மகா சிவராத்திரி - முதல் கால பூஜை நேரம்

By வி. ராம்ஜி

மகா சிவராத்திரி நன்னாள் இன்று (4.3.19 திங்கட்கிழமை). இன்றைய நாளில், இரவில் நான்கு கால பூஜைகள், சிவாலயங்களில் விமரிசையாக நடைபெறும்.

இந்த நான்கு கால பூஜையில் கலந்துகொண்டால், மறுபிறவி இல்லை என்கிறார்கள் சிவாச்சார்யர்கள். இந்த இப்பிறவியிலேயே சிவபெருமான், நம்மை ஆட்கொண்டு, சிவபதம் தருவார் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.

மகா சிவராத்திரி நாளில், இரவில் நடைபெறும் நான்குகால பூஜைகளைப் பார்ப்போம்.

முதல் கால பூஜை:

இரவு 7.30 முதல் 9.30 மணி வரை பூஜைகள் நடைபெறு. அப்போது சிவலிங்கத் திருமேனிக்கு பஞ்சகவ்யத்தால் அபிஷேகம் நடைபெறும்.

அரிசி அட்சதையால் லிங்கத்திருமேனிக்கு அலங்கரிப்பார்கள். பொன் ஆபரணங்கள் பூட்டி, வில்வத்தாலும் தாமரையாலும் அரளிப் பூக்களாலும் அர்ச்சிப்பார்கள். கற்பூரம், சந்தனாதி சேர்த்து தூப தீப ஆராதனை செய்யப்படும்.

வில்வம் பழத்தாலும் பால் அன்னம் கொண்டும் நைவேத்தியம் செய்யப்படும். பச்சைப்பயறு, பொங்கல் நைவேத்தியமும் செய்வது விசேஷம்.

இந்த வேளையில், சிவபுராணம், தேவாரம் மற்றும் திருவாசகப் பாடல்கள் பாடி, சிவனாரைத் தொழுவது நலம் அனைத்தும் தரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

மேலும்