குளிர்க்காற்றோடு இசையும் கலந்திருக்கும் மாதம் டிசம்பர். கர்னாடக இசையைக் கற்றுக் கொள்ளும் குழந்தைகளுக்கு பால பாடமாக ஸரளி, ஜண்ட வரிசைகளுக்குப் பின்பாக எளிமையான பாடல்களைப் பாடுவதற்கு கற்றுக் கொடுப்பார்கள். அப்படிச் சொல்லிக் கொடுக்கும் பாடல்களில் முக்கியமானது `ரார வேணுகோபாபாலா’ எனும் தெலுங்கு மொழிப் பாடல்.
பட்டணம் சுப்பிரமணிய அய்யரின் பாடலான இது, குழந்தை கிருஷ்ணனை தன்னிடம் வருமாறு அழைக்கும் பாவத்தோடு எழுதப்பட்டிருக்கும். இந்தப் பாடல் குழந்தைகளுக்கான பாலபாடமாக இருந்தாலும் இதைக் கேட்கும் எவரையும் உருக்கிவிடும் தன்மையைக் கொண்டது.
நம்முடைய பாரம்பரியமான வாத்தியங்களான புல்லாங்குழல், வீணை, கடம் இவற்றுடன், எலக்ட்ரானிக் வாத்தியங்களும் சேர்ந்திசையாய் ஒலிக்க, ரம்யமான அனுபவத்தை அளிக்கிறது இந்தியன் ராகாஸ் வெளியிட்டிருக்கும் இந்தப் பாடல்.
பிலஹரி ராகத்தின் மெலிதான ஆலாபனையை வாத்திய இசை தொடங்கிவைக்க, அதைத் தொடர்ந்து அர்ஜுன் ஆலாபனா ஆகிய இருவரும் சேர்ந்தும், தனித் தனியாக பாடலின் சில வரிகளையும் பாடுகின்றனர். இறுதியாக இருவரும் ஒருமித்துப் பாடி முடிக்கின்றனர்.
பல்லவி முடிந்ததும் விஷ்ணு பிரியாவின் புல்லாங்குழலும் மாதவியின் வீணையும் ஓர் இசை உரையாடலை நம் செவிக்கு விருந்தாக்குகிறது. அந்த உரையாடலை ஆமோதிப்பது போல சுவாமிநாத்தின் கடம் ஒலி எழுப்புகிறது. பாடலின் தொடக்கத்திலும் இறுதியிலும் எலக்ட்ரானிக் சாதனமான ஜியோஷ்ரட்டில் முத்தாய்ப்பான தன்னுடைய தனி முத்திரையைப் பதிக்கிறார் மகேஷ்.
ரார வேணுகோபாபாலா பாடலைக் காண: https://www.youtube.com/watch?v=cAFRwl4Q7ec
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
6 hours ago
ஆன்மிகம்
19 hours ago
ஆன்மிகம்
22 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago