தை மாதம் அற்புதமான மாதம். இந்தத் தை பிறப்புதான் பொங்கல் என்று அருமையாகக் கொண்டாடி வருகிறோம். என்னதான் கியாஸ், சிலிண்டர், மாடுலர் கிச்சனெல்லாம் வந்துவிட்டாலும் கூட, பொங்கல் நன்னாளில் புதிய மண்பானையும் அடுப்புமாக வைத்து, பொங்கலிடுவதுதான் நம் பாரம்பரியம். இந்தப் பண்டிகையின் தனி ஸ்பெஷல்.
இதற்காகவே புது அடுப்பு வாங்குவார்கள். புதிய மண்பானை வாங்குவார்கள். வெட்டவெளியில், அது வீட்டு வாசல், கொல்லைப்புறம், அபார்ட்மெண்ட்ஸ் என்றால் மொட்டை மாடி, கார் பார்க்கிங் ஏரியா என அடுப்பு வைத்து, மண்பானையில் பொங்கல் வைப்பார்கள்.
இன்னும் சில வீடுகளில் வெண்கலப்பானையில் பொங்கல் வைப்பது வழக்கம். பொங்கலுக்கு வெண்கலப்பானையில் பொங்கல் வைக்க, பெண் வீட்டு சீர்வரிசையில் வெண்கலப் பானையும் முக்கிய இடம் வகிக்கும் என்கிறார்கள்.
இதோ... வரும் 15ம் தேதி பொங்கல் திருநாள். தை மாதப் பிறப்பு.
பொங்கல் படையலிட்டு சூரிய பகவானை வழிபடும் திருநாள். இந்த முறை பொங்கல் வைக்கும் நேரம் காலை 7 முதல் 8 மணி வரை. 15ம் தேதி இந்த நேரம்தான் சூரிய ஹோரை. எனவே இந்த நேரத்தில் பொங்கலிடுவது சிறப்பு வாய்ந்தது.
அடுத்து, அதாவது 8 முதல் 9 மணி வரை என்பது பூஜைக்கான காலம். இது, சுக்கிர ஹோரை. சுக்கிர ஹோரையில் பூஜை செய்தால், மகாலக்ஷ்மியின் பேரருளைப் பெறலாம். வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். சுக்கிர யோகம் கிடைக்கப் பெற்று இனிதே வாழலாம் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.
எனவே, 15ம் தேதி காலை 7 முதல் 9 மணிக்குள் பொங்கல் படையலிட்டு, சூரிய பகவானுக்கு நமஸ்காரம் செய்து, வீட்டு பூஜையறையிலும் நைவேத்தியங்கள் செய்து, வழிபடுவது மிகுந்த பலனைத் தரும்.
காலை 7 முதல் 8 மணி என்பது சூரிய ஹோரை. 8 முதல் 9 மணி வரை சுக்கிர ஹோரை. ஒருவேளையில் இந்தத் தருணத்தில் பூஜிக்க இயலாதவர்கள், பொங்கல் வைக்க முடியாதவர்கள், மதியம் 12 முதல் 1 மணி வரை, பொங்கலிட்டு வழிபடலாம். இந்த நேரம் குரு ஹோரை எனப்படுகிறது.
வீட்டில் கோலமிடுங்கள். பொங்கல் பானை வைக்கும் இடத்தில் கோலமிடுங்கள். பொங்கல் வைத்து,. பானைக்கு சந்தன குங்குமமிட்டு, மஞ்சள் கிழங்கு கொத்துகளை கட்டி, பொங்கல் பொங்கும்போது பொங்கலோ பொங்கல் என்று கூவி, சூரியனைப் பிரார்த்தனை செய்வோம்.
இந்த தை பிறப்பு, எல்லா நல்லதுகளையும் தந்தருளட்டும். பொங்கும் பொங்கல், எல்லா ஐஸ்வர்யங்களையும் வழங்கி, உள்ளத்தையும் இல்லத்தையும் நிறைக்கட்டும்!
பொங்கும் மங்கலம் எல்லார் இல்லங்களிலும் தங்கட்டும்.!
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
21 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago