மிதுன ராசி வாசகர்களே
மற்றவரின் மன ஓட்டத்தை நாடி பிடித்துப் பார்ப்பதில் வல்லவர்களே! உங்களுக்கு 13.02.2019 முதல் 31.08.2020 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
ராகு தரப்போகும் பலன்கள்
இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் உட்கார்ந்து கொண்டு காரியத்தடை களையும் மன உளைச்சலையும் கொடுத்துவந்த ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால் உங்கள் பேச்சில் இனி முதிர்ச்சி தெரியும். சிலர் உங்களை அவமதித்துப் பேசினாலும் அதற்குத் தக்க பதிலடி தருவீர்கள். குடும்பத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். அவர்களின் வருங்காலம் குறித்த முடிவுகள் எடுப்பீர்கள்.
இருந்தாலும், பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள். பணவரவு அதிகரிக்கும். என்றாலும், செலவினங்கள் அதற்குத் தகுந்தாற்போல் இருக்கும். ராகு ராசிக்குள்ளேயே நுழை வதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். வெளி உணவுகளை அறவே தவிர்த்துவிடுவது நல்லது.
யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். இரவு நேரத்தில் வாகனத்தைக் கவனமாகக் கையாளுங்கள். அயல்நாட்டுப் பயணங்கள் தேடி வரும்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்
குரு பகவானின் புனர்பூசம்நட்சத்திரத்தில் 13.2.2019 முதல் 18.8.2019 வரை ராகு பகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் உங்களின் எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும். கடனாகக் கொடுத்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அறிஞர்கள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும்.
ராகு பகவான் தன் சுய நட்சத்திரமான திருவாதிரையில் 19.8.2019 முதல் 26.4.2020 வரை செல்வதால் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவினங்கள் கூடும். சொந்தபந்தங்களின் விமர்சனங்களைக் கண்டு அஞ்சாதீர்கள். நெருங்கிய நட்பை இழக்க நேரிடும். ஷேர் மூலம் பணம் வரும்.
செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 27.4.2020 முதல் 31.8.2020 வரை ராகு பகவான் செல்வதால் சொத்து வாங்குவது, விற்பதில் இழப்பு வரும். சகோதரர்களுடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். ரத்த அழுத்தத்தைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள். கமிஷன், தரகு மூலம் திடீர் பணவரவு உண்டு. வாகன விபத்து ஏற்படக்கூடும்.
கேதுவின் பலன்கள்
இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் உட்கார்ந்து கொண்டு ஏகப்பட்ட தொந்தரவுகளையும் மன உளைச்சல்களையும் கொடுத்துவந்த கேது இப்போது ராசிக்கு ஏழாவது வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். உங்களின் தோற்றப்பொலிவைக் கூட்டுவதுடன், அறிவாற்றலையும் அதிகப்படுத்து வார். பிரபலங்களின் அறிமுகமும் கிடைக்கும். பிள்ளைகளின் வருங்கால நலனுக்காகச் சிலவற்றைச் செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்த வர்கள் ஒத்துழைப்பார்கள். 7-ம் வீட்டில் கேது அமர்வதால் கணவன் மனைவிக்குள் அவ்வப்போது காரசாரமான விவாதங்கள் வந்துபோகும். ஒருவருக்கொருவர் சந்தேகப் படுவதைத் தவிர்க்க வேண்டும்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்
சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் 13.2.2019 முதல் 17.4.2019 வரை கேது பகவான் செல்வதால் தைரியமாகச் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மனோபலம் அதிகரிக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். வங்கியில் கடன் கிடைக்கும். இளைய சகோதரருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். எதிரிகள் நண்பர்களாவார்கள்.
சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 18.4.2019 முதல் 22.12.2019 வரை கேது செல்வதால் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். தோற்றப் பொலிவு கூடும். திருமண முயற்சி கைகூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும்.
கேது பகவான் தன் சுய நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் 23.12.2019 முதல் 31.8.2020 வரை செல்வதால் உங்கள் கை ஓங்கும். வழக்கால் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். உடல் நலம் சீராகும். சொந்தபந்தங்களால் மதிக்கப்படுவீர்கள். சிலர் சொந்தத் தொழில் தொடங்குவீர்கள்.
இந்த ராகு-கேது பெயர்ச்சியில் ராகு உங்கள் உடலையும் உள்ளத்தையும் உரசிப்பார்த்தாலும், கேதுவால் எதிர்நீச்சலில் வெற்றி பெறும் சக்தி உண்டாகும்.
திங்கட்கிழமையன்று அருகிலிருக்கும் சிவாலயம் சென்று சிவபெருமானை வழிபடு வதுடன் பசுவுக்கு அகத்திக்கீரை, கேரட் கொடுத்து வணங்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
8 hours ago
ஆன்மிகம்
11 hours ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
10 days ago
ஆன்மிகம்
16 days ago
ஆன்மிகம்
18 days ago
ஆன்மிகம்
18 days ago
ஆன்மிகம்
18 days ago
ஆன்மிகம்
18 days ago
ஆன்மிகம்
19 days ago
ஆன்மிகம்
23 days ago
ஆன்மிகம்
23 days ago
ஆன்மிகம்
24 days ago