பழையன கழிதலும் புதியன புகுதலும் என்றொரு வாசகம் உண்டு. தொன்றுதொட்டு வரும் இந்த வாசகம் போலவே பன்னெடுங்காலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது போகித் திருநாள். இன்று போகிப் பண்டிகை.
பொங்கலன்று வரக் கூடிய சூரிய பூஜையையும், அதன் மங்கலங்களையும் வரவேற்கும் விதமாக, போகித் திருநாள், பொங்கல் பண்டிகைக்கு முதல் நாளன்று அதாவது மார்கழி மாதக் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது.
அப்போது, பழைய, தேவையற்ற பொருட்களை தீயில் இட்டுப் பொசுக்கி, வீட்டைத் தூய்மை செய்து வெள்ளை அடிப்போம். நம்மை வாழ விடாத, நமக்கு உதவாத, கெடுதல் செய்யக் கூடிய தீய குணங்களை எல்லாம், தூய்மையான அறிவு எனும் ஞானத்தீயில் இட்டுப் பொசுக்கி, உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே இதன் தாத்பரியம்! தீயவற்றைப் போக்கு வதால், இது ‘போக்கி’ எனப்பட்டு, ‘போகி’ என மருவியது என்கிறார்கள்!
இல்லத்தையும் உள்ளத்தையும் தூய்மையாக்குவோம். போகியைக் கொண்டாடுவோம்.
நாளைய பொங்கல் பண்டிகைக்கு இன்றே தயாராவதுதான் போகியின் தாத்பர்யம். போகியைக் கொண்டாடி மகிழ்வோம். குடும்பமாய் பொங்கல் கொண்டாடுவது போல, பண்டிகைகளைக் கொண்டாடுவது போல, தூய்மைப் பணிகளிலும் குடும்பமாக ஈடுபடுவோம்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
21 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago