பலமும் வளமும் தரும் பங்குனிச் சிறப்புகள்!

By வி. ராம்ஜி

இதோ... மாசி மாதம் இன்றுடன் நிறைவடைகிறது. நாளைய தினம் 15.3.18 வியாழன் அன்று பங்குனி பிறக்கிறது. வாழ்வில் பலமும் வளமும், நலமும் நற்குணமும் தரும் பங்குனி மாதத்தின் விசேஷங்களை உரிய முறையில் அனுஷ்டித்து, பூஜித்து வணங்குவோம். இன்னும் இன்னுமாகச் சிறக்கவும் செழிக்கவும் வாழ்வோம்!

குருவாரம் எனப்படும் வியாழக்கிழமையில், பங்குனி மாதம் பிறக்கிறது. ஆகவே, குரு வார நன்னாளில், மாதப் பிறப்பும் கூட வரும் அற்புதவேளையில், அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று குரு பகவானையும் குரு தட்சிணாமூர்த்தியையும் மனதார வேண்டிக் கொள்ளுங்கள். பிறக்கின்ற பங்குனி, மங்காத புகழையும் செல்வத்தையும் தந்தருளும்.

17.3.18 அமாவாசை

7ம் தேதி சனிக்கிழமை அமாவாசை. முன்னோருக்கான நாள். முன்னோர் ஆராதனைக்கு உகந்த நாள். எனவே இந்த நாளில், அமாவாசை நாளில், தர்ப்பணம் செய்வது அவசியம். அதேபோல், இந்த நாளில், முன்னோரை மனதில் நினைத்து, இயலாதோருக்கு உணவுப் பொட்டலம் வழங்குங்கள்.

அன்றைய தினம் சனிக்கிழமையாகவும் இருப்பது சிறப்பு. எனவே எள் கலந்த சாதத்தை காகத்திற்கு வைத்து வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும். பித்ருக்கள் சாபம் நீங்கும்.

18.3.18 வசந்த நவராத்திரி

மொத்தம் நான்கு நவராத்திரிகள் உள்ளன என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். சாரதா நவராத்திரி, வசந்த நவராத்திரி, ராஜமாதங்கி நவராத்திரி, வாராஹி நவராத்திரி என நான்கு நவராத்திரிகள் உண்டு. இன்றைய தினம், வசந்த நவராத்திரி தொடங்குகிறது. மற்ற தருணங்களில் உக்கிர தெய்வங்களான காளி, துர்கை முதலான தேவியரை வணங்குதல் சிறப்பு. இந்த வசந்த நவராத்திரியில், சாந்த சொரூபினியாகத் திகழும் அம்பிகையரை வணங்கி வழிபடுங்கள். இந்த ஒன்பது நாளும், லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, செளந்தர்ய லஹரி முதலானவற்றைப் பாராயணம் செய்து, தேவியை வணங்கி, தினமும் சர்க்கரைப் பொங்கல், கேசரி, பாயசம் முதலான நைவேத்தியங்களைப் படைத்து பிரார்த்தனை செய்து கொள்ளலாம். மாங்கல்ய பலம் சேரும். தடைப்பட்ட மங்கல காரியங்கள் நடந்தேறும் என்பது ஐதீகம்.

அதேபோல், ராமநவமி உத்ஸவங்களூம் இன்று முதல் தொடங்குகின்றன. ஸ்ரீராமருக்கும் ஸ்ரீகிருஷ்ணருக்கும் பத்ததி என்று சொல்லக் கூடிய, ஜனன உத்ஸவம் ஜனன நாளுக்கு முன் பத்துநாளும் பிந்தைய பத்துநாளும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 25ம் தேதி ராமநவமி. எனவே முந்தைய பத்துநாளும் ராமருக்கு விசேஷ பூஜைகள், உத்ஸவங்கள் விமரிசையாக நடைபெறுகின்றன.

22.3.18 வியாழன், பஞ்சமி, கிருத்திகை

22ம் தேதியான இன்று, குருவாரம் எனப்படும் வியாழக்கிழமை. ஆகவே குரு பலம் வேண்டி, குரு பகவானை வேண்டுங்கள். வழிபடுங்கள். பிரார்த்தனை செய்யுங்கள். அடுத்து, பஞ்சமி திதி. வளர்பிறை பஞ்சமி திதியும் கூட! எனவே இந்த பஞ்சமி திதி என்பது வாராஹி தேவியை வழிபடுவதற்கு உரிய உன்னதமான நாள். லலிதா சகஸ்ரநாமத்தில் கடைசி பாராவில், பாடல்களில், பஞ்சமி குறித்து அழகுற விளக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே, வாராஹி ஸ்லோகம் சொல்லி, வாராஹிக்கு செவ்வரளி மலர்கள் சார்த்தி, மனதார வேண்டுங்கள். உங்கள் எதிரிகள தலைதெறிக்க ஓடுவார்கள். எதிர்ப்புகள் தவிடுபொடியாகும்.

அடுத்து, கிருத்திகை நட்சத்திர நாள். கந்தனுக்கு உரிய நாள். மாதாந்திர கிருத்திகை நட்சத்திர நாளான அன்றூ, விரதமிருந்து வேலவனை வழிபடுங்கள். வினைகளையெல்லாம் தீர்த்தருள்வான் ஞானவேலன்.

23.3.18 வெள்ளி, சஷ்டி

முதல் நாள் கிருத்திகை. கந்த வழிபாட்டுக்கு உரிய நாளாக இருந்தது. அதேபோல், செவ்வாயும் வெள்ளியும் முருகனை வழிபடுவதற்கான வலிமை மிகுந்த நாட்கள் என்று போற்றுகிறார்கள். கூடவே, வெள்ளிக்கிழமையும் சஷ்டியும் சேர்ந்து வருகின்றன. சஷ்டி என்பதும் சக்திவேலனை தரிசிக்கக் கூடிய நாள்.

எனவே, சஷ்டி விரதம் மேற்கொள்வதும் அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று முருகப் பெருமானுக்கு செந்நிற மலர்கள் சார்த்தியும் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுவதும் சுபிட்சங்களைத் தந்தருளும். வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கும்.

பங்குனி பிறந்து முதல் வாரத்தின் முக்கியமான வைபவங்களின் பட்டியல் இது. ஆகவே இந்த வைபவத்தையும் நன்னாளையும் முழுமையாக உணர்ந்து அனுசரியுங்கள். கண்ணாரத் தரிசித்து, மனதார வழிபடுங்கள். எல்லா நல்லதுகளும் உங்களைத் தேடி வரும். சக்தியின் அருளும் சக்தி மைந்தனின் பேரருளும் பரிபூரணமாகக் கிடைத்து இனிதே வாழலாம். வாழ்வீர்கள் என்பது உறுதி!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

17 hours ago

ஆன்மிகம்

23 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

மேலும்