நாளை வைகுண்ட ஏகாதசி. மிக அற்புதமான நன்னாள். இந்தநாளில் விரதம் இருப்பதும் திருமாலை ஸேவிப்பதும் மிகுந்த புண்ணியத்தையும் பலன்களையும் தந்தருளும் என்கிறது சாஸ்திரம்.
இந்தநாளில் ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட ஆலயங்களில், பரமபத வாசல் திறப்பு எனும் வைபவம் நடைபெறும். மேலும் பரமபத வாசலில் நுழைந்து பெருமாளை தரிசித்து வணங்கினால், பிறப்பற்ற நிலை நிச்சயம் என்றும் மோட்ச கதி அடைவது உறுதி என்றும் சொல்கிறது விஷ்ணு புராணம்.
அதென்ன பரமபத வாசல்?
பரம என்றால் பரமன். பரந்தாமன். கடவுள் என்று அர்த்தம். பதம் என்பது இறைவனின் திருவடி என்பதைக் குறிக்கும் பகவானின் திருப்பாதங்களைக் குறிக்கும் சொல்லே பதம் என்பது!
இறைவனின் திருவடியைக் காண்பதற்காகத் திறக்கப்படுவதால் பரமபத வாசல் என்றானது.
சரி… ஏகாதசி என்றால்?
ஏகம் என்றால் ஒன்று. தசம் என்றால் பத்து. ஏகாதசி என்பது பதினொன்றைக் குறிக்கும்.பெளர்ணமியில் இருந்து வருகிற 11ம் நாள், அமாவாசையில் இருந்து வருகிற 11ம் நாள் ஏகாதசி.
மோட்சம் தரும் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி. இதனை நித்திய ஏகாதசி என்று சொல்லுவார்கள். சகல ஐஸ்வர்யம் தரும் ஏகாதசியும் இந்த வைகுண்ட ஏகாதசிதான் என்று விளக்குகிறார் மதுரை அழகர்கோவில் அம்பி பட்டாச்சார்யர்.
ஆகவே நாளைய வைகுண்ட ஏகாதசி நாளில், காலையில் 3 முதல் 4 மணிக்குள் பரமபத வாசல் திறக்கப்படும். அப்போது ஆலயம் சென்று பரந்தாமனைத் தரிசித்து அவனுடைய பேரருளைப் பெறுவோம்.இம்மையிலும் மறுமையிலும் நம்மை சகல செளபாக்கியங்களுடன் வாழச் செய்வார் திருமால்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
19 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago