபுரத்தின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று ஸ்ரீபத்மநாபசுவாமி ஆலயம். கடவுள் பக்தர், திருவிழாக்களின் நேசர், வரலாற்றாய்வாளர், தொல்லியல் ஆர்வலர், கலா ரசிகர் என அனைவரையும் ஈர்க்கும் கேந்திரம் இது.
இந்த ஆலயத்தின் ஆன்மிக முக்கியத்துவம், வரலாறு, கட்டிடக்கலை, சடங்குகள் என அனைத்து அம்சங்களையும் அரிய புகைப்படங்கள், வரைபடங்களோடு தி இந்துவின் சிறப்பு வெளியீடாக ‘SREE PADMANABHASWAMY TEMPLE WEALTH AND HERITAGE’ வெளியாகியுள்ளது. இந்தப் புத்தகத்தின் முன்னுரையிலேயே குறிப்பிட்டிருப்பது போல ஓர் ஆலயத்தை அதன் சகல அம்சங்களிலிருந்தும் கொண்டாடும் புத்தகம் இது.
பத்மநாபசுவாமி ஆலயத்தின் தொன்மையான வரலாற்றுப் பின்புலத்தை சந்தோஷ் கே. தம்பியின் கட்டுரை சொல்கிறது. திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கும் இந்த ஆலயத்துக்கும் இன்றைக்கும் நீடிக்கும் நேர்மையும் ஆத்மார்த்தமுமான தொடர்பு குறித்து பூயம் திருநாள் கவுரி பார்வதி பாயின் கட்டுரை படிக்கப்பட வேண்டியது.
மூலவர் பத்மநாபசுவாமி தொடங்கி விஷ்வக்ஷேனன், ராமசாமி சீதா லக்ஷ்மணன், யோக நரசிம்ம மூர்த்தி, வேத வியாசர், அஸ்வத்தாமா, திருவம்பாடி ஸ்ரீகிருஷ்ணசுவாமி உள்ளிட்ட இக்கோவிலின் தெய்வங்கள் குறித்த அறிமுகமும் பயனுள்ளதாக உள்ளது. 18 அடி அனந்த சயன சிலாரூபத்திலிருந்து, முக்கிய மண்டபங்கள், த்வஜஸ்தம்பம் ஆகியவை அழகிய வரைபடங்களுடனும் அளவு விவரங்களுடனும் தரப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம் ஆலயத்தின் மூலவடிவம் என்று சொல்லப்படும் திருவட்டார் ஆதி கேசவப் பெருமாள் கோயில் குறித்த கட்டுரையும் இந்த நூலில் உள்ளது.
bookjpgrightபத்மநாபசுவாமி ஆலயம் சந்தித்த சட்டரீதியான பிரச்சினைகள் குறித்த அரிய ஆவணப்பதிவும் நூலில் உள்ளது. பக்தர்களுக்கு மட்டுமல்ல; கலை ஆர்வலர்களுக்கும் இந்நூல் ஒரு பொக்கிஷம்.
புத்தகம் வாங்க
SREE PADMANABHASWAMY TEMPLE WEALTH AND HERITAGE
859 & 860, அண்ணா சாலை,
சென்னை - 02
விலை : ₹ 200
தொலைபேசி : 91-44-28575757, 28576300
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
12 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago