மகாமகம்; தீர்த்தங்கள்... பலன்கள்!

By வி. ராம்ஜி

மாசி மகம் எனும் புண்ணிய நாள் நாளைய தினம் (19.2.19). இந்த நன்னாளில், கும்பகோணம் மகாமகக் குளத்தில் உள்ள தீர்த்தங்களில் நீராடுவது புண்ணியங்களையும் நற்பலன்களையும் வழங்கும் என்கிறது சாஸ்திரம்.

மகாமகக் குளத்தில் உள்ள தீர்த்தங்களையும் பலன்களையும் அறிந்துகொள்வோம்.

மகாமகக் குளத்தில் 19 தீர்த்தங்கள் அமைந்துள்ளன.

வாயு தீர்த்தம் – நோய்கள் யாவும் நீங்கும்.

பிரம்ம தீர்த்தம் – பித்ருக்கள் பாவம் தொலையும்.

கங்கை தீர்த்தம் – சாத்வீக மரணம்

குபேர தீர்த்தம் – செல்வம் பெருகும்

யமுனை தீர்த்தம் – ஆபரணச் சேர்க்கை தங்கும்

கோதாவரி தீர்த்தம் – எண்ணியது ஈடேறும்

ஈசான்ய தீர்த்தம் – சிவலோகப் பிராப்தி கிடைக்கும்

நர்மதை தீர்த்தம் – தேக ஆரோக்கியம் கூடும்

சரஸ்வதி தீர்த்தம் – கல்வி, ஞானம் கிடைக்கும்

இந்திர தீர்த்தம் – சொர்க்கம் நிச்சயம்

அக்னி தீர்த்தம் – கொலைக்கு நிகரான பாவங்கள் நீங்கும்

யமன் தீர்த்தம் – எம பயம் விலகும்

காவிரி தீர்த்தம் – குழந்தை பாக்கியம் கிடைக்கும்

குமரி தீர்த்தம் – அஸ்வமேத யாக புண்ணியம்

நிருதி தீர்த்தம் – கண் திருஷ்டி, வீண் கிலேசம் விலகும்

தேவ தீர்த்தம் – ஆயுள் பலம் பெருகும்

சரயு தீர்த்தம் – குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும்

வருண தீர்த்தம் – காடு கழனி நிறையும்

பயோஷினி தீர்த்தம் – இல்லற ஒற்றுமை மேலோங்கும்

மகாமகக் குளத்தில் நீராடுங்கள். வளமுடனும் நலமுடனும் வாழுங்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE