மங்கல மாசி; இன்று புதுமஞ்சள் சரடு - தீர்க்கசுமங்கலி பாக்கியம் நிச்சயம்!

By வி. ராம்ஜி

மாசிக்கயிறு கட்டிக்கொள்வது மங்கல காரியங்களை வீட்டில் நடக்கச் செய்யும். மேலும் தம்பதிக்கு இடையே கருத்து ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியும் அந்நியோன்யமும் குடிகொள்ளும். தீர்க்கசுமங்கலியாக பெண்கள் திகழ்வார்கள் என்பது ஐதீகம்.

மாசிக்கயிறு பாசி படியும் என்றும் சொல்லிவைத்திருக்கிறார்கள். அதாவது, மாசி மாதத்தில் சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், தாலிச்சரடை (தாலிக்கயிறு) மாற்றிக் கட்டிக் கொள்வது என்பது காலங்காலமாக இருந்து வருகிறது.

இன்று மாசி மாத சங்கடஹர சதுர்த்தி (22.2.19). மேலும் சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில் சங்கடஹர சதுர்த்தி வருவது கூடுதல் சிறப்பு.

இந்தநாளில் மாலை 4.30 முதல் 5.30 மணிக்குள், பெண்கள் குளித்துவிட்டு, பூஜையறையில் சுவாமி படத்துக்கு முன்னே அமர்ந்துகொண்டு, மஞ்சள் தாலிச்சரடை மாற்றிக்கொள்ளலாம். இந்த சங்கடஹர சதுர்த்தி நாளில்,  தாலிச்சரடு மாற்றிக்கொள்ளுங்கள். தீர்க்கசுமங்கலியாக வாழ்வீர்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

6 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

மேலும்