மீன ராசி வாசகர்களே,
நல்லதையே செய்து நலிந்தவர்களே! இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டிலேயே சூரியனும் புதனும் நிற்கும் போது பிறப்பதால் உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். புதுப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. போட்டித் தேர்வுகளில் வெற்றி்பெற்று புது வேலையில் சேர்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசால் ஆதாயம் உண்டு. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். மனைவிவழியில் செல்வாக்குக் கூடும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை எடுத்து நடத்துவீர்கள்.
பேசாமல் இருந்த நண்பர்கள் வலிய வந்து பேசுவார்கள். பூர்வீகச் சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். ஆனால், இந்த 2019-ம் ஆண்டு உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் பிறப்பதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட போராட்டத்திற்குப் பின்பு முடியும். ஒரு பக்கம் பணம் வரும் என்றாலும் செலவுகள் இருமடங்காக இருந்து் கொண்டேயிருக்கும். வேலைச்சுமை அதிகரிக்கும். இரண்டாம் முயற்சியில் சில வேலைகள் முடியும்.
வீட்டில் குடிநீர்க் குழாய், கழிவு நீர்க் குழாய் அடைப்பு, மின்னணு, மின்சார சாதனப் பழுது வந்து செல்லும். மற்றவர்களை நம்பிப் பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
12.02.2019 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் கேது இருப்பதால் எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். ராகு 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும்.
13.02.2019 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு ராகு 4-ம் வீட்டிலும், கேது 10-லும் அமர்வதால் வேலைச்சுமை இருக்கும். வீண் பழி வரக்கூடும். தாயாருடன் வீண் விவாதம், அவருக்குக் கை, கால் வலி வந்து் போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நெருக்கடிகள், இடமாற்றங்கள் வந்து செல்லும். வாகனத்தின் ஓட்டுநர் உரிமத்தைச் சரியான நேரத்தில் புதுப்பிக்கத் தவறாதீர்கள். சின்ன சின்ன அபராதத் தொகை செலுத்த வேண்டி வரும்.
இந்தாண்டு முழுக்க சனிபகவான் 10-ம் வீட்டிலேயே நீடிப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். என்றாலும் உத்தியோகத்தில் அடிக்கடி இடமாற்றம், வீண்பழி வந்து செல்லும். நெருக்கமானவர்களிடம்கூட குடும்ப அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வீரியத்தைவிட காரியம்தான் பெரிது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். புது வேலை கிடைக்கும். புதுப் பதவிகளுக்கும், சிறப்புப் பொறுப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.
இந்த ஆண்டு பிறப்பு முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை குரு உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் நீடிப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். குறைந்த வட்டிக்குப் பணம் வாங்கி பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். நீண்ட நாட்களாகச் செல்ல நினைத்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.
உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்கிரமாவதாலும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை குரு 10-ம் வீட்டில் அமர்வதாலும் சிறுசிறு அவமானம், ஏமாற்றம் வந்து நீங்கும். பழைய பிரச்சினைகள், சிக்கல்கள் மீண்டும் வந்துவிடுமோ என்றெல்லாம் பயப்படுவீர்கள். சட்டத்துக்குப் புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம்.
உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயல்வார்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சில நேரங்களில் தர்மசங்கடமான சூழ்நிலைகளில் சிக்குவீர்கள்.
வியாபாரிகளே! லாபம் உண்டு. சில்லரை வியாபாரத்திலிருந்து சிலர் மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். பண உதவிகளும் கிடைக்கும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி கடன் தர வேண்டாம். ஸ்டேஷனரி, கல்விக் கூடங்கள், போர்டிங், லாஜிங், வகைகளால் ஆதாயமடைவீர்கள். வேலையாட்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவார்கள்.
பழைய நிறுவனங்களைக் காட்டிலும் புதிய நிறுவனங்களின் பொருட்களை விற்பதன் மூலமாக அதிக ஆதாயமடைவீர்கள். பங்கு தாரர்கள் சில நேரங்களில் முரண்டு பிடித்தாலும் இறுதியில் உங்களுடைய கருத்துகளை ஏற்றுக் கொள்வார்கள். வெளிநாட்டு வியாபாரம் லாபம் தரும். அதாவது ஏற்றுமதி இறக்குமதி வகைகளால் லாபம் உண்டு.
உத்தியோகஸ்தர்களே! உங்கள் கை ஓங்கும். அதிகாரிகள் பக்கபலமாக இருப்பார்கள். அவர்கள் உங்கள் ஆலோசனை களையும் ஏற்றுக்கொள்வார்கள். இயக்கம், சங்கம் இவற்றில் பெரிய பொறுப்பு, பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். என்றாலும் கேது 10-ல் அமர்வதால் அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள். நீங்கள் விடுப்பில் இருக்கும் நாட்களில் அலுவலகத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம். சில நாட்களில் சக ஊழியர்களின் விடுப்பால் கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டி வரும். இடமாற்றம் உண்டு. புதுச் சலுகைகளும் கிடைக்கும். சம்பள பாக்கியும் கைக்கு வரும்.
சென்னை, நங்கநல்லூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசர்வமங்களா தேவி உடனுறை ஸ்ரீதர்மலிங்கேஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வில்வமாலை அணிவித்து வணங்குங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
8 hours ago
ஆன்மிகம்
12 hours ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
10 days ago
ஆன்மிகம்
16 days ago
ஆன்மிகம்
18 days ago
ஆன்மிகம்
18 days ago
ஆன்மிகம்
18 days ago
ஆன்மிகம்
18 days ago
ஆன்மிகம்
19 days ago
ஆன்மிகம்
23 days ago
ஆன்மிகம்
23 days ago
ஆன்மிகம்
24 days ago