மேஷ ராசி நேயர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், 6-ல் புதன், ராகு சஞ்சரிப்பது சிறப்பு. சூரியன் 5-ல் இருந்தாலும் தன் சொந்த வீட்டில் இருப்பதால் நலம் புரிவார். ராசிநாதன் செவ்வாய் 8-ல் இருந்தாலும் குருவின் பார்வை பெறுவதால் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். மதிப்பும் அந்தஸ்தும் கூடும். இடமாற்றம் உண்டாகும். பொது நலப்பணியாளர்கள், அரசியல்வாதிகளுக்கு வரவேற்பு கூடும். கலைஞர்களது நிலை உயரும். நல்லவர்களது தொடர்பு நலம் சேர்க்கும்.
ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். வியாபாரம், கணிதம், விஞ்ஞானம், எழுத்து போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகம் லாபம் தரும். வாரப் பின்பகுதியில் பணவரவு அதிகரிக்கும். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். போட்டிகளில் வெற்றி கிட்டும்.
அதிர்ஷ்டமான நாட்கள்: செப்டம்பர் 11, 12, 14, 15
திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெண்மை, பச்சை, இளநீலம், வெளிர்கறுப்பு, ஆரஞ்சு
எண்கள்: 1, 4, 5, 6, 9
பரிகாரம்: விநாயகர், முருகரை வழிபடவும். இளைஞர்களுக்கு உதவவும்.
ரிஷப ராசி நேயர்களே
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 6-ல் சனி, 11-ல் கேது உலவுவதால் சுகம் கூடும். புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும். திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயன் கிடைக்கும். பொதுப்பணிகளில் ஆர்வம் கூடும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபாடு உண்டாகும். அதனால் ஓரளவு ஆதாயமும் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டு விலகும்.
குரு 3-ல் இருப்பதால் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. பொருளாதாரம் சம்பந்தமான துறைகளைச் சேர்ந்தவர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படும். பிள்ளைகளின் நடத்தையில் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை. வாரப் பின்பகுதியில் பணவரவு சற்று அதிகரிக்கும். குடும்ப நலம் சீராகும்.
அதிர்ஷ்டமான நாட்கள்: செப்டம்பர் 11, 14, 15
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு
நிறங்கள்: ஆரஞ்சு, மெரூன், வெண்மை, பச்சை, நீலம்
எண்கள்: 1, 5, 6, 7, 8
பரிகாரம்: துர்கை, காளிக்கு நெய்விளக்கேற்றவும். அந்தணர்களுக்கும் வேத விற்பன்னர்களுக்கும் உதவவும். பெரியவர்களை வணங்கி, அவர்களது ஆசிகளைப் பெறவும்.
மிதுன ராசி நேயர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சூரியன், சுக்கிரன், 4-ல் புதன், 6-ல் செவ்வாய், 10-ல் கேது உலவுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில் வெற்றி கிட்டும். பணப் புழக்கம் அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். வங்கிகள், சேமிப்பு நிறுவனங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவும். பணிவோடும் அன்போடும் பேசுவீர்கள். ஆன்மிகச் சொற்பொழிவாளர்களின் மதிப்பு உயரும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும்.
மருத்துவர்கள், விஞ்ஞானிகள்,ரசாயனத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். மாணவர்களது திறமை வெளிப்படும். ஆராய்ச்சியாளர்கள் புகழ் பெறுவார்கள். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்குக் கூடும். சுப காரியங்கள் நிகழும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்டமான நாட்கள்: செப்டம்பர் 11, 12, 14, 15
திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடமேற்கு, வடக்கு
நிறங்கள்: இளநீலம், ஆரஞ்சு, வெண்மை, பச்சை, மெரூன், பொன் நிறம், மஞ்சள்
எண்கள்: 1, 3, 5, 6, 7, 9
பரிகாரம்: துர்கையம்மனை வழிபடவும். ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
கடக ராசி நேயர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் ராகு உலவுவது சிறப்பு. செவ்வாய் 5-ல் குரு பார்வையுடன் இருப்பதால் நலம் புரிவார். தொலைதூரத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். தன ஸ்தானாதிபதி சூரியனும் லாபாதிபதி சுக்கிரனும் ஒன்று கூடி தன ஸ்தானத்தில் இருப்பதால் செல்வ நிலையில் எதிர்பாராத வளர்ச்சியைக் காணலாம். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும்.
புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். மகப்பேறு பாக்கியம் சிலருக்கு இப்போது கிட்டும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். வியாபாரம், கணிதம், விஞ்ஞானம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்படவும். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். வாரப் பின்பகுதியில் செலவுகள் சற்று அதிகரிக்கும். சிக்கன நடவடிக்கை தேவை.
அதிர்ஷ்டமான நாட்கள்: செப்டம்பர் 12, 14, 15
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, தெற்கு
நிறங்கள்: வெண்மை, சாம்பல் நிறம், இளநீலம், ஆரஞ்சு
எண்கள்: 1, 4, 6, 9
பரிகாரம்: சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவவும்.
சிம்ம ராசி நேயர்களே
உங்கள் ராசிநாதன் சூரியன் ராசியிலேயே பலம் பெற்றிருப்பது சிறப்பு. செவ்வாய் 4-ல் தன் சொந்தவீட்டில் குரு பார்வையுடன் உலவுவதும் நல்லது. புதன், சுக்கிரன், சனி ஆகியோர் சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். தொலைதூரத் தொடர்பால் நலம் உண்டாகும். கலைத்துறை ஊக்கம் தரும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். பொதுநலப் பணியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வரவேற்பு அதிகமாகும்.
புதிய சொத்துக்கள் சேரும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். நற்காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். இடமாற்றம் நல்லவிதமாக அமையும். பிள்ளை நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்வீர்கள். வாழ்க்கைத் துணையால் நலம் உண்டாகும். வாரப் பின்பகுதியில் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். பல வழிகளில் ஆதாயம் வந்து சேரும். முக்கியமானதொரு எண்ணம் ஈடேறும்.
அதிர்ஷ்டமான நாட்கள்: செப்டம்பர் 12, 14, 15
திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு
நிறங்கள்: ஆரஞ்சு, நீலம், பச்சை, சிவப்பு, வெண்மை
எண்கள்: 1, 5, 6, 8, 9
பரிகாரம்: துர்கை, விநாயகருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும். புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை.
கன்னி ராசி நேயர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் குரு உலவுவது சிறப்பு. புதன் ஜன்ம ராசியில் பலம் பெற்று உலவுவதால் நலம்புரிவார். செல்வாக்கும் மதிப்பும் உயரும். போட்டிகள் பந்தயங்களில் வெற்றி கிட்டும். எதிரிகள் விலகிப் போவார்கள். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். பணப் புழக்கம் அதிகரிக்கும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். தெய்வ தரிசனமும், சாது தரிசனமும் கிட்டும். தனவந்தர் சகாயம் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள், ஆன்மிகவாதிகள், ஆசிரியர்கள், கல்வித் துறைகளைச் சேர்ந்தவர்கள், வியாபாரிகள் ஆகியோருக்கெல்லாம் அனுகூலமான போக்கு நிலவும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு வரவேற்பு கூடும். 12-ல் சூரியன், சுக்கிரனும் 2-ல் சனியும் இருப்பதால் கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். ஜன்ம ராசியில் ராகுவும் 7-ல் கேதுவும் இருப்பதால் அலைச்சல் கூடும். பிறரிடம் கோபப்படாமல் சுமுகமாகப் பழகுவது நல்லது. அக்கம்பக்கத்தாரால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிக்கவும்.
அதிர்ஷ்டமான நாட்கள்: செப்டம்பர் 11, 14, 15
திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடக்கு, தெற்கு
நிறங்கள்: வெண்மை, இளநீலம், பச்சை, பொன் நிறம், சிவப்பு
எண்கள்: 3, 5, 6, 9
பரிகாரம்: ராகு, கேது, சூரியன், சனி ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்யவும். பார்வையற்றவர்களுக்கு உதவவும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
14 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago