இன்று 2.4.19ம் தேதி செவ்வாய்க்கிழமை பிரதோஷம். எனவே இந்தநாளில், மாலையில் சிவ தரிசனம் செய்து வேண்டிக்கொண்டால், நம் பாவமெல்லாம் பறந்தோடும். துக்கமெல்லாம் கரைந்து காணாமல் போகும்.
பிரதோஷ நாளில் சிவாலயம் செல்வதும் சிவனாருக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் அபிஷேகங்களில் கலந்துகொண்டு வேண்டிக் கொள்வதும் மிகுந்த பலனைத் தந்தருளும் என்பது ஐதீகம்.
அமாவாசைக்கு முந்தைய இரண்டாம் நாளும் பெளர்ணமிக்கு முந்தைய இரண்டாம்நாளும் பிரதோஷம் எனும் முக்கியமானதொரு நிகழ்வு வரும். திரயோதசி திதியன்று வருகிற இந்தப் பிரதோஷநாளில், பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள காலம்.
இன்று பிரதோஷம். பங்குனி மாதப் பிரதோஷம். அதிலும் செவ்வாய்க்கிழமையன்று வந்திருக்கும் பிரதோஷம். மகாசக்தியான அம்பிகைக்குரிய செவ்வாய்க்கிழமையில் பிரதோஷம் வந்திருப்பது கூடுதல் சிறப்பு. ஆகவே பராசக்திக்கு உரிய இந்த பிரதோஷ நாளில், சிவனாரைத் தொழுவதும் அம்பாளைத் தரிசிப்பது, நம் பாவங்களையெல்லாம் போக்கும். கஷ்டங்களையெல்லாம் காணடித்துவிடும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சிவனாருக்கும் நந்திதேவருக்கும் அபிஷேகப் பொருட்களை வழங்குங்கள். வில்வமும் செவ்வரளியும் வழங்குங்கள். நந்திதேவருக்கு அருகம்புல் மாலை சார்த்துங்கள். உங்கள் கடன் பிரச்சினைகள் யாவும் தீர்ந்துவிடும். மனதில் இருந்து வந்த பயமும் குழப்பமும் நீங்கி, தெளிவுடன் திகழ்வீர்கள்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
9 hours ago
ஆன்மிகம்
17 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago