நிகழும் விளம்பி வருடம் மார்கழி மாதம் 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை தட்சிணாயனம் ஹேமந்த ருதுவில், கிருஷ்ண பட்சத்து, தசமி திதியில் சமநோக்கு கொண்ட சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, கன்னி லக்னத்திலும், அதிகண்டம் நாமயோகம், பவம் நாமகரணம், நேந்திரம் ஜுவனம் நிறைந்த அமிர்தயோக நன்னாளில் நள்ளிரவு 12 மணிக்கு 1.1.2019 ஆண்டு பிறக்கிறது. எண் ஜோதிடப்படி குரு பகவானின் ஆதிக்கத்தில் (2+0+1+9=3)இந்தாண்டு பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
இந்த வருடத்தின் லக்னம் மற்றும் வருடப்பிறப்பு நாளின் விதி எண் (5) உள்ளிட்ட பல அம்சங்கள் புதனின் ஆதிக்கத்தில் வருவதால் மக்களிடையே விழிப்புணர்வு பெருகும். ஜனநாயகம் தழைக்கும். பள்ளி மாணவர்களிடையே பொது அறிவு வளரும்.
விளையாட்டில் உலக அரங்கில் மாணவர்கள் சாதிப்பார்கள். செஸ், கிரிக்கெட், இறகுப் பந்து வகைகளில் இந்தியா பதக்கங்களை வெல்லும். தடம் மாறிச் செல்லும் கல்லூரி மாணவர்கள் திருந்துவார்கள். பாடத்திட்டம் நவீனமாகும்.
இண்டர்நெட், ஆன்லைன், வாட்ஸ் ஆப் பயன்பாடு அதிகமாகும். புதன், சனியுடன் சேர்ந்து காணப்படுவதால் மாணவர்களிடையே பாலுணர்வு அதிகரிக்கும். தவறான பழக்கவழக்கங்கள் வந்து விலகும். சிவில் சர்வீஸ் தேர்வுகளை அதிகமானவர்கள் எழுதுவார்கள். அரசாங்க வேலையை அதிகமானவர்கள் விரும்புவார்கள். இளைஞர்களிடையே சுய தொழில் ஆர்வமும் கணிசமாக அதிகமாகும். அரசியலில் முதியவர்களின் ஆதிக்கம் குறைந்து இளைஞர்களின் பங்களிப்பு கூடும்.
மிதுன ராசியில் ராகு வந்து அமர்வதால் சாப்ட்வேர் துறையில் மீண்டும் வேலை வாய்ப்பு அதிகமாகும். கம்ப்யூட்டர் இன்ஜினீயர்கள் செழிப்படைவார்கள். ஆனால் பாஸ்வேர்டு திருடும் சைபர்குற்றமும் அதிகமாகும்.
பெட்ரோல், டீசல், விலை தொடர்ந்து குறையும், தங்கத்தின் விலையும் குறையும். தனுசில் சனியும் கேதுவும் இணைவதால் பொருளாதாரம் இறங்குமுகமாகும். அமெரிக்க டாலர் சரியும். பணவீக்கம் அதிகமாகும். மழைப்பொழிவு, உணவு உற்பத்தி குறையும். விவசாயிகள் நிம்மதி இழந்து தவிப்பார்கள்.
வருடம் பிறக்கும்போது சூரியனும் சனியும் ஒன்றாக இருப்பதால் அரசியல் தலைவர்கள் கண்ணியம் தவறி நடந்து கொள்வார்கள். பழிவாங்கும் போக்கு அதிகரிக்கும். நீதிமன்றத் தீர்ப்பு, மதநல்லிணக்கம் குறையும். கோவா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அரசியல் நெருக்கடிகள் ஏற்படும். மகாராஷ்ட்ரா மாநிலம் மீண்டும் ஆபத்தைச் சந்திக்க நேரிடும். ராணுவ ரகசியங்கள் கசியும். மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும், மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
பிப்ரவரி மாதம் முதல் மதவிவகாரங்கள் தீவிரமாகும். 05.05.2019 முதல் 09.08.2019 வரை உள்ள காலகட்டத்தில் நாடெங்கும் இன, மத மோதல்கள், தீவிரவாதிகளால் அரசியல் தலைவர்களுக்கு ஆபத்து, மத்தியில் ஆட்சி அமைப்பதில் இழுபறி, பிரதம மந்திரிக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படும். இக்காலகட்டத்தில் நிலநடுக்கங்கள் மற்றும் புயல்களால் சேதம் அதிகமாகும். பாலியல், கிரிமினல் குற்றங்கள், வாகன விபத்துகள் கூடுதலாகும்.
தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய சேலம், தர்மபுரி, கோவை, கிருஷ்ணகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இயற்கைச் சீற்றங்கள் அதிகரிக்கும். டெல்டா மாவட்டங்களில் பதற்றம் நீடிக்கும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
7 hours ago
ஆன்மிகம்
21 hours ago
ஆன்மிகம்
23 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago