பாவம் போக்கும் கோவிந்தன்

By ஜி.விக்னேஷ்

செப்டம்பர் 26 திருப்பதி பிரம்மோற்சவம் ஆரம்பம்

திருப்பதியில் நின்ற கோலத்தில் காட்சி தரும் வேங்கடவன் கலியுகத்தின் கண் கண்ட தெய்வம். இந்த சுவாமி குடிகொண்டு இருக்கும் திருமலைக்குப் பல பெயர்கள் உண்டு. இம்மலைகளுக்கு அப்பெயர்கள் வரக் காரணமான நிகழ்வுகளை நினைவுகூர்வதே புண்ணியம் அளிக்கும் என்பது ஐதீகம்.

இது குறித்த தகவல்கள் வேங்கடேச மகாத்மியத்தில் இருக்கின்றன. மலையே வேங்கடேசன் என்று ராமானுஜரால் போற்றப்பட்ட திருமலையின் பெயர்கள் பல.

கிருதயுகத்தில் விருஷபாசலம்

கிருத யுகத்தில் ரிஷபன் என்ற சாத்வீக சுபாவம் கொண்ட அசுரன் இருந்தான். நரசிம்ம பக்தனான அவன், உக்ர நரசிம்மனைக் குறித்து, கடும்தவம் செய்தான். ஒவ்வொரு நாளும் பூஜை முடிவில் தன் தலையைத் தானே கொய்து நரசிம்மருக்கு அளிப்பான். ஆனால் அதே நரசிம்மரின் அருளால் அந்த அசுரனுக்கு மீண்டும் தலை வந்துவிடும். இப்படியாக ஐயாயிரம் ஆண்டுகள் தவம் செய்தான்.

தவத்தால் மனம் மகிழ்ந்த நரசிம்மர் அவனுக்குக் காட்சி கொடுத்து, என்ன வரம் வேண்டும் என்று கேட்க, அவனோ நரசிம்மர் தன்னுடன் யுத்தத்திற்கு வர வேண்டுமென்று வரம் கேட்கிறான். அவன் கோரிய வரத்தையே அளித்த நரசிம்மர், அவனுடன் போரிடுவதற்குத் தயாரானார்.

அவனுக்கு போரிடும் ஆனந்தத்தை அளிக்க நரசிம்மர் சிறிது நேரம் போரிட்டார். பின்னர் தனது சக்கரத்தை ஏவி அவனது தலையைத் துண்டிக்கப் பணித்தார். சுதர்சனச் சக்கரம் அவனை துரத்தியது. அசுரன் தான் செய்த தவத்தால், முக்தியே கிடைக்கும் என்பதால், மகிழ்வுடன் தனது சிரசைத் தர முன் வந்தான். அதற்கு முன்னர் நரசிம்மப் பெருமாளிடம் அவன் ஒரு வேண்டுகோளை வைத்தான்.

தான் இறந்த பின்னர், தனது பெயரையே இம்மலைக்குச் சூட்ட வேண்டும் என்றான். இதனால் இங்கு வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இப்பெயரை உச்சரிப்பார்கள். அதனால் தனக்கு பெரிய புண்ணியம் ஏற்படும் என்று கூறினான். சக்கரம் அவனது தலையைச் சீவிய உடன் திருப்பதிக்கு ரிஷபாசலம் என்ற பெயர் வந்தது.

திரேதா யுகத்தில் அஞ்சனாசலம்

திரேதா யுகத்தில் குரங்குகளின் அரசன் கேசரி இத்திருமலையில் இருந்தார். இவரது மனைவி அஞ்சனாதேவி. மதங்க முனிவரின் ஆசியால் இவளுக்கு சத் புத்திரனாய் உதித்தவர் அனுமன்.

அஞ்சனை தவம் செய்து அனுமனைப் பெற்றதால் அவளது புகழ் ஓங்கியது. மேலும் திரேதா யுகத்தில், இம்மலைக்கு அஞ்சனையின் பெயரைப் பெற்று அஞ்சனாசலம் என்று புகழ் பெற்றது.

துவாபர யுகத்தில் சேஷாசலம்

ஒரு சமயம் துவாபர யுகத்தின் பொழுது வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் போட்டி ஏற்பட்டது. மேரு மலையின் புத்திரனான பர்வத மலையை சேஷன் பிடித்துக்கொள்ளட்டும்; இதனை வாயு தேவர் அசைத்து விட்டால், அவரே பலவான் என்று போட்டி வைத்தார் பெருமாள். இருவரும் இதற்கு ஒப்புக் கொண்டனர். வாயுவோ பெரும் சூறைக் காற்றால் பர்வதத்தை அசைக்க முற்பட்டான். பின்னர் சேஷனின் பிடியில் இருந்து பர்வத மலையைப் பிடுங்கி வானில் தூக்கிச் சென்றுவிட்டான் வாயு தேவன்.

இதனைக் கண்ட பர்வத மலையின் தாய் மேரு மலை, தன் மகன் அவதியுறுவதாக வாயு தேவரிடம் முறையிட்டாள். உடனே வாயு பகவானோ, பர்வத மலையைக் கீழே வைத்தான். அதுவே தற்போது திருமலையாய் இருக்கிறது. சேஷனுக்கு கர்வ பங்கம் ஏற்பட்டதால் இம்மலைக்கு சேஷாசலம் என்ற பெயர் துவாபர யுகத்தில் ஏற்பட்டது. தற்போது கலியுகத்தில் வேங்கடவான் என்று அழைக்கப்படும், திருவேங்கடமுடையானின் மலை வேங்கடாசலம் என்று அழைக்கப்படுகிறது.

விரும்பியவற்றைத் தருவதால் சிந்தாமணி, ஞானத்தை அளிப்பதால் ஞானாசலம், சான்னித்தியம் கொண்டுள்ள பல தீர்த்த நிலைகள் இருப் பதால் தீர்த்தாசலம், புண்ணிய நதிகளில் சிறந்த புண்ணிய நதியாக இருப்பதால் புஷ்கராத்திரி, ரிஷபன் என்ற அசுரன் விருப்பத்தால் விருஷா சலம், தங்கம் போன்று ஒளிரும் மேரு மலையின் மகனானதால் கனகாசலம், நாராயணன் என்ற பக்தன் தவம் செய்ததால் நாராயணாத்திரி, வைகுண்டத்தில் இருந்து இங்கு வந்ததால் வைகுண்டாசலம், நரசிம்மன் இங்கு அவதரித்ததால் சிம்ஹாசனம், ஆதியில் வராக சுவாமிக்குச் சொந்தமாக இருந்ததால் வராகாசலம், வாரைத்தைச் சேர்ந்த நீலன் இங்கு தவம் செய்ததால் நீலகிரி, பகவானும் பக்தர்களும் இணைந்து ஆனந்தம் பெறுவதால் ஆனந்தகிரி, மகாலஷ்மி பெருமாள் மார்பில் உரைவதால் ஸ்ரீ சைலம், ஸ்ரீநிவாசனின் சன்னிதானம் இருப்பதால் ஸ்ரீநிவாசகிரி என்றும் பெயர்கள் உண்டு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

13 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

10 days ago

ஆன்மிகம்

11 days ago

ஆன்மிகம்

12 days ago

மேலும்